பிளாட் வாங்குவது Vs வீடு வாங்குவது..! இது இரண்டில் எது சிறந்தது தெரியுமா..?

Advertisement

Flat Vs House Which is Better in Tamil

வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுவாக நம்மில் பலரும் தினமும் ஏதாவது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்போம். ஆனால் அதை எப்படி தெரிந்து கொள்வது என்று ஒரே யோசனையாக இருக்கும். அதனால் தான் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் தினமும் இந்த பதிவின் வாயிலாக பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் காணப்போகும் பதிவும் உங்களுக்கு பயனுள்ள தகவலாக இருக்கும். அதாவது பிளாட் வாங்குவது Vs வீடு வாங்குவது இது இரண்டில் எது சிறந்தது என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பிளாட் வாங்குவது Vs வீடு வாங்குவது: 

Flat Vs House Which is Better

பொதுவாக நம் அனைவருக்குமே இருக்கக்கூடிய மிகப்பெரிய ஆசை என்றால் அது சொந்த வீடு தான். சொந்த வீடு என்பது அனைவருடைய கனவாகவும் இருக்கிறது. சிலர் சொந்தமாக வீடு கட்டவேண்டும் என்று நினைப்பார்கள். சிலர் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

அதனால் இன்றைய நிலையில் பெரும்பாலான நகரங்களில் பிளாட் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, பூனே போன்ற பெரும் நகரங்களில் பெரும்பாலும் பிளாட்கள் தான் விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் மக்கள் தனி வீடு வாங்குவதை விட பிளாட் வாங்குவதையே அதிகம் விரும்புகின்றனர்.

சொந்த வீடு வாங்க போறீங்களா.. அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க

Flat Vs House Which is Better

பிளாட் : ஒரு கட்டிடத்தில் ஒரே மாதிரியாக பல வீடுகள் கட்டுவதை தான் அடுக்குமாடி குடியிருப்புகள் அல்லது பிளாட் என்று கூறுகிறோம். அப்படி நீங்கள் பிளாட் வாங்கினீர்கள் என்றால் அந்த வீட்டிற்குள் சிறிய மாற்றங்களை மட்டுமே செய்ய முடியும். ஆனால், உங்கள் வீட்டை முழுவதுமாக உடைத்து மீண்டும் கட்ட முடியாது. மேலும் ஒரு தனி வீட்டை விட பிளாட்கள் மலிவான விலையில் கிடைக்கும்.

தனி வீடு : நீங்கள் இப்போது ஒரு தனி வீடு வாங்கினால், அந்த வீட்டில் உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கும். அதுபோல ஒரு தனி வீட்டில் அதிக சுதந்திரம் இருக்கும். நீங்கள் வாங்கும் சொந்த வீட்டில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். யாரும் எதுவும் கேக்க முடியாது. வீட்டின் கூரை முதல் வீடு கட்டப்பட்டுள்ள நிலம் வரை உங்களுக்கு முழு உரிமை இருக்கும்.

சொந்தமாக வீடு கட்டுவதற்கு சில சிறப்பான டிப்ஸ்களை பற்றி தெரிந்துகொள்ளலாம்..

இரண்டில் எது சிறந்தது..? 

Flat Vs House Which is Better

தனி வீடுகளை விட பிளாட் மிகவும் மலிவானது. நீங்கள் பிளாட் வாங்கும் போதே பல நவீன வசதிகள் கொடுக்கப்படும். ஆனால் தனி வீட்டில் இந்த வசதிகளை அமைக்க, நீங்கள் அதிகமாக செலவு செய்ய வேண்டும்.

ஒரு பிளாட் வாங்குவதற்கு 90 சதவீதம் வரை நிதி பெற்றுக் கொள்ளலாம். ஆனால், தனி வீட்டை பொறுத்தவரை 70 சதவீதம் மட்டுமே நிதி பெறலாம்.

அதுபோல நெனெகல் பிளாட் வாங்கினால் லிப்ட், தண்ணீர், மின்சாரம் போன்றவற்றிற்கு அந்த கட்டிடத்தில் இருக்கும் அனைவருமே பொறுப்பு. ஆனால்  தனி வீட்டில் இதெல்லாம் உங்கள் பொறுப்பு தான். எனவே செலவு மேலும் அதிகரிக்கும்.

அடுத்து நீங்கள் வாங்கிய பிளாட்டை எளிதில் விற்க முடியும். ஆனால் உங்கள் வீட்டை விற்பதில் சில சிக்கல்கள் ஏற்படலாம்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement