Hypoxemia meaning in Tamil
ஹாய் நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது நாம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள ஒரு தகவல் பற்றி தான். அது என்ன தகவல் என்றால் Hypoxemia பற்றிய தகவல் தான் தெரிந்துகொள்ள போகின்றோம். நம்மில் இந்த Hypoxemia பற்றி தெரிந்திருக்கும் ஆனால் சிலருக்கு தெரிந்திருக்காது. அப்படி தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை Hypoxemia பற்றிய முழுவிரங்களையும் இந்த பதிவில் காணலாம்.
Hypoxemia Information in Tamil:
Hypoxemia என்பது இரத்தத்தில் உள்ள ஆக்சிஜனின் குறைந்த அளவை குறிக்கிறது. மேலும் குறிப்பாக, இது தமனி இரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைபாடு ஆகும். ஹைபோக்ஸீமியா பல காரணங்களால் ஏற்படுகிறது.
உதாரணமாக ஆஸ்துமா, நிமோனியா மற்றும் நாள்பட்ட தடிப்பு நுரையீரல் நோய் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஹைபோக்ஸீமியா ஏற்படுகிறது. மேலும் இந்த ஹைபோக்ஸீமியா பாதிப்பினால் இரத்தம் உடலின் திசுக்களுக்கு போதுமான ஆக்ஸிஜனை வழங்காததால் பெரும்பாலும் ஹைபோக்ஸிமியாவை ஏற்படுத்துகிறது.
ஆக்ஸிஜனின் பகுதியளவு அழுத்தம் இயல்பை விட குறைவாக இருப்பதைக் காட்டும் தமனி இரத்த வாயு அளவீடு ஹைபோக்ஸீமியாவை உருவாக்குகிறது என்று பொதுவான கருத்துக்கள் உள்ளது.
அறிகுறிகள்:
கடுமையான சூழலில் ஹைபோக்ஸீமியா சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். குறிப்பாக மூச்சுத் திணறல் இதன் அறிகுறிகளே ஆகும்.
ஹைபோக்ஸீமியாவின் மற்ற அறிகுறிகளில் சைனஸ், இருமல் மற்றும் இரத்தக் கசிவு உள்ளிட்டவையும் ஹைபோக்ஸீமியாவின் காரணத்துடன் தொடர்புடைய அறிகுறிகளில் அடங்கும்.
காரணங்கள்:
பொதுவாக நுரையீரலுக்கு செல்லும் காற்றின் அளவு குறைவதால் நுரையீரலில் இருந்து இரத்தத்திற்கு காற்றை மாற்றுவது பாதிப்படைவதால் ஹைபோக்ஸீமியா ஏற்படுகிறது.
ஒரு மனிதனுக்கு எவ்வளவு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |