20 பழமொழிகள் | 20 Palamoli in Tamil

Advertisement

புதிய பழமொழிகள் | Proverbs in Tamil

பொதுநலம் வாசகர் நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் பழமொழிகளை பற்றி பார்க்க போகிறோம். பழமொழி என்பது நம் முன்னோர்கள் நாம் செய்யும் செயல்களை வைத்து ஓர் இரு வரிகளில் புரிய வைக்கும் வகையில் பழமொழிகளை சொல்லிவைத்து விட்டு சென்றிருக்கிறார்கள். அதில் சில பழமொழி சிரிக்க வைக்கும் வகையிலும், சிந்திக்க வைக்கும் வகையிலும் இருக்கும். இன்று இந்த பதிவில் பழமொழிகள் மற்றும் இப்போது இருக்கும் புதிய பழமொழிகளையும் பற்றி படித்து தெரிந்துகொள்வோம்.

தமிழ் பழமொழிகளின் பட்டியல்

பழமொழிகள் தமிழ்:

தமிழ் கிராமத்து பழமொழிகள்
அடக்கமே பெண்ணுக்கு அழகு
எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா
கண்டதே காட்சி கொண்டதே கோலம்
ஆரால் கேடு, வாயால் கேடு
செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்
ஐந்திலே வளையாதது, ஐம்பதிலே வளையுமா?
தனி மரம் தோப்பாகாது
எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு
மாரடித்த கூலி மடி மேலே
இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்
குனியக் குனியக் குட்டுவான், குனிந்தவன் நிமிர்ந்தால் குட்டினவன் ஓடுவான்
கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
குரங்கின் கைப் பூமாலை
கொல்லைக்குப் பல்லி , குடிக்குச் சகுனி
பூனை கொன்ற பாவம் உன்னோடு , வெல்லம் தின்ற பாவம் என்னோடு
அஞ்சும் மூன்றும் உண்டானால் , அறியாப்பெண்ணும் சமைக்கும்
நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான்
கதிரவன் சிலரை காயேன் என்குமோ?
கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்
கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு
தேன் ஒழுக பேசி , தெருவழியே விடுகிறது
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்
அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்
 இட்டவர்கள், தொட்டவர்கள் கெட்டவர்கள், இப்போது வந்தவர்கள் நல்லவர்கள்.
ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
காற்றில்லாமல் தூசி பறக்குமா?
ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது
அறிய அறியக் கெடுவார் உண்டா?
மாடு கெட்டால் தேடலாம், மனிதர் கெட்டால் தேடலாமா?
தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும்
நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்
நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை

புதிய பழமொழிகள்:

10 பழமொழிகள்
விழுந்த இடத்தை பார்க்காதே, வலுக்கிய இடத்தை கவனி
எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும்
ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வரும்
சிகரெட் விரலளவு சீக்கு உடலளவு
சைக்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை
தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும்
முடியுள்ள போதே சீவிக்கொள்
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.
பழகின செறுப்பு காலை கடிக்காது
தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement