அமெரிக்கா அரசு பள்ளி எப்படி இருக்கும் தெரியுமா.?

Advertisement

அமெரிக்கா அரசு பள்ளி

இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் தான் தெரித்துக்கொள்ள போகிறோம். நம் நாட்டில் எப்படி பள்ளிகள் நடைபெறுகிறது என்று தெரியும். அதிலேயே அரசு பள்ளி எப்படி நடக்கும் தனியார் பள்ளி எப்படி நடக்கும் என்று தெரியும். இரண்டு பள்ளியும் வித்தியாசம் அவ்வளவு இருக்காது. ஆனால் வெளிநாட்டில் பள்ளிகள் எப்படி நடக்கும் என்று அறிந்து உள்ளீர்களா.! இல்லையென்றால் இந்த பதிவின் மூலம் அமெரிக்கா அரசு பள்ளி எப்படி நடக்கும் என்று தெரிந்துகொள்வோம் வாங்க..

இதையும் படியுங்கள் ⇒ அமெரிக்காவின் தேசிய விளையாட்டு

அரசு பள்ளி வகைகள்:

அமெரிக்காவில் உள்ள அரசு பள்ளி மூன்று வகைகளாக உள்ளன. அவை:

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ஆரம்ப நிலை(elementary school) பள்ளியில் படிப்பார்கள்.

6 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் நடுநிலை பள்ளியில்(middle school) பள்ளியில் படிப்பார்கள்.

9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் உயர் நிலை பள்ளியில்(high school) பள்ளியில் படிப்பார்கள்.

Middle School System in usa in Tamil:

பள்ளிக்கு வரும் பார்வையாளர்கள் அனைவரும் Permission கேட்டு தான் வர வேண்டும். வாசலிலே ஒரு அலைபேசி இருக்கும் அதில் permission கேட்டு தான் வர வேண்டும்.

அரசு பள்ளி சீருடை:

அமெரிக்கா அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை( Uniform) கிடையாது. color dress அணிந்து வருவார்கள்.

வகுப்பறை கல்வி:

வகுப்பறையில் ஒரு பாடம் முடிந்ததும் இன்னொரு பாட வகுப்பிற்கு மாணவர்கள் தான் இன்னொரு வகுப்பறைக்கு செல்வார்கள். ஆசிரியர்கள் அவர்கள் வகுப்பிலே இருப்பார்கள்.

பள்ளி பையை அவர்களுக்கு என்று அறை இருக்கும் அதில் தான் வைத்திருப்பார்கள். அதில் முதல் மூன்று Peroid -க்கு உள்ள பாட புத்தங்களை மட்டும் தான் எடுத்து செல்வார்கள். அடுத்த பாட Period -க்கு  மறுபடியும் அறைக்கு வந்து எடுத்து செல்வார்கள்.

பள்ளியிலே மற்ற மொழிகளையும் சொல்லி கொடுப்பார்கள். sports -கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். Inter stadium பள்ளியிலே இருக்கிறது.  

பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு படிப்புக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் Extracurricular activities -க்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

பள்ளியில் மதிய உணவு சாப்பிடுவதற்கு தனி அறை உள்ளது. அதில் சென்று தான் சாப்பிட வேண்டும். பள்ளி உள்பக்கத்திலே canteen வசதி உள்ளது. உணவு எடுக்காமல் வருபவர்கள் உணவை பணம் கொடுத்து வாங்கி கொள்ள வேண்டும்.

அமெரிக்கா பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நேர்மையாகவும், தப்பு செய்தால் எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும் என்று ஆசிரியர்கள் நினைப்பார்கள்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement