குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் | Child Marriage Act in Tamil

Advertisement

குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் தண்டனைகள்

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் என்றால் என்ன?, குழந்தை திருமணம் செய்து கொள்பவர்களுக்கு என்ன தண்டனை, குழந்தை திருமணம் செய்து வைப்பவர்களுக்கு என்ன தண்டனை, திருமணம் செய்யும் ஆண் மற்றும் பெண்ணிற்கு திருமண வயது எவ்வளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது போன்ற தகவல்களை இங்கு நாம் படித்தறியலாம் வாங்க.

குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் 2006:

குழந்தைத் திருமண தடைச் சட்டம் 1929 ஆம் ஆண்டு, ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே இயற்றப்பட்டது. இருப்பினும் இந்திய கலாசாரம் மற்றும் பண்பாடுக்கு எதிரான எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது, என அப்போதைய இங்கிலாந்து அரசு உத்தரவிட்டதன் காரணமாக, அந்தச் சட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை.

அதன் பின், 1978 இல் குழந்தைத் திருமண தடைச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அதன்படி, குழந்தைத் திருமணம் செய்து வைப்பவர்களுக்கு 15 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு வந்தது. குற்றம் புரிவோருக்கு 15 நாள் என்பது பெரிய தண்டனையாக இல்லை என்பதால், குற்றம் செய்வோரின் எண்ணிக்கையும் குறையவில்லை. இதனால், இந்தச் சட்டத்தில் மீண்டும் 2006 இல் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

அதன்படி குழந்தைத் திருமண தடைச் சட்டத்தின் பிரிவுகள் 9,10, 11 ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதில் திருமணம் நடத்தி வைப்பவர்கள் மட்டுமின்றி, உறவினர்கள், திருமண நிகழ்ச்சியைப் பார்த்து தடுக்க முயற்சிக்காதவர்கள் என அனைவருக்கும் தண்டனைகள் வழங்கப்படும்.

இந்தச் சட்டத்தின் கீழ் பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்ய இயலாது. குழந்தைத் திருமணம் நடைபெறுவதாக தகவல் கிடைத்தாலே, காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதற்கு குற்றவியல் நடுவர்கள் உத்தரவிடலாம்.

மேலும் குழந்தைத் திருமணம் குறித்து தகவலோ, புகாரோ வழங்கப்பட்டால், போலீஸார் தாமதமின்றி வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அதேபோல ஆட்சியர், வட்டாட்சியர்களுக்கும் போலீஸார் உதவியுடன் குழந்தைத் திருமணத்தினை தடுத்து நிறுத்த அதிகாரம் உள்ளது.

திருமணத்தை தடுத்து நிறுத்திய பின், அந்தப் பெண் குழந்தையை எங்கே தங்க வைத்துப் பராமரிப்பது என்பதை குற்றவியல் நடுவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இந்தச் சட்டங்களைப் பயன்படுத்தி, இனிவரும் காலங்களில் குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்துவதே இந்த சட்டத்தின் நோக்கமாகும்.

குழந்தை திருமணம் நடக்க முக்கிய காரணம்:

  • பொதுவாக குழந்தை திருமணம் எதனால் ஏற்படுகிறது என்றால் குடும்ப சூழ்நிலை காரணமாகவும், காதல் விவகாரம் காரணமாகவும் நடத்திவைக்கப்படுகிறது.

எந்த வயதில் திருமணம் செய்து கொண்டால் குழந்தை திருமணம் என கருதப்டுக்கிறது?

  • 18 வயதுக்கு குறைவாக உள்ள ஒரு பெண்ணும், 21 வயதுக்கு குறைவாக உள்ள ஒரு ஆணும் திருமணம் செய்து கொண்டால் அது குழந்தை திருமணம் என கருதப்படுகிறது.

பெண் சிறு வயதில் திருமணம் செய்து கொண்டால் எதுமாதிர்யான பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள்?

  • குழந்தை பேரு பெரும் காலத்தில் குழந்தையோ அல்லது தாயோ இறந்து போதல்.
  • குழந்தை ஊனமாக பிறத்தல்.
  • அடிக்கடி கருச்சிதைவு அடைவது.
  • அந்த பெண்ணின் உள்ளுறுப்புகள் பலமிழந்து போவது.
  • குறிப்பாக அந்த குழந்தையின் கல்வி தடைபடுவது.
  • குடும்ப வன்முறைக்கும் அந்த குழந்தை ஆளாக்கப்படுவது.

Child Marriage Act 2006 in Tamil:

குழந்தை திருமண தடுப்புச் சட்டம் 2006-யின் படி என்ன தண்டனைகள் வழங்கப்படுகிறது என்று தெரிந்து கொள்வோம். இந்த சட்டம் இந்தியா முழுவதும் நடைபெறும் குழந்தை திருமணத்திற்கு பொருந்தும். இந்த சட்டத்தின் படி 21 வயது நிறைந்த ஆண் 18 வயது குறைவான ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டால் சட்டப்படி அந்த ஆண் தண்டிக்கப்படுவார். அவர்களுக்கு என்ன மாதிரியான தண்டனைகள் வழங்கப்படும் என்றால் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, 1 லட்சம் வரை அபராதம் வழங்கப்படும். மேலும் இந்த குழந்தை திருமணத்தை செய்து வைக்கும் நபர்களுக்கும் இந்த தண்டை வழங்கப்படுகிறது.

நம் கண்ணுக்கு முன் ஒரு பெண்ணுக்கு குழந்தை திருமணம் நடக்கிறது என்றாலோ அல்லது குழந்தை திருமணம் நடத்திவைக்க ஏதேனும் ஏற்பாடுகள் நடக்கிறது என்றால் உண்டடியாக அதனை யாரு வேண்டுமானாலும் காவல் துறையிடம் புகார் தெரிவிக்கலாம். அல்லது 1098 Helpline எண்ணினை பயன்படுத்தி தொலைபேசி மூலமாகவும் தங்களது புகாரை தெரிவிக்கலாம்.

போக்சோ சட்டம் என்றால் என்ன? | POCSO Act in Tamil

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement