மீன் வளர்க்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்..!

தொட்டியில் மீன் வளர்ப்பு முறை 

மீன் வளர்க்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் (How to Maintain Fish Tank in Tamil)..!

தொட்டியில் மீன் வளர்ப்பு முறை:- நம்மில் பலருக்கு வீட்டில் மீன் வளர்க்கும் பழக்கம் இருக்கும். இருப்பினும் அவற்றை எப்படி பராமரிப்பது என்று தெரியாது. ஒரு தொட்டியில் மீன் வளர்க்கும் போது அந்த மீன்கள் சாகாமல் இருக்கவும், அவற்றை சரியாக பராமரிப்பது எப்படி என்று இங்கு நாம் தெரிந்து கொள்வோம். இறுதிவரை இந்த பதிவை முழுமையாக படியுங்கள்.

சரி வாங்க தொட்டியில் மீன் வளர்ப்பு முறையில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களை தெரிந்து கொள்வோம்.

சுத்தமான தேனை கண்டுபிடிப்பது எப்படி? இதோ சில வழிகள்..!

தொட்டியில் மீன் வளர்ப்பு முறை டிப்ஸ்: 1

How to Maintain Fish Tank in Tamil: மீன் தொட்டியில் உள்ள தண்ணீரை அடிக்கடி மாற்ற வேண்டும். மீன்கள் அதிக அளவான கழிவுகளை வெளியிடும், காலப்போக்கில் இந்த கழிவுகள் கெட்ட பாக்டீரியாக்களை உருவாக்கும், இதனால் தண்ணீரில் விஷத்தன்மை அதிகரித்து மீன்கள் இறந்துபோகவும் அதிக வாய்ப்புள்ளது. எனவே தண்ணீரை அடிக்கடி மாற்ற வேண்டும்.

அதேபோல் தண்ணீரை மாற்றி விட்டு மீனை தொட்டியில் விடுவதற்கு முன் அந்த நீரில் சிறிதளவு உப்பை போடவும்.

உப்பிற்கு ஒரு சில பாக்டீரியாவை அழிக்கும் தன்மை உள்ளது. அந்த வகையான பாக்டீரியாக்கள் அழித்து விட்டது என்றால் மீனிற்கும் எந்த வகையான பாதிப்புகளும் இருக்காது.

தொட்டியில் மீன் வளர்ப்பு முறை டிப்ஸ்: 2

How to Maintain Fish Tank in Tamil: தண்ணீரில் உள்ள Temperature-ஐ எப்பொழுதும் Maintenance செய்ய வேண்டும். தண்ணீரில் உள்ள Temperature குறைந்தாலும் சரி அல்லது அதிகரித்தாலும் சரி மீன்களுக்கு அதிக வலிகளை ஏற்படுத்தும்.

வலிகள் அதிகரித்தால் மீன்களுக்கு எதிர்ப்பு சக்தி குறையும், இதனால் அந்த மீன்கள் இறக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளது.

எவ்வளவு Temperature இருக்க வேண்டும் என்றால் 75 டிகிரி ஃபார்கென் மற்றும் 24 டிகிரி செல்சியஸ் இருந்தாலே போதும். மீன்களுக்கு தேவையான Temperature இருக்கும்.

ஒவ்வொரு மீனும் ஒவ்வொரு Temperature-யில் இருக்கும். எனவே மீன் வாங்கும் கடைகளில் நீங்கள் வாங்கும் மீனிற்கு எவ்வளவு Temperature என்று கேட்டு தெரிந்து கொள்ளவும்.

லேப்டாப் சூடாவதை தடுப்பது எப்படி? பயனுள்ள தகவல்கள்..!

தொட்டியில் மீன் வளர்ப்பு முறை டிப்ஸ்: 3

How to Maintain Fish Tank in Tamil:- உங்கள் வீட்டில் உள்ள மீன் தொட்டியை டெக்ரேட் செய்யுங்கள், அதாவது கடல் சூழ்நிலையை உருவாக்குங்கள். அதாவது கடலுக்குள் இருக்கும் தாவரங்கள் போல ஒரு மாயையை ஏற்படுத்துங்கள்.

அதாவது பாசி, கற்கள், செடி, கொடிகள் எல்லாம் வளர்ப்பு மீன்கள் விற்கப்படும் கடைகளிலேயே கிடைக்கும் அங்கேயே வாங்கிக்கொள்ளலாம்.

தொட்டியில் மீன் வளர்ப்பு முறை  டிப்ஸ்: 4

How to Maintain Fish Tank in Tamil:- மீன் தொட்டியில் உள்ள தண்ணீரை எப்போதும் முழுமையாக மாற்றக்கூடாது. ஒவ்வொரு வாரமும் 10-12 சதவீத அளவு தண்ணீரை தான் மாற்ற வேண்டும். தொட்டியில் வடிகட்டுதல் அமைப்பு நிறுவப்பட்டிருந்தால், 30-50 சதவீத தண்ணீரை ஒரு மாதத்திற்கு பிறகு கூட மாற்றலாம்.

தொட்டியில் மீன் வளர்ப்பு முறை டிப்ஸ்: 5

How to Maintain Fish Tank in Tamil:- மீன்களுக்கு என தனியாக உணவுகள் உள்ளன. தையோ, டோக்கியோ, ட்ராகோ போன்ற பிராண்ட் உணவு, வைட்டமின் உணவு, பதப்படுத்தப்பட்ட டிரை வார்மஸ் என்று பல வகைகள் உள்ளன. காலை ஒரு முறை மாலை ஒரு முறை என்று உணவளித்தால் போதும்.

மீனிற்கு உணவு அளிக்கின்றேன் என்று அதிகமாக உணவுகளை கொட்டிவிட கூடாது, கொஞ்சம் கொஞ்சமாக தான் தர வேண்டும்.

தொட்டியில் மீன் வளர்ப்பு முறை டிப்ஸ்: 6

How to Maintain Fish Tank in Tamil:- மீன்களுக்கு chlorophyll மிகவும் அவசியம். இது ஒருவகையான கெமிக்கல், இந்த கெமிக்கல் மீன்களின் ஆயுளை அதிகரிக்க உதவுகிறது.

எனவே வாரத்தில் ஒரு முறை இந்த chlorophyll கெமிக்கலை மீன் தொட்டியில் சிறிதளவு ஊற்றி விடுங்கள்.

தமிழ்நாட்டில் உள்ள ஆன்லைன் சேவைகள்..! online services list in tamilnadu

தொட்டியில் மீன் வளர்ப்பு முறை டிப்ஸ்: 7

How to Maintain Fish Tank in Tamil:- மீன்கள் சுவாசிப்பதற்கு அதிக அளவில் ஆக்ஸிஜன் தேவைப்படும். இல்லையென்றால், அவைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும். எனவே மீன்களுக்கு ஆக்ஸிஜன் கிடைக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com