வெந்தயம் பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா..?

Fenugreek Seeds in Tamil

Fenugreek Seeds in Tamil

அன்பு உள்ளம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் வெந்தயம் பற்றி நமக்கு தெரியாத சில தகவல்களை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். நம் வீட்டு சமையலறைகளில் இருக்கும் உணவு பொருட்களில் வெந்தயமும் ஓன்று. வெந்தயம் என்றால் என்ன என்று நம் அனைவருக்குமே தெரியும். வெந்தயம் ஒரு உணவு பொருள் ஆகும். இது பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இருந்தாலும் வெந்தயத்தின் வரலாறு உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவின் மூலம் வெந்தயத்தின் வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

வெந்தயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

வெந்தயம்:

இந்த வெந்தயம் ஆங்கிலத்தில் Fenugreek என்று அழைக்கப்படுகிறது. வெந்தயம் ஃபேபேசியே (Fabaceae) என்ற குடும்பத்தை சேர்ந்த மூலிகை தாவரமாகும். இது உணவு பொருளாகவும், மருந்து பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இது தமிழ் மக்கள் பயன்படுத்த கூடிய உணவுகளில் சுவைப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இந்த வெந்தயத்தின் செடிகள் கீரையாகவும், விதைகள் சுவையூட்டியாகவும் இருக்கின்றன.

இது ஒரு அரை வறண்ட பயிராக உலகம் முழுவதும் பயிரிடப்படுகின்றன. இந்த வெந்தயம் ஈரமான மண்ணில் பயிரிடப்படும் தாவரமாகும். இது எளிய முறையில் வளரக்கூடிய தாவரமாகும்.

இதன் செடிகள் ஒரு தண்டிற்கு 3 இலைகளை கொண்டுள்ளன. இலைகள் பச்சை நிறத்திலும் மற்றும் விதைகள் மஞ்சள் நிறத்திலும் காணப்படுகின்றன. விதைகள் தான் வெந்தயம் என்று அழைக்கப்படுகின்றன.

வெந்தயம் உலகில் கிழக்கு பகுதிகளில் அதிகளவு பயிரிடப்படுகின்றன. இது ட்ரைகோனெல்லா என்ற இனத்தை சேர்ந்தது என்று சொல்லப்படுகிறது.

கருகிய வெந்தயங்கள் ஈராக் நாட்டில் அதிகளவு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வெந்தயங்கள் கி.பி. 1 ஆம் நூற்றாண்டில் பயிரிடப்பட்ட உணவு பொருள் ஆகும்.

நம் இந்திய நாட்டில் வெந்தயம் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. நம் இந்தியா வெந்தயத்தின் உற்பத்தியாளராக திகழ்கிறது. மேலும் இந்தியாவின் உற்பத்தியில் 80% ராஜஸ்தானில் இருந்து வருகிறது.

சோடோலோன் என்ற வேதிப்பொருள் வெந்தயத்தின் வாசனைக்கு காரணமாகிறது. இந்த வெந்தயம் கசப்பு தன்மையை கொண்டுள்ளது.

எகிப்திய உணவு வகைகளில் வெந்தயமானது ஹில்பா அல்லது ஹெல்பா என்ற அரபுப் பெயரால் அறியப்படுகிறது.

வெந்தயம் எரித்ரியன் மற்றும் எத்தியோப்பியன் என்ற உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil