தொலைந்து போன ஸ்மார்ட் கார்டு திரும்ப பெறுவது எப்படி..?
வணக்கம் பொதுநலம்.காம் பதிவின் இனிமையான நேயர்களே… இன்று அனைவருக்கும் பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்கப்போகிறோம். தினமும் ஒரு பயனுள்ள தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்கிறீர்கள். அதேபோல், தொலைந்து போன உங்கள் ஸ்மார்ட் கார்ட்டை ஆன்லைனில் திரும்ப பெறுவது எப்படி என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
ஸ்மார்ட் கார்டு திரும்ப பெறுவது எப்படி:
உங்களின் கவனக் குறைவால் சில சமயங்களில் ஆதார் கார்டு, ரேஷன் கார்ட் போன்ற ஆவணங்கள் தொலைந்து விடும். உங்கள் ஸ்மார்ட் கார்டு தொலைந்து விட்டாலோ அல்லது பழுதடைந்து விட்டாலோ அதை ஆன்லைன் மூலம் திரும்ப பெற்று விடலாம்.
இதையும் பாருங்கள் ⇒ ஸ்மார்ட் கார்டில் பெயர் நீக்கம் செய்வது எப்படி
ஸ்மார்ட் கார்டு ஆன்லைனில் அப்ளை செய்வதற்கான முறைகள்:
ஸ்மார்ட் கார்டு தொலைந்து விட்டால் முதலில் உங்கள் போனில் உள்ள Google Browser –ல் tnpds என்று டைப் செய்தால் தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு கொடுக்கப்பட்ட லிங்க் வரும். இந்த லிங்கை https://www.tnpds.gov.in/ கிளிக் செய்யவேண்டும்.
பின் மேல்கொடுக்கப்பட்ட படத்தில் உள்ளதை போல் இருக்கும். இதில் நகல் மின்னணு குடும்ப அட்டை என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- பின் உங்களுடைய மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். இப்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு OTP எண் வரும். அந்த எண்ணை சரியாக பதிவு செய்யவும்.
- இப்போது உங்களுடைய ரேஷன் கார்டில் உள்ள விவரங்கள் வந்துவிடும். அதில் உங்களுடைய பெயர், முகவரி எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும்.
- பின் கீழே, மறுபதிப்பு கோரிக்கை வகை என்பதை கிளிக் செய்யவேண்டும். அதில் அட்டை தொலைந்துவிட்டது என்பதை கிளிக் செய்யவேண்டும்.
- அதற்கான காரணத்தை கூற வேண்டும். பின் ஒரு கட்டத்தில் ✓ செய்து தொடர என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- அதன் பின் குறிப்பு எண் வரும். அந்த எண்ணை குறித்து வைத்து கொள்ளுங்கள்.
- முகப்பிற்கு செல்ல என்பதை கிளிக் செய்து கீழே நகல் மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பத்தின் நிலை என்பதை கிளிக் செய்யவேண்டும்.
- இப்போது நீங்கள் குறிப்பிட்டு வைத்துள்ள குறிப்பு எண்ணை பதிவு செய்யவேண்டும்.
- உங்கள் ஸ்மார்ட் கார்டு ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டது.
- பின்னர் உங்கள் பகுதியில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு சென்று நீங்கள் ஆன்லைனில் பதிவு செய்ததை கூறினால் புதிய ரேஷன் கார்ட் வழங்கப்படும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information In Tamil |