How to Transfer Property From Grandfather to Grandson in Tamil
வணக்கம் நண்பர்களே.! தினமும் பொதுநலம்.காம் பதிவில் பட்டா விவரம், நிலம் மற்றும் சொத்துக்கள் போன்ற விவரங்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவு என்னவென்றால் தாத்தா பெயரில் உள்ள சொத்து பட்டாவை பேரன் பெயரில் மாற்றுவது எப்படி.? என்பது தான். இன்றைய காலத்தில் அனைவரது வீட்டிலும் இருக்கும் பெரும் பிரச்சனை என்றால் அது சொத்து பிரச்சனை தான். அதற்கு காரணம் அந்தந்த காலத்தில் சொத்தை பாகப்பிரிவினை செய்யாமல் காலம் தாழ்த்தி சொத்தை பிரிப்பதே ஆகும். எனவே அனைவரும் அந்தந்த காலத்தில் சொத்து பட்டாவை மாற்றி கொள்ள வேண்டும். ஓகே வாருங்கள் தாத்தா பெயரில் உள்ள சொத்தை உங்கள் பெயருக்கு எப்படி மாற்றுவது எப்படி? அதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்.? போன்ற விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம் வாங்க.
வாரிசு இல்லாத சொத்து யாருக்கு சொந்தம் தெரியுமா..? |
தாத்தா பெயரில் உள்ள பட்டாவை பேரன் பேருக்கு மாற்றுவது எப்படி.?
தாத்தா பெயரில் சொத்து பட்டா இருக்கிறது. ஆனால் தாத்தா இறந்து விட்டார் என்றால் அந்த சொத்து தாத்தாவின் வாரிசுகளுக்கு தான் முதலில் சேரவேண்டும். அதாவது அவரின் மகன் மகள்களுக்கு தான் சேர வேண்டும். பிறகு தான் பேரன் பேத்திகளுக்கு சேரும்.
ஆனால் தாத்தாவும் இறந்து, தாத்தா பெற்ற பிள்ளைகளும் இறந்து விட்டார்கள் என்றால் அந்த சொத்து பேரக்குழந்தைகளுக்கே சொந்தம். அந்த வகையில் தாத்தா பெயரில் உள்ள பட்டாவை பேரக்குழந்தைகளுக்கு மாற்றுவதற்கு முதலில் தாத்தாவின் இறப்பு சான்றிதழ், தாத்தா பெயரில் உள்ள பட்டா, பத்திரம் மற்றும் தாத்தாவிற்கு யார் யார் வாரிசுகளோ அவர்களின் வாரிசு சான்றிதழ் போன்றவற்றை எடுத்து கொண்டு கிராம அலுவலகத்திற்கு அல்லது இ சேவை மையத்திற்கு சென்று தாத்தா பெயரில் உள்ள பட்டாவை பேரக்குழந்தைகளின் பெயரில் கூட்டு பட்டாவாக மாற்றி கொள்ள வேண்டும்.கூட்டு பட்டாவாக மாற்றிய பிறகு பேரக்குழந்தைகள் 2 பேர் இருந்தால் ஒவ்வொருவரின் பெயரில் தனி பட்டாவாக மாற்றி கொள்ள வேண்டும்.
தொடர்புடைய பதிவுகள் |
வாரிசுகளின் பெயரில் பட்டா மாற்றுவது எப்படி தெரியுமா..? |
பட்டா சிட்டா மாற்றுதல் இனி எளிது.! அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது |
பட்டாவை பத்திரமாக மாற்றுவது எப்படி |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |