கழுதை கெட்ட குட்டி சுவர்
பள்ளி பருவத்தில் நிறைய பழமொழிகளை படித்திருப்போம். சில பழமொழிகளை நிறைய நபர்கள் பயன்படுத்துவார்கள். குறிப்பாக கிராமத்தில் முன்னோர்கள் சொல்லுவார்கள். பழமொழிகளுக்கு ஒரு அர்த்தமாக இருக்கும், நாம் ஒரு அர்த்தத்தை நினைத்து சொல்லுவோம். அதனால் நம் பதிவில் தினந்தோறும் பழமொழிகளுக்கான உண்மையான அர்த்தத்தை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் கழுதை கெட்ட குட்டிச்சுவர் என்ற பழமொழியின் அர்த்தத்தை தெரிந்து கொள்வோம்.
கழுதை கெட்ட குட்டி சுவர் அர்த்தம்:
கழுதை கெட்ட சுவர் என்று அதிகமாக திட்டுவதற்கு பயன்படுத்துவார்கள். பிள்ளைகள் படித்து முடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் நண்பர்களோடு சேர்ந்து குட்டிசுவரின் மேல் உட்கார்ந்து அரட்டை அடிக்கும் பிள்ளைகளை பெற்றோர்கள் இந்த பழமொழியை சொல்லி திட்டுவார்கள்.
இளைஞர்கள் வேலைக்கு செல்லாமல் குட்டிசுவரில் மேல் உட்கார்ந்து அரட்டை அடிப்பதற்கும் பழமொழிக்கு என்ன சம்மந்தம் என்று நினைக்கிறீர்களா.! படிக்காதவர்களை கழுதையுடன் ஒப்பிட்டு பேசுவார்கள். படித்திருந்தாலும், படிக்காதவர்களும் பொழுதை வெட்டியாக கழிப்பதனால் இந்த பழமொழியை சொல்கிறார்கள். படிக்காதவர்கள் எல்லோரும் முட்டாள் அல்ல. படித்தவர்கள் அனைவரும் அறிவாளிகளும் அல்ல படிக்காத முட்டாளாகவே இருந்தாலும் வேலைக்குச் செல்கின்றனர்!. ஆக, படிப்புக்கும் முட்டாள்தனத்துக்கும் வேலைக்குப் போவதற்கும் எப்படி ஒரு சம்மந்தம் இல்லையோ அதைப்போலவே கழுதைக்கும் இதற்கும் ஒரு சம்மந்தம் கிடையாது. உண்மையான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..
“நாங்க எல்லாம் கவரிமான் பரம்பரை” இதற்கு உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா..?
கழுதையின் தோல்களில் புண் அல்லது ஏதவாது அரிப்பு வந்தால் சாதாரணமாக இருக்கும் சுவரை விட பத்தி சேதமடைந்த சுவர்களின் மேல் தேய்த்து கொள்ளுமாம். காரணம் என்னவென்றால் நல்ல சுவற்றில் சொரசொரப்பு தன்மை இருக்காது. சேதமடைந்த சுவர் அதவது குட்டிச்சுவர் மீது தான் தேய்த்து கொள்ளும். கழுதை கெட்டால் என்பது தோல் கெட்டால் என்பது தான் அர்த்தமாகும்.இன்னொரு அர்த்தமாக கழுதையை நன்கு பராமரிக்க வேண்டும். அதற்கு நேரத்திற்கு உணவு, நீர் போன்றவையும் அதனை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கழுதை தானே என்று அலட்சியம் செய்தால் கழுதை அதனின் வேலையை சரியாய் செய்யாது. இதனை தான் கழுதை கெடுதல் என்ற பழமொழி கூறுகிறது. கழுதை எந்த வேலையும் செய்யாமல் குட்டிச்சுவர் போல் இருக்கும். இதை தான் கழுதை கெட்டால் குட்டிச்சுவர் என்று சொல்வார்கள்.
கழுதையைப் போல ஒருவன் முட்டாளாக இருந்தாலும் தன் மனநிலை, உடல் நிலை கெட்டுப் போனால் குட்டிச்சுவரைப் போல பயன் இல்லாமல் போகிடுவான்.
‘கன்னத்தில் கை வைக்காதே’ என்று சொல்வதற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா..?
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |