அமேசானில் நீங்கள் எந்த பொருள் வாங்க போனாலும் சரி இதை மட்டும் செக் பண்ணிக்கோங்க..!
பெரும்பாலானோர் இன்றைய கால கட்டத்தில் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அனைத்து பொருட்களையும் ஆர்டர் செய்து வீட்டின் வாசலிலேயே அவர்கள் ஆர்டர் செய்த பொருளை வாங்கிக்கொள்கின்றன. இதற்காக நிறய இணையதளங்கள் மற்றும் செயலிகளும் உள்ளது. அவற்றில் ஒன்று தான் அமேசான்.. ஆன்லைன் ஷாப்பிங் தளமான இந்த அமேசான் அவ்வப்போது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல கவர்ச்சிகரமான சலுகைகளையும் விற்பனையையும் வெளியிட்டு வருகிறது. அமேசானில் ஒவ்வொரு நாளும் சில சலுகைகளும் கிடைக்கின்ற. இதன் காரணமாகத்தான் ஏராளமான மக்கள் அமேசானில் பொருட்களை ஆர்டர் செய்கின்ற. அவ்வாறு ஆர்டர் செய்யும் பொருட்களை நீங்கள் கம்மி விலையிலும் அமேசானில் ஆர்டர் செய்ய முடியும். அது எப்படி என்று தான் இன்றைய பதிவில் நாம் படித்து தெரிந்துகொள்ள போகிறோம். சரி வாங்க அமேசானில் கம்மியான விலையில் பொருட்களை எப்படி வாங்க வேண்டும் என்று இப்பொழுது பார்க்கலாம்.
Comparing With Other Sellers Amazon Hacks:
பொதுவாக ஆன்லைன் ஷாப்பிங்காக இருந்தாலும் சரி, ஆஃப்லைன் ஷாப்பிங்காக இருந்தாலும் சரி அவர்களுக்கு ஒரே ஒரு விற்பனையாளர் மட்டும் தான் பொருளை விற்பனை செய்வார்கள் என்று சொல்லிவிட முடியாது.
ஒரு பொருளை பல விற்பனையாளர்கள் விற்பனை செய்வார்கள் என்று சொல்லலாம், அவர்கள் அனைவருமே ஒரே விலையில் தான் அந்த பொருள் விற்பனை செய்வார்கள் என்றும் சொல்லிவிட முடியாது. ஒருவர் அந்த பொருளுக்கு அதிக விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யலாம், மற்றொருவர் அந்த பொருளுக்கு குறைவான விலையை நிர்ணயம் செய்து விற்பனை செய்யலாம். அல்லது ஒரே ஒரு விற்பனையாளர் மட்டும் தான் அந்த பொருளை விற்பனை செய்துகொண்டிருக்கலாம் ஆகி அதற்கான ஆப்சன் இல்லாமலும் இருக்கலாம்.
இவற்றின் விவரங்களை நீங்கள் அமேசானில் அறிந்துகொள்ள முடியும். அதாவது நீங்கள் அமேசானில் பொருட்களை ஆர்டர் செய்யும்போது. அந்த பொருளுக்கு கீழ் நிறைய விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அதனை ஸ்க்ரால் செய்துகொண்டு வாருங்கள். அப்படி ஸ்க்ரால் செய்து வரும் போது அவற்றில் comparing with other sellers என்ற ஆப்சன் இருக்கும் அதனை கிளி செய்தீர்கள் என்றால். அந்த பொருளை வேறு யாரெல்லாம், எவ்வளவு விலைக்கு விற்பனை செய்கின்றார்கள் என்ற விவரங்கள் வரும். அந்த விவரத்தை பார்த்து நீங்கள் குறைந்த விலையில் பொருட்களை ஆர்டர் செய்துகொள்ளலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சேர் மார்க்கெட்டில் எந்த மாதிரி எல்லாம் பணம் சம்பாதிக்கிறார்கள் தெரியுமா?
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |