கரிகால் சோழன் வரலாறு – Karikala Cholan History in Tamil

Karikala Cholan History in Tamil

கரிகால சோழனின் வாழ்க்கை வரலாறு..!

Karikala Cholan History in Tamil:- வணக்கம் நமது நாட்டை ஆண்டு வந்த மன்னர்களில் ஒருவர் தான் கரிகால் சோழன். இவர் முற்காலச் சோழர்களில் மிக முக்கியமான மன்னர்களில் ஒருவர் ஆவர். இவர் தந்தையின் பெயர் இளஞ்செட்சென்னி. கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவருக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவருக்கு வழங்கலாயிற்று. கரிகால் சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு சரி இந்த பதிவில் கரிகால சோழனின் வரலாற்றை பற்றி தெரிந்து கொள்வோமா?

கரிகால சோழன் வரலாறு:

முற்காலச் சோழர்களில் மிக முக்கியமான மன்னரான கரிகால சோழனின், ஆட்சிக்காலத்தில் காவிரிப்பூம்பட்டினம் துறைமுக நகரமாக  திகழ்ந்தது. உழவுத் தொழிலை ஊக்குவித்து பல நீர்ப்பாசன திட்டங்களை ஏற்படுத்தினார். உழவுத் தொழிலுக்கு ஊக்குவித்தது போல் கைத்தொழில்களையும் ஆதரித்த மன்னராவார். மேலும் நடனக்கலையை போற்றியவர். ஆட்சி காலத்தில் கிராம பொருளாதாரம் நகர பொருளாதாரமாக வலுப்பெறத் தொடங்கியது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கரிகாலன் தொலைநோக்குடன் சிந்தித்து சோழர்களின் ஒப்பற்ற அரசராக விளங்கினார்.

மேலும் கரிகால சோழன் தனது இளமை வயதில் உறவினர்கள் கரிகாலனை சிறையிலிட்டு நெருப்பு வைத்தனர். இந்நெருப்பில் இருந்து தப்பி குதித்து ஓடியபோது கால் எரிந்துவிடவே கரிகாலன் என்று அழைக்கப்பட்டார்.

சிலப்பதிகாரம் சிறப்புகள்

கரிகால சோழன் சிறப்புகள்:

வெண்ணி போர்:

கரிகால சோழன் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற முதல் பெரும் போர் என்று சொன்னால் அதனை வெண்ணிப்போர் என்று தான் சொல்ல வேண்டும். சோழ அரியணையைக் கரிகாலன் நிலையாகப் பெறுமாறு செய்ததும், தமிழகத்தின் முடியுடைய மூவேந்தர்க்குத் தலைவனாக விளங்குமாறு செய்ததும் இப்போர் தான் என்று குறிப்பிடத்தக்கது.

ஏனென்றால் இவ்வெற்றியின் மூலம் தனக்கெதிராக அமைக்கப்பட்டிருந்த ஒரு பெரும் கூட்டணியை அவர் முறியடித்துவிட்டார். இப்போரில் உதியன் சேரலாதன் கரிகால் வளவனைத் தாக்கினான். அப்போது சிலர், அவனை முதுகுப்பக்கம் தாக்கினர் அப்போது  “முதுகில் காயம் பட்டுவிட்டதே” என்று சேரமான் பெருஞ்சேரலாதன் எண்ணி, தனக்கு பெரும் அவமானம் ஏற்பட்டதாகக் கருதி தன் வாளை நிலத்தில் குத்தி வைத்துக்கொண்டு போரிடாமல் வடக்கு நின்று உயிர் நீத்தான்.

உடுமலை நாராயண கவி

கரிகால சோழன் வாழ்க்கை:

கரிகாலனின் சொந்த வாழ்க்கையைப் பற்றி ஒரு விவரமும் கிடைக்கவில்லை. இவர் பெண்டிருடனும் பிள்ளைகளுடனும் மகிழ்ந்திருந்தார் என்று பட்டினப்பாலை ஆசிரியர் உருத்திரங்கண்ணனார் பொதுப்படையாக கூறுகிறார். நாங்கூரைச் சேர்ந்த வேளிர் குலப்பெண் ஒருத்தியைக் கரிகாலன் மணந்தார் என்று உரையாசிரியர் நச்சினார்க்கினியர் அவரது காலத்தின் நிலவிய மரபுவழிச் செய்தியின் அடிப்படையில் கூறுகிறார்.

கரிகால சோழன் இறப்பு:

கரிகால சோழன் இறுதியில் குராப்பள்ளி என்ற இடத்தில் உலக வாழ்வை நீத்தார் என்பது தெரிகிறது. ‘குராப்பள்ளி’ என்பது குராமரத்தைத் தலமரமாகக் கொண்ட திருவிடைச் சிவத்தலமாகும் என்று கருதப்படுகிறது.

தஞ்சை பெரிய கோவில் குறிப்புகள்

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil