How To Transfer Title To Non-Parent Property
ஹலோ நண்பர்களே..! பொதுநலம் பதிவின் வாசகர்களுக்கு ஒரு பயனுள்ள பதிவை கூற போகிறேன் என்பதில் மிக்கமகிழ்ச்சி. நீங்களும் இந்த பதிவை படித்து முடிக்கும் போது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டோம் என்ற மனத்திருப்தி இருக்கும். அப்படி என்ன தகவல் என்று யோசிப்பீர்கள். நாம் தினம் இந்த பதிவின் மூலம் சொத்துகள் மற்றும் நிலங்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று பெற்றோர்கள் இல்லாத சொத்திற்கு பட்டா மாற்றுவது எப்படி என்று தெரிந்து கொள்ள போகிறோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்..!
வாரிசுகளின் பெயரில் பட்டா மாற்றுவது எப்படி தெரியுமா |
பெற்றோர்கள் இல்லாத சொத்திற்கு பட்டா மாற்றுவது எப்படி..?
பொதுவாக ஒரு குடும்பத்தில் 3 குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால் தாய் மற்றும் தந்தை இருவருமே இல்லாத போது அவர்களின் பெயரில் இருக்கும் சொத்திற்கு பட்டா மாற்றுவது எப்படி என்பதை பற்றி தான் இந்த பதிவில் காண இருக்கின்றோம்.
பட்டா மாற்றுவதற்கு தந்தை மற்றும் தாய் இருவரின் இறப்பு சான்று, வாரிசு சான்று, மற்றும் தந்தை அல்லது தாய் பெயரில் உள்ள பட்டா போன்றவற்றை வைத்து வாரிசுகள் அதாவது பிள்ளைகள் தங்கள் பெயரில் நேரடியாக பட்டா மாற்றி கொள்ள முடியும்.அதுமட்டுமில்லாமல் அவர்களின் பெயரில் இருக்கும் பட்டாவை பாகபிரிவினை பத்திரமாக பதிவு செய்து பத்திரத்தை வைத்து தனி தனியாக பட்டா மாற்றி கொள்ளலாம். அதாவது 3 பிள்ளைகளும் அவரவர் பெயர்களில் தனி தனியாக பட்டா மாற்றி கொள்ள முடியும்.
வாரிசு இல்லாத சொத்து யாருக்கு சொந்தம் தெரியுமா |
பட்டா மாற்ற எங்கு செல்ல வேண்டும்..?
- பெற்றோர்கள் இல்லாத சொத்திற்கு பட்டா மாற்ற இ-சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
- பின் உங்களுக்கு ஒரு அந்த ஒப்புகைசீட்டு கொடுப்பார்கள். அதனுடன் இறப்பு சான்று, வாரிசு சான்று, பட்டா, வில்லங்கச்சான்று மற்றும் மனு ஒன்றை எழுதி, அதை உங்கள் கிராம நிர்வாக அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.
- அவர் அந்த மனுவை பரிசிலனை செய்து உங்களுக்கு புதிய பட்டா வழங்குவார்.
- மேலும் மனு எழுதி அதை கிராம நிர்வாக அலுவலரிடம் அளிப்பதற்கு முன் ஒரு நகல் எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
பாட்டி சொத்து யாருக்கு சொந்தம் உங்களுக்கு தெரியுமா |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |