மகாத்மா காந்தி வரலாறு தமிழ் | Mahatma Gandhi History in Tamil

Mahatma Gandhi History in Tamil

மகாத்மா காந்தி வரலாறு | Mahatma Gandhi History in Tamil

காந்தி பற்றிய கட்டுரை: ‘மகாத்மா காந்தி’ என்று அன்புடன் அழைக்கப்படும் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். நம்மை எதிர்ப்பவர்களை சண்டையிட்டு வெல்லாமல் அகிம்சையின் மூலமும் வெல்லலாம் என்பதனை நிரூபித்து காட்டியவர் காந்தி. சத்தியாகிரகம் என்று அழைக்கப்படும் இவரது அறவழி போராட்டம் இந்திய மக்களுக்கு விழுப்புணர்ச்சியை எழுப்பியது மட்டுமல்லாமல் இந்தியா விடுதலை பெறவும் முக்கிய காரணமாக அமைந்தது இதனால், இவர் “விடுதலைப் பெற்ற இந்தியாவின் தந்தை” என இந்திய மக்களால் போற்றப்பட்டார். சரி இந்த பதிவில் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் வாழ்வில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகள் மற்றும் சுதந்திர போராட்டத்தில் காந்தியின் பங்கு குறித்து இந்த பதிவில் படித்து தெறித்து கொள்வோம் வாங்க.

மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு | Mahatma Gandhi History in Tamil

மகாத்மா காந்தி பிறந்த ஊர்போர்பந்தர்
மகாத்மா காந்தி பிறந்த மாநிலம்குஜராத்
நாடு இந்தியநாடு
மகாத்மா காந்தி பிறந்த தேதிஅக்டோபர் 02, 1869
காந்தியடிகள் ஆற்றிய பணி  இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல் தலைவர்
இறப்பு ஜனவரி 30, 1948

பிறப்பு:

Mahatma Gandhi History in Tamil – மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1869-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 02-ஆம் நாள், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள “போர்பந்தர்” என்ற இடத்தில் கரம்சாந்த் காந்திக்கும், புத்திலிபாய்க்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தாய்மொழி குஜராத்தி ஆகும். மேலும் அவருடைய தந்தை கரம்சாந்த் காந்தி, போர்பந்தரில் ஒரு திவானாக பணியாற்றி வந்தார். காந்தியின் தந்தை கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி போர்பந்தர் பகுதியின் தலைமை அமைச்சராக இருந்தவர். காந்தி, அவரது வீட்டில் இறுதியாகப் பிறந்த குழந்தை.

அவருக்கு இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் இருந்தனர். ராஜ்கோட்டில் மேல்நிலைக் கல்வி பயின்றபோது, காந்தி தன் சிறுவயதிலேயே நிச்சயிக்கப்பட்ட, கஸ்தூர்பாவை மணந்துகொண்டார். மோகன்தாஸ் காந்தியின் 16-வது வயதில், அவரின் தந்தை கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி மரணமடைந்தார்.

காந்தியின் பள்ளி வாழ்க்கை:

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், பள்ளியில் படிக்கும்போதே நேர்மையான மாணவனாக விளங்கினார். தனது 18-வது வயதில், கல்வி பயில்வதற்காக இங்கிலாந்துக்குப் சென்றார் காந்தி. முதன்முதலாகப் பகவத் கீதை புத்தகத்தைப் படித்தபோது, காந்திக்கு வயது 20.

பகவத் கீதை காந்தியின் மனதை ஈர்த்த புத்தகங்களுள் முதன்மையானது. இங்கிலாந்து சென்று மூன்று ஆண்டுகள் கழித்து, இந்தியா திரும்பினார் காந்தி. பம்பாய் (மும்பை) உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்ற முயன்று, சிறிது காலம் சட்ட வரைவாளராகப் பணியாற்றினார்.

​தென்னாப்பிரிக்காவில் காந்தியின் எழுச்சி:

மும்பை மற்றும் ராஜ்கோட்டில் சிறிது காலம் பணியாற்றிய அவர் தனது நண்பர் ஒருவரின் மூலம் தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞர் வேலைக்காக சென்றார்.

தென்னாப்பிரிக்கா செல்லும் வரை அரசியல் ஈடுபாடின்றி இருந்த காந்தியின் மனதில் அந்தப் பயணம் அவருக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாகவும் மாற்றியது. குறிப்பாக  ஒருமுறை அவர் நீதிமன்றத்தில் வாதாட தலைப்பாகையோடு சென்றார். அங்கிருந்த நீதிபதி அவரை தலைப்பாகை அணிந்திருந்த காரணத்தினால் வாதாட அனுமதிக்கவில்லை. இதனை தொடர்ந்து அவர் அந்த நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினார்.

அதேபோல் ஒரு முறை ரயிலில் பயணிக்கும் போது முதல் வகுப்பில் டிக்கெட் எடுத்து ரயிலில் ஏறினார். ஆனால், அங்கிருந்த அதிகாரி அவரை அந்த முதல் வகுப்பில் பயணிக்க அனுமதிக்கவில்லை. காரணம், அவர் வெள்ளைக்காரர் இல்லை என்பதால் அவரை பயணிக்க அனுமதிக்கவில்லை. இத்தகைய இரண்டு செயல்களும் காந்தியின் மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

ரவீந்திரநாத் தாகூர் வரலாறு

இதுமட்டும் இல்லாமல், தென்னாப்பிரிக்காவில் கறுப்பின மக்கள் படும் இன்னலுக்கும், அங்கு குடியேறிய இந்திய மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, 1894-ஆம் ஆண்டு இந்திய காங்கிரஸ் என்ற கட்சியினை தொடங்கி, அதற்கு அவரே பொறுப்பாளரானார். பிறகு 1906-ஆம் ஆண்டு ஜோகர்ன்ஸ்பர்க் என்ற இடத்தில், அகிம்சை வழியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு, கைது செய்யப்பட்டு பலமுறை சிறை சென்றார்.

பிறகு முதல் முறையாக ஜோகனஸ்பர்க் நகரில் மக்களின் குரலாக அவர் அகிம்சை முறையில் சத்தியாகிரகத்தினை வெற்றிகரமாக நடத்தினார். அப்போதிலிருந்து அகிம்சை வழியில் போராடுவதை தனது யுக்தியாக கையாண்டார் காந்தி.

கதர் ஆடையின் பின்னணி:

கதர் ஆடையின் பின்னணி

தென்னாப்பிரிக்காவில் இருந்து நாடு திரும்பிய காந்தி இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தினை கண்டும் மனம் நொந்தார். எனவே அவர் தொடர்ந்து பல இடங்களில் குரல் கொடுத்தார். மக்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி அவர்களுக்கு தனது பேச்சின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த நேரம் அது அந்த நிகழ்வினை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதனால் அவர் ஒத்துழையாமை இயக்கத்தினை ஏற்படுத்தினார். அந்த இயக்கத்தின் கொள்கை எளிதே அதாவது ஆங்கிலேயர்களுக்கு எதிராக கல்லூரிக்கு மாணவர்கள்செல்லாமல், நீதிமன்றத்துக்கு வழக்கறிஞர்கள் செல்லாமல் இருப்பது மற்றும் அந்நிய நாட்டு பொருட்கள் மற்றும் உடை என்று அனைத்தையும் தவிர்ப்பது போன்றவை தான் அந்த இயக்கத்தின் கொள்கை. அந்த இயக்கமானது சிறிதுகாலம் மட்டுமே இருந்தது. அப்போதிருந்து காந்தி கதர் ஆடையினை உடுத்த தொடங்கினார்.

உப்பு சத்தியாகிரகம்:

காந்தியடிகள் நடத்திய பல அறவழி போராட்டங்களில் உப்பு சத்தியாகிரகம் மிகுந்த சிறப்பினை பெற்ற ஒரு போராட்டமாகும். 1930-ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு இந்தியாவில் இந்தியர்கள் தயாரிக்கும் உப்பிற்கு வரியினை கட்டச்சொன்னது இதனை கண்ட காந்தி மக்களை ஒன்று திரட்டி பெரும் மக்கள் கூட்டத்துடன் அகமதாபாத்தில் இருந்து 23 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு தண்டியை அடைந்தார்.

அங்கு அகிம்சை வழியில் தனது போராட்டத்தினை அவர் நடத்த துவங்கினார். இதனால் ஆங்கிலேயர்களால் பலர் சிறை சென்றனர். ஆனால், மக்களின் கூட்டம் குறையவில்லை போராட்டத்தின் தீவிரம் உச்சத்தினை அடைந்தது. இதனை கண்டு ஆங்கிலேய அரசாங்கம் மிரண்டது. உடனே போராட்டத்தின் தீவிரத்தினை உணர்ந்த ஆங்கிலேய அரசு காந்திஅடிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது.

அந்த பேச்சுவார்த்தையில் போராட்டத்தினை நிறுத்திக்கொள்ளுங்கள். நாங்கள் வரியினை வாங்காமல் எங்களது சட்டத்தினை திரும்ப பெற்றுக்கொள்கிறோம் என்று கூறி போராட்டத்தினை நிறுத்துமாறு காந்தி அடிகளிடம் கூறினர்.

ஆங்கிலேயர்கள் உப்பிற்கான வரி சட்டத்தினை தவிர்ப்பதாக கூறியதால் அவரும் போராட்டத்தினை கைவிட்டார். பின்பு ஆங்கிலேயர்கள் வரியினை நீக்கினார். இந்த போராட்டமானது இந்திய சுதந்திர போராட்டத்தின் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

ஆகஸ்ட் புரட்சி [அ] வெள்ளையனே வெளியேறு இயக்கம்:

வெள்ளையனே வெளியேறு இயக்கம்

சுதந்திர போராட்டத்தின் உச்சம் தான் இந்த ஆகஸ்ட் புரட்சி என்றழைக்கப்படும் “வெள்ளையனே வெளியேறு” இயக்கம். 1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி இந்த இயக்கம் துவக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் மூலம் நாடு முழுவதும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான தனது அகிம்சை போராட்டத்தினை காந்தி முன்னின்று நடத்தினார். காந்தியின் அறவழி போராட்டம் நினைத்ததை விட மிக சிறப்பாக தொடர்ந்து நாடு முழுவதும் நடந்தது. இதற்கு மேல் இங்கு ஒன்றும் பண்ண இயலாது என்று ஆங்கிலேயர்கள் எண்ணும் அளவிற்கு நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.

காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள் Images-ஐ டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்

இந்தியாவின் சுதந்திரம் அறிவிக்கப்பட்ட தருணம்:

தொடர் அறவழி போராட்டத்தின் நிறைவாக பிரிட்டிஷ் அரசு இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க முன்வந்தது. அதன் படி ஆகஸ்ட் புரட்சி இயக்கம் தொடங்கப்பட்ட ஆகஸ்ட் மாதமே இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க ஆங்கிலேய அரசு தெரிவித்தது. அதனை தொடர்ந்து இந்தியாவிற்கு “ஆகஸ்ட் 15 1947″ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரம் கிடைத்த அந்த தருணம் காந்தியடிகளின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாளாக மாறியது.

காந்தியடிகளின் இறப்பு:

அகிம்சை வழியில் தனது போராட்டங்களை நடத்தி வெற்றிகள் பல கண்ட காந்தியடிகள் அவரது இறப்பு ஆயுதம் மூலமே நடந்தது. ஆம், சுதந்திரம் அடைந்த அடுத்த வருடம் 1948 ஜனவரி 30-ஆம் நாள் புது தில்லியில் “நாதுராம் கோட்சே” எனும் கொடியவனால் துப்பாக்கியின் மூலம் சுடப்பட்டார். அறவழியில் அன்பினை போதித்த காந்தி கடைசியில் குண்டடிப்பட்டு தன் இன்னுயிரை துறந்தார். காந்தி அடிகளின் மறைவு நாடு முழுவதும் அதிர்ச்சி அலையினை ஏற்படுத்தியது. மேலும் நாடெங்கிலும் உள்ள மக்களும் கடும் துயர் கொண்டனர். காந்தி அடிகளின் நினைவாக அவரது பிறந்த நாளான அக்டோபர் 2 “காந்தி ஜெயந்தி” தினமாக அனுசரிக்கபடுகிறது. மேலும் அவர் இறந்த ஜனவரி 30-ஆம் தேதி “தியாகிகள் தினம்” என்றும் அனுசரிக்கப்படுகிறது.

காந்திஅடிகளின் நினைவுச்சின்னங்கள்:

காந்தி மணிமண்டபம்

சென்னை கிண்டியில் காந்திக்காக தமிழக அரசு ஒரு மணிமண்டபத்தினை அமைத்து அதனை பராமரித்து வருகிறது. நூற்றுக்கணக்கான மக்கள் அதனை தினமும் ரசித்தப்படி உள்ளனர்.

காந்தி அருங்காட்சியகம்

மதுரையில் காந்தியின் நினைவாக ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு பொது மக்களின் பார்வைக்காக உள்ளது.

காந்தி சிலை

முக்கடலும் கூடும் குமரிக்கரையில் காந்தியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காந்தியின் நினைவாக இந்தியா முழுவதும் பல சாலைகள் மற்றும் இடங்களுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 

இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil