வளரும் பெண் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய தகவல்கள் என்ன..!

Advertisement

பெண் குழந்தைகளை எப்படி வளர்ப்பது பற்றிய தகவல்கள் 

ஹலோ பொதுநலம்.காம் பதிவின் இனிமையான நேயர்களே… இன்று இந்த பதிவில் உங்கள் குழந்தைங்களை எப்படி வளர்ப்பது பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள். பெற்றோர்களாகிய நீங்கள் வளரும் உங்கள் பெண் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கக்கூடிய விஷயங்கள் அதிகமாகவே உள்ளன. பெற்றோர்கள் பெண் குழந்தைகளை கவனத்துடன் வளர்க்க வேண்டியது மிகவும் அவசியமான ஓன்று. பெண் குழந்தைகளை எப்படி வளர்ப்பது அவர்களை எப்படி பாதுகாப்பது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

பெண் குழந்தைகளை தொடுவது சரியா? தவறா?

பெண் குழந்தைகளை தொடுவது

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது. உங்கள் வளரும் பெண் குழந்தைகளுக்கு நல்லது எது..? கெட்டது எது..? என்பதை சொல்லிக் கொடுத்து வளர்ப்பது அவசியமான ஓன்று. பெற்றோர்களை தவிர பெண் குழந்தைகளை தொடும் உரிமை வேற யாருக்கும் இல்லை. ஒரு குழந்தையின் அனுமதியில்லாமல் அந்த குழந்தையை தொடுவது தவறு.

பெற்றோர்களே உங்கள் குழந்தையுடன் நண்பனை போல் பழகுங்கள். உங்கள் குழந்தைகளுடன் எதையும் மறைக்காமல் வெளிப்படையாக பேசி பழகுவது நல்லது. அப்பொழுது தான் உங்கள் குழந்தைகளும் உங்களிடம் எதையும் மறைக்காமல் வெளிப்படையாக பேசி பழகுவார்கள்.

உங்கள் குழந்தைகள் மொபைலே பார்க்கிறார்களா அவர்களை மாற்றுவதற்கு செம ஐடியா

 

இன்றைய நிலையில் பல பெண் குழந்தைகள் வன்கொடுமைகளை சந்திக்கிறார்கள். குழந்தை கடத்துவது, அப்பாவி குழந்தைகள் கொடூரமாக தாக்கப்படுவது மற்றும் குழந்தைகளை அச்சுறுத்துவது போன்ற சம்பவங்கள் நம் நாட்டில் தொடர்ந்து கொண்டே வருகிறது. பல அப்பாவி குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமூகத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

நல்ல அறிமுகமானவர்கள் தான் இன்று குழந்தைகளை வன்கொடுமைக்கு உள்ளாகுகிறார்கள். அதிலும் பெண் குழந்தைகளுக்கு சுதந்திரம் என்பது இன்றைய காலகட்டத்தில் இல்லாமலே போய்விட்டது. இருந்தாலும் உங்கள் பிள்ளைகளை நீங்களே சந்தேகபடுவது தவறான ஓன்று. இப்படி செய்வதால் அவர்களுக்கு உங்கள் மேல் பயம் தான் வரும். அதனால் எதையும் உங்களிடம் கூற தயங்குவார்கள்.

ஒரு குழந்தையின் பாதுகாப்பு யாரிடம் உள்ளது? 

ஒரு குழந்தையின் பாதுகாப்பு

ஒரு பெண் குழந்தையின் பாதுகாப்பு என்பது அந்த குழந்தையிடம் மட்டும் தான் உள்ளது. தனது உடலுக்கு தானே உரிமையாளர் என்பதை உங்கள் குழந்தைக்கு சொல்லி கொடுங்கள். வேறு ஒருவர் உங்கள் குழந்தையை தொடுவது தவறு என்று சொல்லி கொடுங்கள்.

பள்ளிக்கு சென்று வீட்டிற்கு வரும் பெண் குழந்தைகளை கவனிப்பது மிகவும் அவசியம். குழந்தைகளிடம் அந்த நாளின் அனுபவங்களை பற்றி பெற்றோர்கள் கவனமாக கேட்கவேண்டும். ஒருவர் உங்கள் பிள்ளைகளை சரியான நோக்கத்துடன்  தொடுகிறாரா? இல்லை தவறான நோக்கத்துடன் தொடுகிறாரா? என்பதை சொல்லி கொடுங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ குழந்தைகள் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டியவை:

  1. உங்கள் பிள்ளைகள் வளரும் போது அவர்களை கண்காணிக்க வேண்டும்.
  2. உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும்.
  3. பெண் குழந்தைகளுக்கு அவர்களை பாதுகாத்து கொள்ளும் முறைகளை சொல்லிக் கொடுக்க வேண்டும்.
  4. முன் பின் தெரியாதவர்களுடன் வெளியே செல்ல கூடாது என்று சொல்லிக் கொடுங்கள்.
  5. உடலின் ஒவ்வொரு பாகத்திற்கும் ஒருவித பாதுகாப்பு உண்டு என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். அவர்களுடைய அந்தரங்க உறுப்புகளை யாராவது தொட முயன்றால், அது தவறான செயல் என்று சொல்லிக் கொடுங்கள்.
  6. பெற்றோர்களை தவிர மற்றவர்கள் குழந்தைகளை தொடுவது தவறு என்று சொல்லி கொடுங்கள்.
  7. ஒருவர் தொடும்போது அது உங்களுக்கு வலியை ஏற்படுத்தினால் அது தீய தொடுதல் என்று சொல்லுங்கள்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information In Tamil
Advertisement