வீட்டிலியே மிக சுலபமாக Coconut Oil Soap செய்வது எப்படி தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

Coconut Milk Soap Making in Tamil

தேங்காய் எண்ணெய் குளியல் சோப் செய்முறை | Coconut Milk Soap Making in Tamil

இன்றிய கால கட்டத்தில் அனைவருமே ஹெர்பல் பொருட்களை தான் அதிகம் விரும்புகின்றன.. அதாவது முகத்திற்கு பயன்படுத்தும் கிரமாக இருந்தாலும் சரி, கூந்தலுக்கு பயன்படுத்தும் ஷாம்பு அல்லது எண்ணெயாக இருந்தாலும் சரி, உடலுக்கு பயன்படுத்தும் சோப்பாக இருந்தாலும் சரி அனைத்துமே ஹெர்பல் Products ஆக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றன. அந்த வகையில் நாம் பார்க்க இருப்பது வீட்டிலேயே மிக சுலபமாக தேங்காய் எண்ணெய் குளியல் சோப் செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்க போகிறோம். அதன் செய்முறை விளக்கத்தை தெரிந்துகொள்ள தொடர்ந்து பதிவை படியுங்கள்.

தேவையான பொருட்கள்:

  1. தண்ணீர் – 2 1/2 கப்
  2. காஸ்ட்டிக் சோடா – ஒரு கப்
  3. தேங்காய் எண்ணெய் – 5 1/2 கப்
  4. Beeswax – ஒரு கப்
  5. கலர் பொடி – உங்களுக்கு பிடித்த நிறத்தில் கலர் தேர்வு செய்துகொள்ளலாம், விருப்பம் இல்லையென்றால் சேர்க்காமலும் இருக்கலாம்.
  6. ரோஸ் வாட்டர் – ஒரு மூடி
  7. Rose Garden Fragrance oil – ஒரு ஸ்பூன்
  8. Rose Aroma oil – ஒரு ஸ்பூன்
  9. Soap Mold

தேங்காய் எண்ணெய் சோப் செய்முறை:

ஒரு அகலமான பவுலை எடுத்துக்கொள்ளுங்கள் அவகற்றில் 2 1/2 கப் தண்ணீர் ஊற்றவும், பின் தன்னுடன் தண்ணீர் அளந்த கப்பில் ஒரு கப் காஸ்ட்டிக் சோடாவை சேர்த்து கரண்டியை பயன்படுத்தி நன்றாக கலந்து விடவும்.

காஸ்ட்டிக் சோடாவை சேர்க்கும்போது தண்ணீர் சூடாக மாறும் ஆகவே நீங்கள் கரண்டியை பயன்படுவது மிகவும் சிறந்தது காஸ்ட்டிக் சோடா நன்கு கரையும் வரை நன்றாக கலந்துவிடவும்.

காஸ்ட்டிக் சோடா கரைந்த பிறகு 5 1/2 கப் தேங்காய் எண்ணெய்யை அதனுடன் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்துகொள்ளுங்கள்.

அடுத்ததாக Beeswax ஒரு கப் எடுத்து நன்றாக உருக்கவும், உருக்கிய Beeswax-ஐ அந்த கலவையுடன் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். அதாவது Hand Beater-ஐ பயன்படுத்தி நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.

அதாவது இந்த கலவையை 10 நிமிடம் வரை நன்றாக Hand Beater-ஐ பயன்படுத்தி மிக்ஸ் செய்யுங்கள் இப்படி மிக்ஸ் செய்யும்பொழுது கலவையானது நன்கு கொழகொழப்பாக மாறும்.

அடுத்ததாக இந்த கலவையுடன் கலர் பவுடர், ரோஸ் வாட்டர், Rose Garden Fragrance oil மற்றும் Rose Aroma oil ஆகியவற்றை சேர்த்து மீண்டும் 10 நிமிடம் நன்றாக Hand Beater-ஐ பயன்படுத்தி மிக்ஸ் செய்யுங்கள்.

10 நிமிடம் கழித்து நீங்கள் Soap Mold-யில் நீங்கள் தயார் செய்து வைத்த கலவையை ஊற்றி நன்றாக செட் செய்து கொள்ளுங்கள்.

பிறகு 12 மணி நேரம் கழித்து Soap Mold-யில் இருந்து சோப்பை அகற்றினால் போதும் அருமையான மற்றும் வாசனை நிறைந்த தேங்காய் எண்ணெய் சோப் தயார் ஆகிவிடும்.

இதனை நீங்கள் ஒரு தொழிலாகவும் செய்யலாம் நல்ல வருமானம் கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தேங்காய் எண்ணெய் சோப்பு தயாரிப்பு தொழில் செய்து நல்ல லாபம் பெருங்க..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information In Tamil