பாரதியார் பற்றிய குறிப்புகள் | Bharathiyar Siru Kurippu in Tamil
இந்தியாவின் சுதந்திர போராட்ட களத்தில் தன்னுடைய கருத்துக்கள் மூலம் மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர் பாரதியார். உயிருள்ள வரை மறக்க முடியாத கவிஞர். நாட்டில் உள்ள மக்களின் மீது அதிகம் ஈடுபாடும், தமிழ்மொழி மீது பற்றும் கொண்டவர் பாரதியார். தேசிய கவி என போற்றப்படும் மாபெரும் புரட்சி வீரர் மகாகவி பாரதியார் பற்றிய ஒரு சிறு குறிப்பை இந்த தொகுப்பில் படித்தறிவோம் வாங்க.
பாரதியார் குறிப்பு:
Bharathiyar Kurippu in Tamil
பெயர்
பாரதியார்
இயற்பெயர்
சுப்பிரமணியம்
பெற்றோர் பெயர்
சின்னசாமி ஐயர், இலக்குமி அம்மாள்
மனைவி பெயர்
செல்லம்மாள்
குழந்தைகள்
தங்கம்மாள், சகுந்தலா
பாரதியார் பிறந்த தேதி
11.12.1882
பாரதியார் மறைந்த ஆண்டு
11.09.1921
பாரதியார் பிறந்த மாவட்டம்
தூத்துக்குடி
பாரதியார் பிறந்த ஊர்
எட்டயபுரம்
பாரதிக்கு மகாகவி என பட்டம் கொடுத்தவர்
வ.ராமசாமி அய்யங்கார்
பாரதி என்பதன் பொருள்
கலைமகள்
பாரதியின் முதல் பாடல்
தனிமை இரக்கம். வெளியிட்ட பத்திரிக்கை விவேக பானு (மதுரை)
பாரதியார் வேறு பெயர்கள்:
Bharathiyar Siru Kurippu in Tamil
காளிதாசன்
சக்திதாசன்
சாவித்திரி
ஷெல்லிதாசன்
நித்திய தீரர்
உத்தம தேசாபிமானி
பாரதியார் சிறப்பு பெயர்கள் யாவை?
Bharathiyar Kurippu in Tamil
மகாகவி
மக்கள் கவிஞர்
வரககவி
தேசியக்கவி
விடுதலைக்கவி
அமரக்கவி
முன்னறி புலவன்
தமிழ்க்கவி
உலககவி
தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி
பாட்டுக்கொரு புலவன் பாரதி
நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா
காடு கமழும் கற்பூரச் சொற்கோ
புதுக்கவிதையின் முன்னோடி
பைந்தமிழ் தேர்பாகன்
சிந்துக்குத் தந்தை
பாரதியார் பாரதி பட்டம் பெற்ற வயது:
பாரதிக்கு 7 வயது இருக்கும் போது கவிதை எழுத தொடங்கினார். 11 வயது இருக்கும் போது கவிபாடும் ஆற்றலை பெற்று பாரதி எனும் பட்டத்தை பெற்றார்.
பாரதியார் ஆசிரியராக பணியாற்றிய பள்ளி:
மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி (1904)
பாரதியார் பற்றிய குறிப்புகள்:
இந்தியா என்ற வாரப் பத்திரிக்கையின் மூலம் தனது அரசியல் கருத்துக்களை மக்களிடம் பரப்பினார்.
இவர் சுதேசமித்திரன் பத்திரிக்கையில் உதவி ஆசிரியராகவும், சக்கரவர்த்தினி பத்திரிக்கையில் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
பாரதியாரின் நினைவுகளை போற்றும் வகையில் எட்டயபுரத்தில் அவர் வசித்து வந்த இல்லம் மற்றும் திருவல்லிக்கேணியில் வாழ்ந்த இல்லமும் நினைவு இல்லமாக உள்ளது.