இந்திய இந்து திருமணங்கள் சட்டம்..! Hindu Marriage Act in Tamil..!
Hindu Marriage Act in Tamil..! நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து, ஜாதக பொருத்தம் பார்த்தால் போதும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்துவிடாதீர்கள். பொதுவாக திருமணம் செய்வதற்கு சட்டரீதியாக தகுதிகள் இருக்கிறது திருமணம் செய்யும் ஆணிற்கு 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதேபோல் திருமணம் செய்யும் பெண்ணாக இருந்தால் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். மணமக்கள் இருவரும் திருமணத்தின் போது வேறு திருமண பந்தத்தில் இருக்ககூடாது என்பதெல்லாம் அனைவருக்கும் தெரிந்த பொது விதிகள். இந்த விதிகளுக்கு உட்பட்டு திருமணம் செய்து கொள்பவர்கள் அதை முறைப்படி பதிவு செய்துகொள்ள வேண்டும் என்பது அரசு உத்தரவு. இதற்காக பல்வேறு சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
இந்து திருமணங்கள் சட்டம் 1955 / Hindu Marriage Act in Tamil:
இந்து திருமணங்கள் சட்டம் 1955 என்பது இந்து சமயத்தினை சார்ந்தவர்கள் மேற்கொள்ளும் திருமணத்திற்காக இயற்றப்பட்டதாகும். இச்சட்டம் இந்து திருமண சட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இச்சட்டத்தின் மூலமாகவே இந்து சமய திருமணங்களும், திருமண முறிவுகளும் நீதிமன்றத்தில் முடிவெடுக்கப்படுகின்றன.
இந்த சட்டம் இந்தியாவில் வாழுகின்ற இஸ்லாமியர், கிறிஸ்துவர், பார்சி ஆகியவர்களைத் தவிற பிற அனைத்து மதம் மற்றும் சாதிப்பிரிவுக்களுக்கானதாகும். இச்சட்டமே திருமணத்திற்கும், திருமண முறிவிற்குமானதாக உள்ளது.
திருமணத்திற்கு வழிமுறை
திருமணத்திற்கு இச்சட்டம் சில வழிமுறைகளைக் காட்டுகிறது.
- திருமணம் செய்யப்போகும் மணமகன் மற்றும் மணமகளுக்கு வாழ்க்கைத் துணை (கணவனோ, மனைவியோ) இருக்ககூடாது.
- மணமகனும், மணமகளும் மனரீதியாக தெளிவாக இருக்க வேண்டும். அதாவது மனபிறழ்வு, மனநோய் போன்றவை இருக்க கூடாது.
- காதல் திருமணமோ, பெற்றோர் உற்றோர் நடத்தும் திருமணமோ மணமக்களின் சம்மதத்துடனே நடக்க வேண்டும்.
- மணமகனுக்கு 21 வயதும், மணமகளுக்கு 18 வயதும் முழுமையாக பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
- மணமக்கள் பொருந்தாத உறவினர்களாக இருக்ககூடாது.
தகவல் அறியும் உரிமை சட்டம் |
பாகப்பிரிவினை சட்டம் |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன் (Baby health tips in tamil), விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |