சைக்கிள் பாகங்கள் தமிழில் | Cycle Parts Name in Tamil

Cycle Parts Name in Tamil

மிதிவண்டி பாகங்கள் | Cycle All Parts Name in Tamil

மிதிவண்டி ஓட்ட தெரியாமல் யாரும் இருக்கமாட்டார்கள். ஒரு சிலருக்கு ஓட்டுகின்ற மிதிவண்டியில் இருக்கக்கூடிய பாகங்களின் பெயர்கள் சரியாக தெரியுமா என்று கேட்டால் ஒரு சிலருக்குத்தான் தெரிகிறது. இது மாதிரியான விஷயங்களை நாம் கட்டாயமாக தெரிந்து வைத்திருத்தல் அவசியம். வாங்க சைக்கிளின் உதிரி பாகங்களின் பெயர்களை தமிழில் படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

தையல் மிஷின் பாகங்கள்

Mithivandi Parts Name in Tamil:

Bicycle மிதிவண்டி, ஈருளி
Tube மென் சக்கரம், தூம்பு
Tyre வன் சக்கரம், உருளிப்பட்டை, மெத்துருளி
Front wheel முன் சக்கரம், முன்னாழி
Rear wheel (or) Back wheel பின் சக்கரம், பின்னாழி
Free wheel வழங்கு சக்கரம்
Sprocket இயக்குச் சக்கரம்
Multi gear sprocket பல்லடுக்குப் பற்சக்கரம்
Training wheels பயிற்சிச் சக்கரங்கள், பயிலாழி
Hub ஆழிக்குடம், நடு

சைக்கிள் பாகங்கள் தமிழில்:

Front wheel axle முன் அச்சுக் குடம், முன்னாழி அச்சு
Rear wheel axle பின் அச்சுக் குடம், பின்னாழி அச்சு
Rim சக்கரச் சட்டகம், ஆழி வளை
Gear பல்சக்கரம், பல்லாழி
Wheel bearing சக்கர உராய்வி
Ball bearing பந்து உராய்வி
Bottom Bracket axle அடிப்புறத் தண்டியக்கட்டை அச்சு
Cone cup கூம்புக் கிண்ணம்
Mouth valve மடிப்பு வாய், ஒருபோக்கி வாய்
Mouth valve cover மடிப்பு வாய் மூடி, ஒருபோக்கி வாய்மூடி

மிதிவண்டி பாகங்கள்:

Chain சங்கிலி
Chain link சங்கிலி இணைப்பி
Chain pin இணைப்பி ஒட்டி
Adjustable link நெகிழ்வு இணைப்பி
Circlip வட்டக் கவ்வி
Chain lever சங்கிலி நெம்பி
Frame சட்டகம்
Handle bar பிடி செலுத்தி, கைத்திருப்பி, கைச்செலுத்தி
Gripper பிடியுறை
Cross Bar குறுக்குத் தண்டு

Cycle All Parts Name in Tamil:

Cross Bar cover குறுக்குத் தண்டு உறை
Sissy Bar சிறுமியர் இருக்கைத் தண்டு
Dynamo மின் ஆக்கி
Head light முகப்பு விளக்கு, முன்விளக்கு
Danger light (or) Light reflector அபாய விளக்கு (அ) ஒளிதிருப்பி, பின் ஒளிர்வி
Rearview Mirror பின்காட்டி, பின் ஆடி
Back Carrier பொதி பிடிப்பி, பின் சுமைதி
Front Carrier Basket பொதி ஏந்தி, முன் கூடை
Carrier support legs பொதி பிடிப்பித் தாங்கு கால்கள், சுமைதி கால்
Side box பக்கவாட்டுப் பெட்டி, பக்கப் பெட்டி
மனித உடல் உறுப்பு பெயர்கள் தமிழ்

Cycle Parts Name in Tamil:

Stand நிலை, நிற்பி
Side stand சாய்நிலை, சாய் நிற்பி
Speedometer (Odometer) வேகம்காட்டி, விரைவளவி, விரைவுமானி
Fender வண்டிக் காப்பு
Derailleurs பற்சக்கர மாற்றி, பல்லாழி மாற்றி
Peg ஆப்பு
Air pump காற்றழுத்தி, காற்றேற்றி
Shock absorber அதிர்வு ஏற்பி, அதிர்வு குறைப்பி
Break நிறுத்தி, தடை
Break shoes நிறுத்துக்கட்டை, தடைக்கட்டை

மிதிவண்டி பாகங்கள்:

Break wire நிறுத்திழை, நிறுத்திக் கம்பி
Break Lever நிறுத்து நெம்பி
Front break ankle முன் நிறுத்துக் கணு
Back break ankle பின் நிறுத்துக் கணு
Disc brake வட்டு நிறுத்தி
Break connecting links நிறுத்தி இணைப்பிகள்
Pedal மிதிக்கட்டை
Reflecting Pedal ஒளிதிருப்பி மிதிக்கட்டை, எதிரொளிர் மிதிகட்டை
Pedal cover மிதிக்கட்டை உறை
Pedal cup மிதிக்கட்டைக் குமிழ்

 

Pedal rod மிதிக்கட்டைத் தண்டு
Spindle சுழலும் மிதிக்கூடு, தண்டு, சுழல்தண்டு
Seat (Saddle) இருக்கை
Seat Post இருக்கை தாங்கி
Baby Seat குழந்தை இருக்கை
Seat cover இருக்கை உறை
Leather Seat தோல் இருக்கை
Cushion seat மெத்திருக்கை
Washer நெருக்கு வில்லை, இடை வில்லை
Tension washer மிகுநெருக்கு வில்லை, நெருக்கு வில்லை

 

Screw திருகுமரை, திருகாணி, திருகு கூராணி
Nut ஆணி இறுக்கி, மரை வில்லை
Bolt திருகாணி, திருகுதண்டு
Spring சுருள்
Bush உள்ளாழி
Lever நெம்பி
Rust துரு
Balls பொடிப்பந்துகள், உண்டைமணி
Crank வளைவு அச்சு
Rivet கடாவு ஆணி

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil