“கோத்திரம் அறிந்து பெண் கொடு பாத்திரம் அறிந்து பிச்சை இடு” பழமொழியின் உண்மை காரணம்..!

Kothiram Arinthu Pennai Kodu Palamoli Vilakkam

Kothiram Arinthu Pennai Kodu Palamoli Vilakkam

தினமும் இந்த பதிவின் மூலம் ஒரு பயனுள்ள தகவலை பற்றி தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சரி நம் தமிழ் மொழியில் இருக்கும் பழமொழிகள் பற்றி நம் அனைவருக்குமே தெரியும். பழமொழிகளை நாம் சிறுவயதில் படித்திருப்போம். அதேபோல சிலர் கூற கேட்டிருப்போம்.

ஆனால் நாம் யாரும் பழமொழிகளுக்கு பின் இருக்கும் உண்மையான அர்த்தத்தை ஆராய்ந்து பார்த்திருக்க மாட்டோம். அந்த வகையில் இன்றைய பதிவில் “கோத்திரம் அறிந்து பெண் கொடு பாத்திரம் அறிந்து பிச்சை இடு” இந்த பழமொழிக்கான உண்மையான அர்த்தத்தை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

‘கன்னத்தில் கை வைக்காதே’ என்று சொல்வதற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா..?

“கோத்திரம் அறிந்து பெண் கொடு” பழமொழி விளக்கம்: 

இந்த பழமொழியை நாம் புத்தகத்தில் படித்திருப்போம். சிலர் கூற கேட்டிருப்போம். ஆனால் இந்த பழமொழி சொல்வதற்கான உண்மையான அர்த்தம் என்ன என்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அந்த காலத்தில் இந்த பழமொழி மன்னர் பரம்பரையில் வந்தவர்கள் மற்றும் வள்ளல்கள் ஆகியோருக்காக சொல்லப்பட்ட பழமொழி ஆகும். இந்த பழமொழியை “கோத்திறம் அறிந்து பெண் கொடு பாத்திறம் அறிந்து பிச்சை இடு” என்று தான் எழுத வேண்டும்.

கோத்திறம் அறிந்து பெண் கொடு

“கோத்திறம் அறிந்து பெண் கொடு” என்றால், அரசனுடைய திறமையை அறிந்து பெண்ணை கொடு என்று அர்த்தம். அதாவது கோ என்றால் அரசன் என்றும் திறம் என்றால் திறமை என்று பொருள்படும்.   அதனால் அந்த காலத்தில் அரசனுக்கு பெண்ணை திருமணம் செய்து வைக்கும் போது, அவன் அரசன் என்பதற்காக மட்டும் பெண்ணை திருமணம் செய்து வைக்காமல், அவனிடம் இருக்கும் திறமையை அறிந்து ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும்  என்பதற்காக இந்த பழமொழியை கூறினார்கள்.

அதேபோல “பாத்திறம் அறிந்து பிச்சை இடு” என்றால், புலவர்களின் பாடல் திறமையைப் பார்த்து அன்பளிப்புக் கொடு என்று அர்த்தம். பா என்றால் பாடல் என்று பொருள்படும். அதாவது  அந்த காலத்தில் புலவர்கள் அரசர்களிடம் பாடல்களை பாடி பரிசு பெற்று கொள்வார்கள். அதனால் புலவர்கள் என்பதற்காக மட்டும் அவர்களுக்கு பரிசு கொடுக்காமல் அவர்களின் திறமையை அறிந்து பரிசு கொடுக்க வேண்டும்  என்பதற்காக இந்த பழமொழி கூறப்பட்டது.

இந்த பழமொழிக்கான உண்மையான அர்த்தம் இது தான். இது காலப்போக்கில் மாறி கோத்திரம், பாத்திரம் என்றாகிவிட்டது.

ஆயிரம் பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம் என்று கூறுவதற்கான அர்த்தம் என்ன .?

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil