Dragon Fruit in Tamil
இன்றைய பதிவில் நாம் அனைவருக்கும் பயனுள்ள ஒரு தகவலை தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அது என்ன தகவல் என்றால் டிராகன் பழம் பற்றிய தகவல் தான். நம்மில் பலரும் இந்த டிராகன் பழத்தை பார்த்திருப்போம் ஏன் சிலர் அதை வாங்கி சுவைத்தும் இருப்போம். ஆனால் அதனை பற்றிய முழு விவரங்கள் நமக்கு தெரிந்திருக்காது. அதாவது அதன் மற்றொரு பெயர்கள், பிறப்பிடம் போன்ற தகவல்கள் நமக்கு தெரிந்திருக்காது. அதனால் இந்த பதிவை முழுதாக படித்து டிராகன் பழம் பற்றிய தகவலை அறிந்து கொள்ளுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.
இதையும் படித்துப்பாருங்கள்=> டிராகன் பழம் நன்மைகள்
Dragon Fruit Information in Tamil:
டிராகன் பழம் ஒரு கற்றாழை இனத்தை சேர்ந்த பழம் ஆகும். இது பார்ப்பதற்கு டிராகன் முட்டை வடிவத்தில் இருப்பதால் இதற்கு இந்த பெயர் வைத்துள்ளனர். ஒரு பழம் 150 முதல் 600 கிராம் வரை எடையை கொண்டுள்ளது.
இதனுடைய சுவை தர்பூசணி மற்றும் PERRI பழத்தை போன்று இனிப்பு மற்றும் புளிப்பு சுவையை கொண்டுள்ளது. இதன் தாவரம் ஒரு கற்றாழை வகையை சேர்ந்தது என்பதால் இதன் கிளைகளில் முட்கள் நிறைந்திருக்கும்.
பொதுவாக இதன் பூக்கள் வெள்ளை நிறத்தில் காணப்படும். இவை இரவு நேரத்தில் பூக்கும் என்பதால் இவற்றை “இரவு ராணி” என்று அழைப்பார்கள். இந்தப் பழத்தை சிவப்பு தோல் உள்ள சிவப்பு நிற பழம், சிவப்பு தோல் உள்ள வெள்ளை நிற பழம், மற்றும் மஞ்சள் தோல் உள்ள வெள்ளை நிற பழம் போன்ற மூன்று வகையிலும் காணலாம்.
பழத்தின் மையத்தில் இனிப்பான கொழகொழப்பான சதையும் அதில் சிறு சிறு கருப்பு, வெள்ளை அல்லது சிவப்பு நிறத்தில் விதைகள் இருக்கும்.
பிறப்பிடம்:
இது மெக்சிகோவை பிறப்பிடமாக கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அங்கிருந்து மத்திய அமெரிக்காவுக்குப் பரவி பின் உலகம் முழுவதும் பரவியுள்ளது.
மேலும் இவை கிழக்கு ஆசியா, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா, அமெரிக்கா, கரீபியன், ஆஸ்திரேலியா போன்ற உலகின் வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகள் முழுவதும் பயிரிடப்படுகிறது.
இதையும் படித்துப்பாருங்கள்=> 20 சென்டில் 60,000 ரூபாய் வருமானம் தரும் டிராகன் ஃப்ரூட்
வேறுபெயர்கள்:
இவை இந்தோனேசிய மொழியில் டிராகன் பழம் (Buah Naga), கெமர் மொழியில் டிராகன் அளவு (Sror Kaa Neak), தாய்லாந்து மொழியில் டிராகன் படிகம் (Kaeo Mangkon), லாவோ மொழியில் Maak Manggohn, வியட் நாம் மொழியில் பச்சை டிராகன் (Thanh Long) மற்றும் சீன மொழியில் நெருப்பு டிராகன் பழம் (Huǒ Lóng Guǒ) அல்லது டிராகன் முத்துப் பழம் ( lóng zhū guǒ) போன்ற வேறுபெயர்களால் அழைக்கப்படுகிறது.
பயன்கள்:
- புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படுகிறது.
- உடலின் இரத்த உற்பத்தியை அதிகரிக்க உதவிப் புரிகிறது.
- செரிமான கோளாறுகளை குணப்படுத்துகிறது.
- சர்க்கரை நோயை குணப்படுத்த பயன்படுகிறது.
- சருமத்தை பாதுகாக்கின்றது.
- உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க பயன்படுகின்றது.
- முடி வளர்ச்சி அதிகரிக்கின்றது.
- எலும்பு வளர்ச்சியை அதிகரிக்கிறது.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |