Jowar in Tamil
வணக்கம் நண்பர்களே இன்று நம் பொதுநலம். காம் பதிவில் Jowar என்றால் என்ன, அவற்றை பற்றிய சில அற்புதமான தகவல்களை பற்றித்தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். இவை இந்திய முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு ஆரோக்கியமான உணவு பொருள் ஆகும். இவற்றிக்கு பல வேறு பெயர்களும் உண்டு. மேலும் இவற்றில் உள்ள சத்துக்கள் என்னவென்றும், இவை எதற்காக பயன்படுத்தப்டுகிறது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.
பாப்பரை எனும் மரகோதுமை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் உங்களுக்கு தெரியுமா..? |
ஜோவர் என்றால் என்ன?
ஜோவர் என்பது தமிழில் சோளம் என்று அழைக்கபடுகிறது. இந்த சோளத்தை ஜாவரி, ஜோவர், ஜோலா, ஜோன்தலா என பல்வேறு பெயர்களையும் கொண்டுள்ளது. ஆங்கிலத்தில் Sorghum என அழைக்கப்படும்
சோளம் என்பது இலங்கையில் இறுங்கு என்பது புல்வகை இனத்தை சேர்ந்த பல இனங்களை உள்ளடக்கிய தாவர பேரினம் என்றும் சொல்லப்படுகிறது.
இவை தனியங்களுக்காகவும், கால்நடை தீவனங்களாகவும் பயிரிடப்படுகிறது. சில வகைகள் மேய்ச்சல் நிலத்தில் இயற்கையாகவே வளர்கிறது. இவை மிதமான வெப்பத்தை கொண்ட இடங்களில் மட்டும் பயிரிடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் அரிசி மற்றும் கோதுமைக்கு பிறகு இந்த சோளம் மிகவும் முக்கியமான ஒரு உணவு பொருளாக இருக்கிறது.
ஜோவர் இனம்:
இந்த சோளமானது சொர்ஃகம் வல்கரே எனும் தாவர குடும்பத்தை சேர்ந்தவையாகும். ஆசியா மற்றும் ஆப்ரிக்காவில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் உணவு பொருளாகும். மேலும் இவை அந்த பகுதிகளில் நிலையான புரதச்சத்து கிடைக்கவும் உதவியாக இருக்கிறது. மேலும் இந்த சோளம் வளர்வதற்கு தனி கவனம் எடுக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.
Solam in Tamil:
சோளம் மொத்தம் 30 வகைகளை கொண்டுள்ளது. அதில் ஒரு வகை மட்டும்தான் மனிதர்கள் உணவுக்காக எடுத்து கொள்ளும் வகையாகும். இவை உலகில் ஐந்தாவது முக்கிய தானியம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சோளமானது பல வகையான உணவு பொருட்களுக்கு மட்டும் பயன்படுவதுமட்டுமின்றி பல ஆரோக்கிய நன்மைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இவற்றில் உள்ள நன்மைகள் என்னவென்று பார்க்கலாம்.
Solam Benefits in Tamil:
100 கிராம் சோளத்தில் பல வகையான சத்துக்கள் உள்ளன. அதாவது ஆற்றல் – 334.13 கி.கலோரி சி.எச்.ஓ – 67.68 கிராம் புரோட்டின் – 9.97 கிராம் கொழுப்பு -1.73 கிராம் பைபர் -10.22 கிராம் தயாமின்- 0.35 மில்லி கிராம் ரிபோப்ளாவின் -0.14 மில்லி கிராம் நியாசின்-2.1 மில்லி கிராம் போலேட்- 39.42 மில்லி கிராம் போன்ற சத்துக்கள் இதில் அடங்கியுள்ளது.
அதோடு கோதுமை, பார்லி, கம்பு போன்ற தானியங்களில் குளூட்டின் என்ற புரதச்சத்துக்கள் அதிகமாக இருக்கிறது, ஆனால் சோளத்தில் கண்டறியப்படவில்லை. எனவே குளூட்டின் சத்து உள்ள உணவு பொருட்களை செலியாக் நோய் உள்ளவர்கள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
இந்த சோளத்தினை உணவில் பயன்படுத்தும் பொழுது உடலில் ஏற்படும் வீக்கம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், தலைவலி, உடல் சோர்வு போன்ற அறிகுறிகளை சரி செய்க்கிறது.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |