வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தமிழ்நாடு மின்சார வாரியம் புகார் எண்

Updated On: June 27, 2024 4:28 PM
Follow Us:
TNEB Complaint Number
---Advertisement---
Advertisement

EB புகார் எண் – TNEB Complaint Number

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இன்றைய பதிவில் நமது தற்போதைய தமிழக முதல்வர் மு.கா. ஸ்டாலின் துவங்கி வைத்த மின் நுகர்வோர் சேவை மையம் பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். பொதுமக்கள் மின்துறை சார்ந்த குறைகளைத் தெரிவிக்க ‘மின்னகம்’ என்ற புதிய மின்நுகர்வோர் சேவை மையத்தை தொடர்புகொள்ளலாம். இந்த சேவை மையம் வாரத்தில் ஏழு நாட்களும், 24 மணி நேரமும் செயல்படுமாம். ஆகவே பொது மக்கள் இந்த சேவை மையத்தை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். இது குறித்த சில தகவல்களை நாம் இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

மின் நுகர்வோர் சேவை மையம் செயல்பாடு என்ன?

  • இந்த மின் நுகர்வோர் சேவை மையத்தின் செயல்படு என்னவென்றால். மின்சார துறை சார்ந்த அனைத்து வகையான புகார்களையும் தெரிவிக்கலாம். அதாவது தமிழ்நாட்டில் உள்ள மூன்று கோடியே பத்து லட்சம் மின் இணைப்பு தாரர்களின் மின் கட்டணம் தொடர்பான சந்தேகங்கள், புதிய மின் இணைப்பு தொடர்பான தகவல்கள், மின்னழுத்த ஏற்ற/ இறக்கம், உடைந்த மின் கம்பங்கள், தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகள், பழுதடைந்த மின் பெட்டிகள், ஆபத்தான நிலையில் உள்ள மின் மாற்றிகள், மின்தடை குறித்த தகவல், குறைந்த மின்னழுத்தம், உயர் மின்னழுத்தம் போன்ற மின்துறை சார்ந்த தகவல்கள்/ புகார்களைப் பொதுமக்கள் தெரிவிக்க 94987 94987  என்ற எண்ணில் தொடர்புகொண்டு உங்கள் புகார்களை அளிக்கலாம்.
  • இம்மையத்தில் ஒரு ஷிப்டுக்கு 65 நபர்கள் வீதம் மூன்று ஷிப்டுகளில் 195 நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அப்பணியாளர்கள் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களைக் கணினி மூலம் பதிவு செய்து, இப்புகார்கள் சம்மந்தப்பட்ட மேற்பார்வைப் பொறியாளர், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவிப் பொறியாளர் அலுவலகங்களுக்கு, CC-MAC மென்பொருள் தொழில்நுட்பம் வாயிலாக தானியங்கி WhatsAapp மூலம் உடனடியாகச் சென்றடைந்து, அதன் மீது துரித நடவடிக்கை எடுக்கப்படும்.
  • பெறப்படுகின்ற புகார்கள் குறித்த தகவல்களை ஒருங்கிணைக்க தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 44 மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தலா 3 நபர்கள் வீதம் 132 நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
  • இந்த எண்ணினை தொடர்பு கொண்டு நாம் நமது புகார்களை தெரிவிக்கும் வகையில். நமது தொலைபேசி எண்ணிற்கு ஒரு SMS அனுப்பப்படும். இந்த SMS நமது புகார் புதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதிசெய்வதற்கு தான் இது.
  • பிறகு நாம் எந்த மாவட்டத்தை செய்த்தவர்களோ அந்த மாவட்டத்தின் அதிகாரிக்கு நாம் அளித்த புகாரின் விவரங்களை சேன்றடையுமாம்.
  • புன்பு அதிகாரிகளின் நடவடிக்கைகள் இந்த மின் நுகர்வோர் சேவை மையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கண்காணிக்கப்படுகிறது. நாம் அளித்த புகாரின் தன்மைக்கேற்ப ஒருமணி நேரத்தில், அல்லது ஒரு நாளிற்குள் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
  • தமிழ்நாடு முழுவதற்கும் ஒரே எண் என்பதால் Call Engaged ஆக இருக்கும் என்று நினைக்க வேண்டாம் எந்த நேரம் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் → மின்சாரம் புகார் கடிதம் மாதிரி

மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now