How to Check Fake Notes in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்.. கள்ள நோட்டுகள் அதிகம் புழங்கி வரும் சூழ்நிலையில் நாம் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா? சரி நாம் பயப்படும் பணம் நல்ல நோட்டா? கள்ள நோட்டா என்பதை நாம் எப்படி தெரிந்துகொள்வது. அதை பற்றிய தகவல்களை இணைத்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
நல்ல நோட்டிற்கு என்னென்ன அம்சங்கள்?
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய 2000, 500 ரூபாய் தாள்களில் முதல் முறையாக தேவநாகரி எழுத்துகள் இடம் பெற்றுள்ளன. ஆக உங்கள் 500, 1000 பந்தில் தேவநாகரி எழுத்துக்கள் உள்ளதா என்பதை கவனிக்கவும்.
அதன் பிறகு காந்தியின் உருவம், ரிசர்வ் வங்கியின் பெயர், சின்னம், ரிசர்வ் வங்கி ஆளுனரின் கையெழுத்து ஆகியவை இடம் பெற்றிருக்கும். அவற்றை தடவி பார்த்தால் உணரும் வகையில் இருக்கும். இதன் மூலம் நல்ல பணமா? கள்ள பணமா என்பதை நாம் உறுத்தி செய்துகொள்ள முடியும்.
அதோடு காந்தியின் உருவப்படம் வலது பக்க மையத்தில் இருக்கும்.
அதே போல் 500 ரூபாய் என்று எழுத்தால் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களும் பச்சை நிறத்தில் இருந்து நீல நிறமாக மாறும்.
500 ரூபாய் பணத்தின் வலது பக்கத்தில் அரை வட்டமான இடத்தில் 500 ரூபாய் என்று எழுதப்பட்டிருக்கும்.
ரூபாய் பணத்தின் வலது பக்கத்தில் அசோகத் தூண் இருக்கும்.
ரூபாயின் சீரியல் நம்பர், அச்சிடப்பட்ட ஆண்டு ஆகியவைகள் சரியாக குறிப்பிட்டிருக்கும். இவற்றை சரி பார்க்கலாம்.
புதியதாக வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டில் தூய்மை இந்தியா திட்டத்தின் குறியீடு மற்றும் பிரச்சார வாக்கியம் குறிப்பிட்டிருக்கும். ஆக அதை வைத்து கூட நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம்.
மேலும் ரூபாய் நோட்டின் மையப்பகுதியில் 500 ரூபாய் என்று இருக்கும். இதனை வெளிச்சத்தில் காணலாம். இது ஒளிபுகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டின் வலது கீழ் பகுதியில் எண்கள் இருக்கும். இது சிறியதில் இருந்து பெரியதாக செல்லும்.
அதே போல மையப்பகுதியில் உள்ள மகாத்மா காந்தியின் படத்தின் அருகில் மிகச் சிறிய எழுத்துகளில் RBI மற்றும் 500 போன்றவை உள்ளன.
மகாத்மா காந்தியின் புகைப்படம் மற்றும் 500 என்பது வாட்டர் மார்க்கும் அச்சிடப்பட்டுள்ளது.
கண் பார்வை திறன் குறைவாக இருப்பவர்களுக்கு ஏற்ப, ரூபாய் நோட்டின் இடது மற்றும் வலது ஓரத்தில் ஐந்து கோடுகளும், வலது புறத்தில் கிடைமட்ட செவ்வகமாக 500 ரூபாய் எனவும் இருக்கும்.
இந்த நோட்டின் அளவு 66mmX150 mm-யில் இருக்கும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |