இ பாஸ் அப்ளை செய்வது எப்படி? | How to Apply E-pass in Tamil

Advertisement

இ பாஸ் வாங்குவது எப்படி? | How to Apply E  Pass Online Tamilnadu

How to Apply E-pass in Tamil – உலகம் முழுவதும் கொரோன நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கை அறிவித்தவண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் தமிழக அரசு மே 10-ம் தேதி முதல் மே 24-ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்த சமயத்தில் திருமணம், இறப்பு, அவசர மருத்துவ தேவைகள் மற்றும் அத்தியாவசிய பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே இ பாஸ் தற்போது வழங்கப்படுகிறது. ஆகவே இந்த பதிவில் மருத்துவம், இறப்பு போன்றவற்றுக்கு செல்ல, ஆன்லைனில் இ – பாஸ் அப்ளை செய்யும் முறை பற்றி தெரிந்து கொள்வோம்.

ஆன்லைனில் இ பாஸ் அப்ளை செய்வது எப்படி? | How to Apply E-pass in Tamil

ஸ்டேப்: 1

முதலில் https://eregister.tnega.org/#/user/pass என்ற இணையதள முகவரிக்கு செல்லவேண்டும்.

ஸ்டேப்: 2

இணையதளத்தின் முகப்பு பகுதியில் கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு சரியானவற்றை தேர்வு செய்து கொள்ளுங்கள். அதாவது தாங்கள் வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்கள் என்றால் அந்த அட்டவணையை தேர்வு செய்யுங்கள் அல்லது மற்ற காரணங்களுக்காக இ பாஸ் அப்ளை செய்பவர்களாக இருந்தால் மற்றவர்கள் என்ற அட்டவணையை தேர்வு செய்யுங்கள்.

ஸ்டேப்: 3

அதன் பிறகு விண்ணப்பதாரர்கள் தங்களுடைய மொபைல் எண்ணினை உள்ளிட வேண்டும். பின்பு அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள 6 Captcha code-ஐ உள்ளிட்டு Send OTP என்பதை கிளிக் செய்யுங்கள்.

ஸ்டேப்: 4

இப்பொழுது நீங்கள் பதிவு செய்த தொலைபேசி எண்ணிற்கு 6 இலக்க ஓடிபி எண் வரும். அந்த எண்ணினை உள்ளிட்டு LOGIN என்பதை கிளிக் செய்யுங்கள்.

ஸ்டேப்: 5

இப்பொழுது மற்றொரு பேஜ் திறக்கப்படும் அவற்றில் தனி நபர்/ குழு சாலை வழி பயணம் அல்லது தனி நபர்/ குழு, ரயில்/ விமானம் வழி தமிழ்நாட்டின் உள் நுழைதல் அல்லது தொழில் நிறுவனங்கள் என்று மூன்று வகையான ஆப்சன் இருக்கும் அவற்றில் தங்களுக்கு எந்த வகை தேவையோ அவற்றில் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 6

அதன் பிறகு மற்றொரு பேஜ் திறக்கப்படும் அவற்றில்,

காரணம் என்பதில்: நீங்கள் எந்த காரணத்திற்க இ பாஸ் அப்ளை செய்யப்போறீங்களோ அந்த காரணத்தை தேர்வு செய்து கொள்ளவும்.

அதன் பிறகு பயண தேதி, விண்ணப்பதாரர் பெயர், விண்ணப்பதாரர் அடையாள சான்றிதழ் எண், வாகன எண், எங்கு வரை பயணம் செய்ய போறிங்க, தங்களது பயண காரணத்திற்கான ஆவணம், பயனர்களின் எண்ணிக்கை விண்ணப்பதாரர்களின் அடையாள சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்று, வாகன வகை மற்றும் வீட்டு முகவரி போன்ற விவரங்களை தெளிவாக உள்ளிட வேண்டும்.

ஸ்டேப்: 8

பயணத்துக்கு குறிப்பிட்டுள்ள காரணங்கள் தொடர்பான ஆவணங்களையும் (மருத்துவரின் பரிந்துரை சான்றிதழ்) பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த ஆவணங்கள் அனைத்தையும் ஆன்லைனில் முறையாக சமர்பித்த பின்னர், அவற்றை சரிபார்த்து விண்ணப்பதாரருக்கு இ-பாஸ் அளிக்கப்படும். அதன் பிறகு தங்களுடைய இ பாஸ் சான்றிதழை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

முக்கிய குறிப்பு:

தமிழக அரசு தற்சமயம் திருமணத்திற்கு இ பாஸ் வழங்குவதை தடை செய்துள்ளது.

ஆன்லைனில் வாரிசு சான்றிதழ் அப்ளை செய்வது எப்படி?

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement