தாய் கனவில் வந்தால் என்ன பலன் | Thai Kanavil Vanthal Enna Palan
அம்மா கனவில் வந்தால்: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம்-ல் அம்மா கனவில் வந்தால் என்ன பலன் என்று தெரிந்துகொள்ளுவோம். எல்லோருக்கும் மிக முக்கியமானவர்கள் யாரென்றால் தாய், தந்தையர் தான். அவர்கள் சில நேரத்தில் நம்முடைய கனவில் வருவார்கள். சிலருக்கு இறந்த தன்னுடைய அம்மா அடிக்கடி கனவில் வருவது வழக்கம்.
இறந்த அம்மா கனவில் வந்தால் அவர்கள் எப்போதும் உங்கள் கூடவே இருக்கிறார்கள் என்று அர்த்தம். எந்த ஒரு விசயத்திலும் நீங்கள் தளர்வு இல்லாமல் உண்மையான பாதையில் செல்ல வேண்டும் என்று உணர்த்துகிறது. சரி இப்போது கனவில் அம்மா வந்தால் என்ன பலன் என்று படித்து தெரிந்துக்கொள்ளுவோம்.
அம்மா கவிதைகள் |
கனவில் அம்மாவை பார்த்தால் என்ன பலன்:
அம்மா கனவில் வந்தால் என்ன பலன்: கனவில் உங்களுடைய அம்மாவை பார்த்தால் நீங்கள் செய்யும் செயல்களில் கவனம் இல்லாமல் செய்கிறீர்கள் என்று அர்த்தம்.
கனவில் அம்மாவிடம் பேசுவது போல் கண்டால்:
அம்மாவிடம் பேசுவது போன்று கனவில் கண்டால் உங்களிடம் அம்மா ஏதோ ஒரு விஷயத்திற்காக கஷ்டப்படுகிறார்கள் என்று அர்த்தம். அம்மாவிற்கு பிடிக்காத காரியத்தினை செய்வதை தவிர்க்கவும்.
அம்மா பயத்துடன் பதறி அழைப்பது போல கனவு கண்டால்:
கனவில் உங்களை அம்மா பதற்றத்துடன் அழைப்பது போல் கண்டால் தப்பான வழியில் பயணிக்கிறீர்கள் என்று அர்த்தம்.
அம்மா இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்:
கனவில் அம்மா இறந்தது போல் வந்தால் பல நாட்களாக இருந்த மனவருத்தம் அனைத்தும் நீங்கும்.
கனவில் உங்களிடம் அம்மா பேசுவது போல் கண்டால் என்ன பலன்:
கனவில் உங்களிடம் அம்மா தொடர்ந்து பேசுவது போல் கண்டால் நீங்கள் செய்து கொண்டிருக்கும் செயல்களில் ஏற்படும் தடங்கல், பிரச்சனைகளை தீர்க்க சொல்லும் ரகசியம்.
கனவில் உங்கள் அம்மா வடிவில் பேசுவது உங்கள் உள்ளுணர்வாக கூட இருக்கலாம். இது உங்களுடைய எதிர்காலத்தினை குறித்து சொல்வதாக கூட இருக்கலாம்.
அம்மாவுடன் சேர்ந்து சாப்பிடுவது போல் கனவு கண்டால்:
கனவில் அம்மாவுடன் சேர்ந்து சாப்பிடுவது போல் கண்டால் நீங்கள் செய்கின்ற விஷயத்தில் நன்மை தரக்கூடிய முடிவினை எடுக்கவில்லை என்று அர்த்தம். இந்த கனவானது எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளையும் கவனத்துடன் எடுக்க வேண்டும் என்று நமக்கு உணர்த்துகிறது.
அம்மாவின் வீட்டில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்:
கனவில் அம்மாவின் வீட்டில் இருப்பது போல் வந்தால் நீங்கள் இருக்கும் சூழ்நிலைகளில் இருந்து சில பாடத்தினை கற்றுக்கொள்ள வேண்டும் என்று அர்த்தம். வாழ்க்கையில் நிறைய தவறான முடிவுகளை எடுக்குறீர்கள் என்று அர்த்தம்.
அம்மா கோபப்படுவது போல் கனவு கண்டால் என்ன பலன்:
கனவில் அம்மா உங்களிடம் கோபத்தினை காட்டுவது போல் கண்டால் விரைவில் உங்களுக்கு ஏற்படும் துரதிர்ஷ்டம் மற்றும் ஏமாற்றத்தின் அறிகுறியாக இந்த கனவு உணர்த்துகிறது. செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி இல்லாமல் தோல்வியிலையே முடியும். வாழ்க்கையில் தொடர்ச்சியாக பின்னடைவும், கஷ்டங்களும் வந்துகொண்டே இருக்கும்.
அம்மா உங்களிடம் விரக்தியுடன் இருப்பது போல் கனவு கண்டால்:
உங்களிடம் அம்மா விரக்தியுடன் இருப்பது போல் கனவில் கண்டால் சில முக்கியமான விஷயத்தில் சரியாக முடிவு எடுக்க முடியாமல் தவித்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
அம்மாவை எரிச்சலுடன் பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்:
நீங்கள் அம்மாவை எரிச்சலுடன் பார்ப்பது போல் கனவு கண்டால் நீங்கள் ஏதோ தவறு செய்கிறீர்கள் என்று அர்த்தமாகும்.
கனவில் அம்மா சந்தோஷமாக இருப்பது போல் கண்டால் என்ன பலன்:
அம்மா சந்தோசமாக இருப்பது போல் கனவில் கண்டால் நல்ல சகுனத்தை குறிக்கிறது. அனைத்து சிக்கல்களையும் கடந்து வெற்றி அடைவீர்கள். மேலும் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் மற்றும் யோசனைகள் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
அம்மா உங்களை பார்க்க உங்கள் வீட்டிற்கு வருவது போல் கனவு கண்டால்:
உங்களை பார்க்க உங்களுடைய வீட்டிற்கு அம்மா வருவது போல் கனவு கண்டால் நீங்கள் செய்யும் முயற்சிகளில் வெற்றியின் அறிகுறி. மனதில் நினைத்த காரியத்தினை உடனே செய்யலாம். எந்த செயல் செய்தாலும் தோல்வி நீங்கி வெற்றி கிடைக்கும்.
அம்மாவிடம் சண்டை போடுவது போல் கனவு கண்டால்:
கனவில் அம்மாவிடம் சண்டை போடுவது போல் கண்டால் அது உங்கள் வாழ்க்கையில் கடினமான காலம் தொடங்கப்போகிறது என அர்த்தம். இது துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் அல்லது ஏதேனும் விபத்துக்களின் அறிகுறியாக கூட இருக்கலாம். இது நீங்கள் செய்யும் தவறினாலேயே கூட இருக்கலாம் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
கனவில் அம்மா அழுவது போல் கண்டால் என்ன பலன்:
அம்மா உங்கள் கனவில் அழுவது போல் கண்டால் உங்களுக்கு உடல்நலனில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. சில நல்ல வாய்ப்புகள் உங்களிடமிருந்து விலகி செல்லலாம். குடும்பத்தில் சில பிரச்சனைகள், கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.
கனவில் அம்மாவிடம் அழுவது போல் கண்டால் என்ன பலன்:
அம்மாவிடம் அழுவது போல் கனவில் கண்டால் நீங்கள் இருக்கும் சூழ்நிலைகளை கண்டு அச்சம் கொண்டு பாதுகாப்பு இல்லாதது போல் உணர்கிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் விரும்பும் நபரிடமிருந்து ஆதரவு கிடைக்க வேண்டும் என நினைக்கிறீர்கள். நீங்கள் மிகவும் அக்கறை கொண்ட ஒருவரால் நிராகரிக்கப்படுவீர்கள் என அர்த்தம்.
அன்னையர் தின வாழ்த்துக்கள் |
அம்மா இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்:
அம்மா இறந்தது போல் கனவு கண்டால் நீங்கள் செய்கின்ற செயலில் அலட்சியம் இல்லாமல் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும் என்று அர்த்தம். நடக்க போகிற பிரச்சனைகளை தீர்க்க முடியாமல் தவிப்பீர்கள் என அர்த்தம்.
அம்மா கனவில் முத்தமிடுவது போல் கண்டால் என்ன பலன்:
கனவில் உங்களை அம்மா முத்தமிடுவது போல் கண்டால் சமூகத்தில் உங்களுக்கு நல்ல மரியாதை கிடைக்க தொடங்கும். உங்களுக்கு நெருக்கமானவர்களால் நீங்கள் மதிக்கப்பட தொடங்குவீர்கள் என அர்த்தம்.
கனவில் அம்மா நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பது போல் கண்டால் என்ன பலன்:
அம்மா கணவாயில் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பது போல் கண்டால் உங்களுக்கு சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருந்து ஆதரவுகள் கிடைத்து கொண்டே இருக்கும் என அர்த்தம். நீங்கள் நினைக்கும் நேரத்தில் ஏதாவது ஒரு இடத்தில் இருந்து உங்களை தேடி நிறைய உதவிகள் வந்தடையும்.
அம்மா கனவில் உங்களிடம் வருத்தப்படுவது போல் கண்டால் என்ன பலன்:
உங்களிடம் அம்மா கனவில் வருத்தப்படுவது போல் கண்டால் நீங்கள் செய்யும் செயல்களில் ஏதோ தடைகள் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |