ஒருவர் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை இன்னொருவருக்கு மாற்றுவது எப்படி? தெரிஞ்சிக்கலாம் வாங்க!

How to transfer train ticket to another person in tamil

ஒருவர் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை இன்னொருவருக்கு மாற்ற வேண்டுமா? அப்போ இதை செய்தலே போதும்

ரயிலில் ரொம்ப தூரம் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்துகொள்ளும் வசதி உள்ளது என்பதும் அனைவருக்குமே தெரிந்திருக்கும். இந்த முன்பதிவு வசதியை பயன்படுத்திக்கொண்டு நமது நீண்ட தூர பயணத்தை மிக இனிமையாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சென்று வரலாம். இருப்பினும் சில நேரங்களில் நாம் முன்பதிவு செய்த பிறகு நம்மால் அந்த பயணத்தை மேற்கொள்ள முடியாத சில சூழ்நிலைகள் ஏற்படலாம். அப்பொழுது நாம் மிகவும் கவலை படுவோம் ஆஹா ட்ரைன் டிக்கெட் புக் பண்ணியாச்சே டிக்கெட் புக் செய்ச்சத்துக்கான பணம் வேஷ்டா போயிடிச்சேன்னு ரொம்ப வறுத்த படுவோம். இனி அப்படி வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை ஏன் அப்படின்னா நாம் முன்பதிவு செய்த ட்ரைன் டிக்கெட்டை இன்னொருவருக்கு எளிதாக பற்றிவிடலாம் அதற்கான வழிமுறைகளை தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். சரி வாங்க அது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.

ஒருவர் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை இன்னொருவருக்கு மாற்றுவது எப்படி? தெரிஞ்சிக்கலாம் வாங்க! How to Transfer Train Ticket to Another Person in Tamil

முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை பயன்படுத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அதனை கேன்சல் செய்யாமல் அதை வேறொருவருக்கு மாற்று வசதியை IRCTC செய்து கொடுத்துள்ளது. அந்த வசதி குறித்து தற்போது பார்ப்போம்.

ரயில்வேயின் புதிய விதிகளின்படி, ஒரு பயணி தனது உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை தந்தை, தாய், சகோதரன், சகோதரி, மகன், மகள், கணவன் அல்லது மனைவி போன்ற அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் மாற்ற முடியும்.

ஆனால் இந்த வசதியை, ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன் பயணிகள் கோரிக்கை விடுக்க வேண்டும். இதற்குப் பிறகு, பயணச்சீட்டில் பயணிகளின் பெயர் நீக்கப்பட்டு யாருடைய பெயரில் டிக்கெட் மாற்றப்பட்டுள்ளதோ அந்த உறுப்பினரின் பெயர் எழுதப்படும்.

ரயில் டிக்கெட்டுகளை மாற்றுவது ஒரு முறை மட்டுமே செய்ய முடியும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. அதாவது ஒரு பயணி தனது பயணச்சீட்டை வேறு ஒருவருக்கு மாற்றியிருந்தால், அந்த டிக்கெட்டை பின்னர் வேறு யாருக்கும் மாற்ற முடியாது. எனவே, நீங்கள் ஏற்கனவே ஒருவருக்கு டிக்கெட்டை மாற்றியிருந்தால், இரண்டாவது முறையாக இந்த சேவையை பெற முடியாது.

டிக்கெட் பரிமாற்ற வழிகாட்டுதல்கள் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன் டிக்கெட் மாற்றும் கோரிக்கையை எழுப்ப வேண்டும். ஏதேனும் திருவிழா, திருமண நிகழ்வு அல்லது ஏதேனும் தனிப்பட்ட பிரச்சனை இருந்தால், பயணிகள் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக டிக்கெட்டை மாற்றி கொள்ளலாம்.

நீங்கள் டிக்கெட்டை மாற்ற விரும்பும் நபரின் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டையை உங்கள் அருகில் உள்ள ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு கவுண்டருக்கு எடுத்து சென்று டிக்கெட் பரிமாற்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலமும் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.

 இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 நீதிமன்ற தீர்ப்பை ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்வது ரொம்ப ஈஸிங்க..!

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>www.pothunalam.com