Debit Sweep பற்றி தெரிந்துகொள்ளுங்கள் | Debit Sweep Meaning in Tamil
அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது நாம் அனைவரும் அறிந்திருக்கவேண்டிய ஒரு முக்கியமான ஒரு தகவல்தான். அது என்ன தகவல் என்றால் Debit Sweep பற்றிய தகவல்..! பற்றித்தான் பார்க்க இருக்கின்றோம். Debit Sweep பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. Debit Sweep என்பது எதற்காக பயன்படுகிறது. அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றியெல்லாம் இன்றைய பதிவில் விரிவாக காணலாம். இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
Debit Sweep என்றால் என்ன?
Debit Sweep என்பதை ஆட்டோ ஸ்வீப் என்றும் கூறுவார்கள். ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்கு வரம்பு மதிப்பை அடையும் போது டெபிட் ஸ்வீப் செய்யப்படுகிறது.
வங்கி சேமிப்புக் கணக்கில் உபரியாக பணம் வைத்து, குறைந்த அளவு பரிமாற்றங்கள் செய்பவர்களுக்கு இந்த டெபிட் ஸ்வீப் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். டெபிட் ஸ்வீப் வாடிக்கையாளர் கோரிக்கையின் பேரில் செய்யப்படுகிறது.
பொதுவாக உங்களது சாதாரண வங்கிக் கணக்கிற்கு நீங்கள் 4 சதவீதம் வட்டி பெறுகிறீர்கள் என்றால் டெபிட் ஸ்வீப் வசதியை தேர்வு செய்வதன் மூலம் நீங்கள் உங்களது வங்கியைப் பொறுத்து 8 முதல் 9 சதவீதம் வரை வட்டி பெறலாம்.
இந்த வசதிக்கான பெயர் வங்கிக்கு வங்கி மாறுபடும். ஆக்சிஸ் வங்கி தனது டெபிட் ஸ்வீப் கணக்கிற்கு “என்கேஷ் 24” என்றும் ஹெச்.டி.எப்.சி. வங்கி “சூப்பர் சேவர் வசதி” என்றும் பெயரிட்டுள்ளன.
உதாரணத்திற்கு உங்கள் வங்கிக் கணக்கிற்கான குறைந்தபட்ச வரம்பாக ரூ. 10,000 நீங்கள் தக்க வைக்க வேண்டும் என்று இருந்து, ஆனால் உங்கள் கணக்கில் சில மாதங்களாக ரூ. 50,000 உபரியாக எந்த உபயோகமும் இல்லாமல் கிடந்தால், அது போன்ற சமயங்களில் நீங்கள் இந்த டெபிட் ஸ்வீப் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
அப்படி நீங்கள் இந்த டெபிட் ஸ்வீப்பை பயன்டுத்துவதால் என்ன நடக்கும் என்றால் அந்த உபரிப் பணமானது நிரந்தர வைப்புத்தொகை (FD) கணக்கில் வைக்கப்படும். வங்கிக்கு வங்கி இந்தக் கணக்கில் வைக்கப்படும் காலம் மாறுபடும். இந்த கணக்கில் உள்ள உங்கள் பணத்தைப் பற்றி நீங்கள் கவலைப் பட வேண்டியது இல்லை.
நீங்கள் எந்நேரம் வேண்டுமானாலும் ஏ.டி.எம். மூலமாகவோ அல்லது காசோலை மூலமாகவோ பணத்தை எடுக்கலாம். அவ்வாறு நீங்கள் எடுக்கும் பணம் நிரந்தர வைப்புத்தொகையில் இருந்து எடுக்கப்பட்டுவிடும்.
டெபிட் கார்டு பற்றிய முக்கிய தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |