முதலமைச்சர் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம்..! Girl Child Benefit Scheme..!

Advertisement

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் | TN CM Girl Child Protection Scheme 

CM Girl Child Protection Scheme: வணக்கம் தோழிகளே..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தை பற்றித்தான் இன்று நாம் பார்க்கப்போகிறோம். பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை நோக்கி இந்த திட்டம் கொண்டுவரபட்டது. முதலமைச்சரின் இந்த திட்டத்தில் அரசால் பெண் குழந்தைகளுக்கு தொகைகள் வழங்கப்படும். அரசால் வழங்கப்பட்ட தொகையானது குழந்தை தன் 18 வயது பூர்த்தியான பிறகு எதிர்காலத்தில் 3 லட்சம் கிடைக்கும் வகையில் கொண்டுவரப்பட்டது தான் இந்த முதலமைச்சரின் பெண் குழந்தை திட்டம். சரி வாங்க இப்போது முழுமையாக இந்த திட்டத்தின் விவரங்களை படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!

கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை..! Dr.Muthulakshmi Reddy Maternity Benefit Scheme..!

முதலமைச்சர் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம்:

Schemes 1:

முதலமைச்சர் பெண் குழந்தைக்கான திட்டம் 2 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் திட்டமானது குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை இருக்கிறது என்றால் முதலமைச்சரின் திட்டப்படி அரசால் அந்த பெண் குழந்தை எதிர்காலத்துக்காக ரூ. 50,000/- டெபாசிட் செய்யப்படும்.

Schemes 2:

முதலமைச்சரின் பெண் குழந்தை இரண்டாம் திட்டமானது ஒரே குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தை இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் தனி தனியாக ரூ. 25,000/- விதத்தில் டெபாசிட் அரசால் செய்யப்படும்.

வயது வரம்பு:

முதலமைச்சரின் பெண் குழந்தை திட்டத்தில் வரும் பணத்தை நாம் உடனே எடுக்கமுடியாது. அந்த பெண் குழந்தைக்கு “18 வயது” சரியாக பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

குறிப்பு:

முக்கியமாக அந்த பெண் குழந்தை படித்து இருக்க வேண்டும்.

வட்டி:

  • 18 வயது முடிந்த பிறகு அந்த குழந்தையின் Account-ற்கு டெபாசிட் மற்றும் வட்டியுடன்(Interest) வந்தடையும்.
  • குடும்பத்தில் ஒரு குழந்தை உள்ளவர்களுக்கு டெபாசிட் மற்றும் வட்டியுடன் சேர்த்து ரூ.3,00,000/- வரையிலும் இரண்டு பெண் குழந்தை உள்ளவர்கள் தனி தனியாக ரூ.1,50,000/- வரையிலும் பெண் குழந்தையின் அக்கவுண்டில் “Transfer” செய்யப்படும்.

தேவைப்படும் ஆவணம்:

CM Girl Child Protection Scheme

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு அப்ளை செய்வதற்கு தேவையான ஆவணங்கள்:

  • வருமான சான்றிதழ்
  • இருப்பிட சான்றிதழ்
  • ஆண் குழந்தை இல்லை என்ற சான்றிதழ்(no male child certificate)
  • சாதி சான்றிதழ்
  • பெண் குழந்தை பிறப்பு சான்றிதழ்
  • கருத்தடை சான்றிதழ்(Sterilization Certificate)
  • குடும்ப அட்டை
  • ஆதார் கார்டு
  • திருமண சான்றிதழ்
  • Family Photo
  • Age Certificate அல்லது TC(father/ Mother) போன்ற ஆவணங்கள் இருக்க வேண்டும்.

ஆவணங்கள் வாங்க வேண்டிய இடம்:

  • வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்ற சான்றிதழ், சாதி சான்றிதழ் இல்லாதவர்கள் தாசில்தார் அலுவலகத்தில் சென்று பெற்றுக்கொள்ளலாம்.
  • பெண் குழந்தை பிறப்பு சான்றிதழ், கருத்தடை சான்றிதழ் போன்றவை மருத்துவ முகாம்களிலே பெற்றுக்கொள்ளலாம்.
  • திருமண சான்றிதழ் துணை பதிவாளர் அலுவலகத்தில் சென்று இந்த சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.

ஆண்டு வருமானம்:

  • முதலமைச்சரின் பெண் குழந்தை திட்டத்திற்கு அப்ளை செய்ய ஆண்டு வருமானமானது ரூ. 72,000-குள் இருக்க வேண்டும்.

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்திற்கு எப்படி அப்ளை செய்வது..?

  • தாய்மார்கள் பிரசவ காலம் முடிந்து தன் முதல் குழந்தைக்கு 3 வயதிற்குள் இந்த பெண் குழந்தை திட்டத்தில் சேர்த்துவிட வேண்டும்.
  • இந்த திட்டத்திற்கு அப்ளை செய்ய நீங்கள் வசித்துவரும் வட்டாரத்தில் “Block Development Office(BDO)” என்ற அலுவலகத்தில் சென்று பெண் குழந்தை திட்டத்திற்கு அப்ளை செய்யவேண்டும் என்று கூறினால் BDO அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் ஒன்று கொடுப்பார்கள்.
  • அந்த படிவத்தில் விவரங்களை நிரப்பிய பிறகு தேவைப்படும் ஆவணங்கள் இணைக்க வேண்டும். ஆவணங்களை தயார் செய்வதற்கு கால அவகாசமும் கொடுக்கப்படும்.
  • ஆவணங்களை படிவத்தில் இணைத்த பிறகு BDO அலுவலகம் செல்லவேண்டும். உங்களுடைய ஆவணங்களை Scan செய்து அசல்களை(Original) தங்களிடம் கொடுத்துவிடுவார்கள். அதன்பிறகு “summit” செய்துக்கொள்வார்கள்.
  • BDO அலுவலகத்தில் இருந்து 2 மாதம் கழித்து டெபாசிட் செய்ததற்கான “Photo copy” ஒன்று கொடுப்பார்கள். இந்த டெபாசிட் செய்த photo copy-யை பத்திரமாக நாம் வைத்துக்கொள்வது மிகவும் அவசியம்.
  • இந்த Deposit Account Joined Account-ஆக இருக்கும். ஏனென்றால் பெண் குழந்தை Minor என்பதால் குழந்தை மற்றும் குழந்தையின் அம்மா பெயரில் இந்த Account  இருக்கும்.

புதுப்பித்தல்:

  • டெபாசிட் செய்த தொகையினை “Tamilnadu Power Finance & Infrastructure Development Corporation Limited-ல்” பராமரித்து வருகிறார்கள்.
  • முதலமைச்சரின் பெண் குழந்தை திட்டத்தில் டெபாசிட் செய்த பிறகு 5 வருடத்திற்கு ஒருமுறை இந்த திட்டத்தை BDO அலுவலகத்தில் புதுப்பிக்க(Renewal) வேண்டும்.
  • புதிப்பிப்பதற்கு BDO அலுவலகத்தில் கொடுத்த Photo Copy தேவைப்படும். அதனால் இதை பத்திரப்படுத்தி வைக்கவும். 5 வருடத்திற்கு ஒருமுறை Renewal செய்வதனால் பெண் குழந்தையின் Account-ல் 18 வயது பூர்த்தி அடைந்தபின்னர் ரூ. 3,00,000/- டெபாசிட் ஆகும்.
  • இரண்டு குழந்தை இருக்கும் பட்சத்தில் தலா ரூ.1,50,000/- பெண் குழந்தையின் Account-ல் வந்து சேரும்.
பொன் மகன் சேமிப்பு திட்டம் | Pon magan semippu thittam tamil

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

Advertisement