Passport online-யில் அப்ளை செய்வது எப்படி? | How to apply passport online in tamil..!

Advertisement

ஆன்லைனில் பாஸ்போர்ட் அப்ளை செய்வது எப்படி? | How to Apply Passport in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவின் வாயிலாக ஆன்லைனில் பாஸ்போர்ட் அப்ளை செய்வது (How to Apply Passport Online in Tamil) எப்படி என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க.  இப்பொழுது உங்களுடைய பாஸ் போர்ட்டை நீங்களே ஆன்லைன் மூலம் வெறும் 1500/- ரூபாயில் மிக எளிதாக விண்ணப்பித்து விடலாம். இதற்காக நீங்கள் ப்ரௌசிங் சென்ரருக்கு சென்று அங்குள்ளவர்களிடம் தான் அப்ளை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

இப்போது ஆன்லைன் மூலம் எப்படி பாஸ்போர்ட் அப்ளை  செய்து, பெறுவது என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

பாஸ்போர்ட் ஆன்லைனில் அப்ளை செய்யும் முறை:

பாஸ் போர்ட் ஆன்லைனில் அப்ளை செய்வதற்கு முதலில் portal2.passportindia.gov.in இணையத்தளத்திற்கு செல்லவும்.

அவற்றில் New user registration என்பதை கிளிக் செய்யவும், ஏற்கெனவே நீங்கள் Registration செய்திருந்தால். லாகின்(Existing User Login) என்பதை கிளிக் செய்து லாகின் செய்து கொள்ளவும்.

How to Apply Passport Online in Tamil Step: 1

இப்பொழுது முதல் முதலாக பதிவு செய்ப்பவர்கள் எப்படி New user registration செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

முதல் முதலாக Registration செய்ப்பவர்கள் மேல் கூறப்பட்டுள்ள இணையதளத்திற்கு சென்ற பின்பு New user registration என்பதை கிளிக் செய்யவும்.

இப்பொழுது User registration என்ற Page திறக்கப்படும் அவற்றில் உங்களுடைய முகவரி எந்த District-ன் Passport Office கீழ் வருகிறது என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.

பின்பு Given Name என்ற இடத்தில் உங்களுடைய பெயரை சரியாக டைப் செய்யுங்கள்.

பிறகு Surname என்ற இடத்தில் உங்களுடைய தந்தையின் பெயரை டைப் செய்யுங்கள்.

பின்பு Date of Birth(DOB) என்ற இடத்தில் உங்களுடைய பிறந்த தேதியை டைப் செய்யுங்கள்.

E-mail Id என்ற இடத்தில் உங்களுடைய E-mail Id-யை டைப் செய்யுங்கள்.

இப்பொழுது Login Id என்ற இடத்தில் உங்களுக்கான ஐடியை கிரியேட் செய்யுங்கள்.

Password என்ற இடத்தில் உங்களுடைய பாஸ் வேர்டை கொடுங்கள். Confirm Password என்ற இடத்திலும் அதே பாஸ் வேர்டை டைப் செய்யுங்கள்.

பின்பு Hint Question என்ற இடத்தில் சில வினாக்கள் கேட்கப்படும், அவற்றில் ஏதேனும் ஒரு Question-னை தேர்வு செய்யுங்கள். அதற்கான பதிலை Hint Answer என்ற இடத்தில் டைப் செய்ய வேண்டும்.

பின்பு Enter Characters Displayed என்ற இடத்தில் கொடுக்கப்பட்டுள்ள Captcha code-ஐ கீழே கொடுக்கப்பட்டுள்ள பாக்ஷில் டைப் செய்யத பின்பு Registration ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது உங்களுடைய E-mail Id-க்கு மெயில் அனுப்பப்படும். அவற்றை நீங்கள் Confirm செய்து கொண்டால் உங்களுக்கான Account கிரியேட் ஆகிவிடும். உங்களுடைய Account-ஐ Verified செய்த பின்பு இரண்டாவது ஸ்டேப் பாருங்க.

How to Apply Passport Online in Tamilnadu Step: 2

திரும்பவும் ஹோம் பேஜிக்கு சென்று லாகின் என்பதை கிளிக் செய்து லாகின் செய்ய வேண்டும். லங்கின் செய்வதற்கு உங்களுடைய லாகின் ஐடியை டைப் செய்து CONTINUE என்பதை கிளிக் செய்யவும்.

கிளிக் செய்தவுடன் உங்களுடைய Password-ஐ டைப் செய்யுங்கள், பின்பு Characters codeஐ டைப் செய்யுங்கள். பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள லாகின் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். இப்பொழுது உங்களுடைய Account லாகின் ஆகிவிடும்.

How to Apply Passport Online in Tamil  Step: 3

லாகின் செய்தபிறகு மேலே கொடுக்கப்பட்டுள்ள திரை இப்பொழுது திறக்கப்படும் அவற்றில், நாம் முதல் முதலாக பாஸ்போர்ட் அப்ளை செய்வதினால் Apply for fresh(புதிய) passport என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

Passport Apply Seivathu Eppadi in Tamil step: 4

Apply for fresh passport ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் மேலே கொடுக்கப்பட்டுள்ள திரை திறக்கப்படும். இவற்றில் Applying for என்ற இடத்தில் Fresh passport என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு Type of application என்ற இடத்தில் Normal என்பதை கிளிக் செய்ய வேண்டும். உங்களுக்கு Talkal முறையில் பாஸ்போர்ட் வேண்டும் என்றால் Talkal Options கிளிக் செய்து கொள்ளவும். Type of passport booklet என்ற ஆப்ஷனில் உங்களுக்கு எத்தனை Pages வேண்டும் என்பதை தேர்வு செய்துகொள்ளுங்கள்.

அதாவது நீங்கள் அதிகமாக வெளிநாட்டிற்கு பயணம் செய்ப்பவர்களாக இருந்தால். 60 pages என்பதை கிளிக் செய்யுங்கள் இல்லை என்றால் 36 pages என்பதை கிளிக் செய்யுங்கள்.

இப்பொழுது Next என்ற ஆப்ஷனை செய்யுங்கள்.

How to Apply Passport Online in Tamil step: 5

Next பட்டனை கிளிக் செய்தவுடன் Application Details என்ற பேஜ் ஓபன் ஆகும் அவற்றில் தங்களுடைய பெயர், தங்களுடைய தந்தையின் பெயர், பிறந்த இடம், பிறந்த தேதி, பாலினம், married & unmarried போன்று மேல் கூறப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். பின்பு I Agree என்பதை கிளிக் செய்த பின்பு next பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

Passport Apply Seivathu Eppadi in Tamil Step: 6

இப்பொழுது Family details என்ற பேஜ் திறக்கப்படும் அவற்றில் தங்களுடைய தந்தை மற்றும் தாயின் பெயரை டைப் செய்ய வேண்டும். தங்களுக்கு விருப்பமிருந்தால் Guardian’s என்ற இடத்தில் தங்களுடைய Guardian’s பெயரை டைப் செய்துகொள்ளுங்கள்.  பின்பு NEXT பட்டனை கிளிக் செய்யுங்கள்.

Passport Apply Seivathu Eppadi in Tamil Step: 7

இப்பொழுது present residential address என்ற பேஜ் ஓபன் ஆகும். அவற்றில் உங்களுடைய உண்மையான முகவரியை நிரப்ப வேண்டும். அதாவது உங்கள் ஆதார் கார்டில் கொடுக்கப்பட்டுள்ள, முகவரியை தெளிவாக நிரப்புங்கள்.

பின்பு police station என்ற இடத்தில் உங்கள் ஏரியாவிற்குரிய காவல் நிலையத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள், is your permanent address என்ற இடத்தில் yes என்பதை கிளிக் செய்யுங்கள். பிறகு next பட்டனை கிளிக் செய்யவும்.

Passport Apply Seivathu Eppadi in Tamil Step: 7

பின்பு  Emergency contact என்ற பேஜ் திறக்கப்படும் அவற்றில் தங்களுடைய நண்பர்கள் அல்லது தங்கள் குடுப்பத்தில் உள்ளவர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை டைப் செய்து NEXT பட்டனை கிளிக் செய்யுங்கள்.

Passport Apply Seivathu Eppadi in Tamil step: 8

இப்பொழுது  Identity certificate/passport details என்ற பகுதி திறக்கப்படும் அவற்றில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியான விவரங்களை தேர்வு செய்து. NEXT பட்டனை கிளிக் செய்யுங்கள்.

Passport Apply Seivathu Eppadi in Tamil Step: 9

அடுத்ததாக Other Details என்ற பேஜ் திறக்கப்படும் அவற்றில் உங்கள் மீது ஏதாவது போலீஸ் கேஸ் உள்ளதா என்ற சில வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும். அவற்றில் உங்கள் மீது ஏதாவது கேஸ் இருந்தால் அதற்கு மட்டும் yes என்பதை கிளிக் செய்யுங்கள். உங்கள் மீது இந்த விதமான கேசும் இல்லையெனில் அனைத்து கேள்விகளுக்கும் no என்பதை கிளிக் செய்து விட்டு next என்பதை கிளிக் செய்யுங்கள்.

Passport Apply Seivathu Eppadi in Tamil Step: 10

 

இப்பொழுது மேல் கொடுக்கப்பட்டுள்ள படத்தை போல் உங்களுடைய passport preview details கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றை ஒன்றிற்கு இரண்டுமுறை அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என்பதை சரி பார்த்த பின்பு next பட்டனை கிளிக் செய்யுங்கள்.

Passport Apply Seivathu Eppadi in Tamil Step: 11

பின்பு மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தை போல் ஒரு பேஜ் திறக்கப்படும் அவற்றில் passport office-யில் verification செய்வார்கள். எனவே இந்த பேஜியில் கேட்கப்படும் சில விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். பின்பு I Agree என்பதை கிளிக் செய்து. பின்பு submit form என்பதை கிளிக் செய்யுங்கள்.

பின்பு next பேஜில் உங்களுக்கான reference number கொடுக்கப்பட்டிருக்கும் அந்த நம்பரை நோட் செய்து கொள்ளவும்.

பின்பு அந்த பேஜிலேயே pay and schedule appointment என்ற ஆப்சன் இருக்கும் அவற்றை கிளிக் செய்யுங்கள்.

பிறகு மற்றொரு பகுதி ஓபன் ஆகும், அவற்றிலும் next என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.

பின்பு மற்றொரு பேஜ் ஓபன் ஆகும் அவற்றில் என்னென்ன மாவட்டங்களில் என்னென்ன தேதியில் appointment available-லாக உள்ளது என்று கொடுக்கப்பட்டிருக்கும், அவற்றில் தங்களுடைய மாவட்டத்திற்கு என்ன தேதியில் appointment வழங்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பின்பு உங்களுடைய reference number, உங்களுடைய லொகேஷனை தேர்வு செய்யுங்கள், பின்பு Characters codeஐ டைப் செய்து, next பட்டனை கிளிக் செய்யுங்கள்.

Passport Apply Seivathu Eppadi in Tamil Step: 12

பிறகு அடுத்த பகுதியில்  pay and book appointment என்ற பேஜ் திறக்கப்படும். அவற்றில் உங்களுக்கான கட்டணம் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றை சரி பார்த்தபின்பு  pay and book appointment என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

உங்களுடைய விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன், ஆஃப்லைன் என்ற இரண்டு முறை மூலம் செலுத்தலாம். அவற்றில் தங்களுக்கு எது வசதியாக இருக்குமோ அவற்றின் மூலம் இந்த விண்ணப்ப கட்டணத்தை செலுத்துங்கள்.

இருப்பினும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவதும் மிகவும் சிறந்தது. ஆன்லைன் மூலம் செலுத்துவதாக இருந்தால் NEXT பட்டனை கிளிக் செய்யுங்கள்.

NEXT  பேஜியில் உங்களுடைய கட்டணந்த்தை நெட் பேங்க், கிரிட் கார்ட், டெபிட் கார்ட் மூலமாக செலுத்த சில ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றில் ஏதேனும் ஒன்றை கிளிக் செய்து, ஆன்லைன் மூலம் கட்டணத்தை மிக எளிதாக செலுத்துவிடலாம்.

பணம் செலுத்திய பின்பு உங்களுக்கான payment receipt & appointment Sheet இரண்டும் வரும் அவற்றை தாங்கள் பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள்.

இந்த இரண்டு receipt-வுடன் தங்களுடைய ஆதார் கார்ட், 10-th  mark sheet ஆகியவற்றை தங்களுக்கு வழங்கப்பட்ட appointment அன்று passport office-க்கு எடுத்து செல்ல வேண்டும்.

அவ்வளவுதாங்க ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் அப்ளை செய்யும் முறை.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தொழில்நுட்ப செய்திகள்
Advertisement