குதிரை மசால் பற்றிய சில குறிப்புகள்..! | Alfalfa Information in Tamil

Advertisement

Alfalfa in Tamil | குதிரை மசால் பற்றிய தகவல்..!

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது குதிரை மசால் பற்றிய சில தகவல் தான். குதிரை மசாலா அது என்ன என்று தானே சிந்திக்கிறீர்கள் அது வேறு ஒன்றும் இல்லை ஒரு தீவன தாவரம் ஆகும். ஆனால் இதன் விதைகளை முளைக்கட்டி வைத்து சாப்பிடுவதினால் மனிதர்களின் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. அதனால் இதனை பற்றிய முழு விவரங்களையும் பற்றி இன்றைய பதிவில் விரிவாக காணலாம்.

Alfalfa Plant Information in Tamil:

Alfalfa plant in tamil

குதிரை மசால் (Alfalfa) என்பது பபேசியே குடும்பத்தைச் சார்ந்த ஒரு தாவரம் ஆகும். இதன் தாவரவியல் பெயர் மெடிகேகா சட்டைவா (Medicago sativa) என்பதாகும். இது ஒரு பசுந்தழை தாவரமாக உலகின் பல நாடுகளில் பயிரிடப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கோயம்புத்தூர் பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. இது ஒரு மிதமான வெப்ப காலநிலை பயிராகும். மேலும் இது ஒரு வற்றாத தீவன பயிராகும்.

இதனை ஒரு முறை விதைத்தால் 4 முதல் 8 ஆண்டுகளுக்கு வாழ்கிறது. ஆனால் பல்வேறு காலநிலையை பொறுத்து 20 ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியதாகவும் உள்ளது.

பிறப்பிடம் மற்றும் வேறுபெயர்கள்:

Alfalfa seeds in tamil

 

குதிரை மசால் தென்-மத்திய ஆசியாவில் தோன்றியதாக அறியப்படுகிறது. மேலும் இது முதன் முதலில் பண்டைய ஈரானில் பயிரிடப்பட்டது என்றும் அறியப்பட்டுள்ளது. மேலும் இந்த குதிரை மசால் கி.மு. 490 -இல் பாரசீகர்கள் கிரேக்கப் பிரதேசத்தின் மீது படையெடுத்தபோது கிரேக்கத்திற்கு அறிமுகப்படுத்தபட்டுள்ளது என்றும் அறியப்படுகிறது.

Alfalfa என்ற பெயர் வட அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் லூசெர்ன் என்ற பெயர் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பெயராகும்.

ஊட்டச்சத்துக்கள்:

Alfalfa in Tamil

இந்த குதிரை மசாலில் சோயா பீன்ஸ் போன்ற மற்ற லெகூம் தாவரங்களில் இருப்பது போல குதிரை மசாலிலும் தாவர ஈஸ்ட்ரோஜன்கள் உள்ளன.

100 கிராம் குதிரை மசாலில்

  • 23 கிலோகலோரி
  • 2.1 கிராம் கார்போஹைட்ரேட்
  • 4 கிராம் புரதம் 
  • 0.7 கிராம் கொழுப்பு 
  • 1.9 கிராம் ஃபைபர் (Fiber)
  • 92.8 கிராம் நீர்ச்சத்து 
  • 32 மி.கி கால்சியம்
  • 27 மி.கி மக்னீசியம் 
  • 79 மி.கி பொட்டாசியம் 
  • 70 மி.கி பாஸ்பரஸ் 
  • 8.2 மி.கி வைட்டமின் சி ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

பயன்கள்: 

Alfalfa plant information in tamil

  1. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  2. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும்.
  3. கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  4. டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கிறது.
  5. புற்றுநோய் வருவதை தடுக்கிறது.
  6. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  7. அழற்சி வருவதை தடுக்கிறது.
  8. ஆக்ஸிஜனேற்றத்திற்கு உதவுகிறது.
  9. உடலின் வைட்டமின் சத்துக்களை அதிகரிக்கிறது.
  10. உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது.

வசம்பு பற்றிய சில குறிப்புகள்

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement