விருந்தினர் VS உறவினர்கள் இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள்..!

Differences Between Guest and Relatives in Tamil

Differences Between Guest and Relatives in Tamil

நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதிவின் மூலம் நாம் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தெரிந்துகொள்ள போகிறோம். நம் வீட்டிற்கு யாராவது விருந்தாளிகள் வருவார்கள். அப்போது வீட்டில் நிறைய விருந்தினர்களுக்கு விருப்பமான உணவுகளை சமைத்து கொடுப்பார்கள். ஆனால் இப்போது வீட்டிற்கு கெஸ்ட் வருகிறார்கள் என்பார்கள். ஆனால் இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று உங்களுக்கு தெரியுமா..? ஒரு சிலர் விருந்தினர் மற்றும் உறவினர் இரண்டிற்கும் ஒரே அர்த்தம் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் உறவினர் வேறு விருந்தினர் வேறு.. அது என்ன என்பது பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வோம்..!

Differences Between Guest and Relatives in Tamil:

விருந்தினர்

முதலில் உங்கள் வீட்டிற்கு விருந்தினர் வருகிறார்களா அல்லது உறவினர்கள் வருகிறார்களா என்று தெரிந்துகொள்ளுங்கள். அதாவது முதலில் உற்றார் மற்றும் உறவினர் என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

 உற்றார் என்றால் நம்முடைய இரத்தம் சம்பந்தப்பட்ட உறவினர்கள். அதாவது நம் பிறக்கும் போது அம்மாவாக அப்பாவாக, அண்ணண், தங்கையாக இருந்தார்கள் என்றால் அவர்களை தான் உற்றார் என்று சொல்லவேண்டும்.   இதே உறவினர்கள் என்றால் நாம் தேர்ந்து இருப்பது அதாவது நம்முடைய கணவன், மனைவி, நண்பர்கள் இது போன்ற உறவுகளை தான் உறவினர்கள் என்பார்கள்.  

இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉👉 Wedding vs Marriage இரண்டிற்கும் உள்ள வேறுபாடு..!

இது மட்டுமில்லாமல் யாரோ ஒருவர முன் பின் தெரியாதவர்கள் நம்முடைய வீட்டிற்கு வந்தால் அவர்களை தான் விருந்தினர் என்பார்கள்.

நீங்கள் நினைக்கலாம் யாரோ ஒருவர் எப்படி நம்முடைய வீட்டிற்கு விருந்தினராக வருவார்கள் என்று..? ஆனால் தெரிந்தவர்கள் மட்டும் வீட்டிற்கு வருவது இந்த காலம் தான்.

ஆனால் அந்த காலத்தில் முன் பின் தெரியாதவர்கள் தான் வீட்டிற்கு விருந்தினராக வருவார்களாம். அது எப்படி என்றால் இந்த காலத்தில் தான் பைக், கார், பஸ் போன்ற  வாகனங்கள் எல்லாம் உள்ளது. முன்பு அது எதுவும் இருக்காது. எங்கு சென்றாலும் அவர்கள் நடந்து செல்வார்கள். அப்போது அவர்களுக்கு பசி என்றால் அங்கு உள்ள வீட்டில் சாப்பிட்டு விட்டு அந்த வீட்டு திண்ணையில் தூங்கி கொள்வார்களாம். இதை தான் விருந்தோம்பல் என்று சொல்வார்கள்.

முன்பு வழியில் நடந்து செல்பவர்களுக்காக திண்ணை கட்டிவிடுவார்கள். அதேபோல் விருந்தினர்கள் அதாவது முன் பின் தெரியாதவர்கள் யார் வந்தாலும் அவர்களுக்கு மனதார விருந்தோம்பல் செய்வார்கள். அதேபோல் இரவு வீட்டு கதவை தட்டும் போது யாராவது விருந்தினர் வந்து இருக்கிறீர்களா என்று கேட்டுவிட்டு தான் கதவை  திறப்பார்களாம்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 சமைப்பதற்கு கேஸ் அடுப்பு VS கரண்ட் அடுப்பு எது சிறந்தது.?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil