நீதிமன்ற தீர்ப்பை ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்வது ரொம்ப ஈஸிங்க..!

Advertisement

How to Download Court Judgement Copy in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம் இன்றைய பதிவில் நாம் என்ன தெரிஞ்சிக்க போறோம் அப்படின்னா.. நீதிமன்றத்தில் நீங்கள் ஏதாவது கேஸ் நடத்தி அதற்க்கான ஜுட்ஜ்மெண்ட் வந்திருந்தால். அந்த Judgement-ஐ எப்படி ஆன்லைன் மூலமாகவே வீட்டில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். ஆக அதனை தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பருங்கள். சரி வாங்க நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை எப்படி ஆன்லைனில் டவுன்லோட் செய்வது என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.

நீதிமன்ற தீர்ப்பை ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்வது எப்படி?

முதலில் https://ecourts.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள்.

பிறகு அந்த இணையதளத்தின் முகப்பு பகுதியை ஸ்க்ரால் செய்து கீழே வாருங்கள். அப்படி ஸ்கிரால் செய்யும்பொழுது District Court Services என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

கிளிக் செய்த உடன் இன்னொரு பக்கம் திறக்கப்படும், அவற்றில் நீங்கள் Court Orders என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

பின் அவற்றில் உங்களது மாநிலம், மாவட்டம், மற்றும் கேஸ் நடத்தப்பட்ட நீதிமன்றம் ஆகியவற்றை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு Petitioner / Respondent என்பதில் Petitioner பெயரை உள்ளிட்ட வேண்டும், year என்பதில் எந்த ஆண்டு கேஸ் நடத்தப்பட்டது அதனை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

பிறகு Captcha கோட் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை சரியாக உள்ளிட்டு Go என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய 10 நிடங்கள் காத்திருக்கவும்.

10 நிமிடம் கழித்து அந்த பேஜ் லோட் ஆகி முடிந்திருக்கும் இப்பொழுது அந்த பக்கத்தில் Sr No / Case Types/ Case Number / Case Year/ Petitioner Vs respondent/ order Date/ orders ஆகியவரி கொடுக்கப்பட்டிலும் ஆக அந்த பக்கத்தை ஸ்கிரால் செய்யும் போது அந்த ஆண்டு நடைபெற்ற உத்தரவுகள் மற்றும் இறுதித் தீர்ப்புகளை அறிந்து கொள்ள இயலும்.

ஆக அவற்றில் உங்கள் பெயர் சரியாக உள்ளதா என்பதை சரி பார்த்தபிறகு அவற்றில் Copy of Judgement என்ற இருக்கும் அதனை கோப்பி செய்தீர்கள் என்றால் உங்களது Judgement PDF வடிவில் இருக்கும் அதனை நீங்கள் Download செய்துகொள்ளலாம்.

அவ்வளவு தான் process ட்ரை செய்து பாருங்கள் நன்றி வணக்கம்..!

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement