முக்கிய திருமண பொருத்தம்..! Mukkiya Thirumana Porutham..!

mukkiya thirumana porutham

முக்கிய திருமண பொருத்தம்..! Mukkiya Thirumana Porutham..!

Mukkiya Thirumana Porutham:- ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் ஒரு பிற்பகுதியை நகர்த்தி சென்று அந்த மனிதனை நலம்பெற செய்து, மகிழ்ச்சியாக வாழவைப்பது திருமணம் தான். ஒரு மனிதனின் அதிகபட்ச தேவை என்பது அகவாழ்க்கை மற்றும் புறவாழ்க்கை ஆகிய இரண்டிலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது தான். இவற்றில் முக்கியமானது அகவாழ்க்கை தான்.

ஒரு மனிதன் அகவாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமெனில் அவனது திருமண வாழ்க்கை சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். சிறப்பான திருமண வாழ்க்கையை பெற, தனக்கு ஏற்ற துணையை தேர்ந்தெடுத்து மணக்க வேண்டும். சிறப்பான துணை யார் என்பதை அறியவே திருமண பொருத்தம் நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டது.

இருமணம் இணைத்து மணவாழ்க்கையை துவங்க பார்க்க வேண்டிய முக்கிய திருமண பொருத்தம் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

10 முக்கிய திருமண பொருத்தம்..! Mukkiya Thirumana Porutham..!

mukkiya thirumana porutham

தினப் பொருத்தம்:-

ஒவ்வொரு நாலும் கணவன் மனைவிக்கு திருநாளாக அமைய உதவும். தினம் என்றால் நட்சத்திரம் என்று பொருள். நாள் தோறும் சந்திரபகவான் தங்கும் இடம் அல்லது ஷேத்திரம்.

ஆண், பெண் இருவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பற்றி தெரிந்து கொள்ள இந்த முக்கிய திருமண பொருத்தமான தினப் பொருத்தம் பார்க்கப்படுகிறது.

திருமண பெயர் பொருத்தம்

கணப் பொருத்தம்:-

கணவன் மற்றும் மனைவி இருவரின் இல்லற சுகம் மற்றும் ஒற்றுமை இந்த பொருத்தம் மூலம் தீர்மானிக்கப்படுகிறது.

அதாவது இந்த கணப் பொருத்தம் பொறுத்தவரை கணவன் மற்றும் மனைவி இருவரது குணம் பற்றி தெரிந்து கொள்ள இந்த கணப் பொருத்தம் பார்க்கப்படுகிறது.

மகேந்திரப் பொருத்தம்:-

திருமண பொருத்தத்தில் மிகவும் முக்கிய திருமண பொருத்தம் இதுவே. இந்த மகேந்திரப் பொருத்தம் திருமண ஆகும் ஆண், பெண் இருவருக்கும் கட்டாயம் இருக்க வேண்டும்.

இந்த பொருத்தம் இருவருக்கும் இருந்தால் தான் அவர்களது திருமண வாழ்க்கையில் புத்திர விருத்தி மற்றும் புத்திரர்களால் வரம், செல்வம் ஆகியவற்றைக் கொடுக்க உதவும்.

திருமண லக்ன பொருத்தம்

ஸ்திரீ தீக்கப் பொருத்தம்:-

ஸ்திரீ என்பது பெண் என்று பொருள், தீர்த்தம் என்றால் முழுமை என்று பொருள். அதாவது பெண்ணிற்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் முழுமையாக கிடைக்குமா என்பதை அறியும் பொருத்தமாகும்.

பெண்களுக்கு இது மிகவும் முக்கியமான பொருத்தமாகும். ஸ்திரீ தீர்க்கம் பொருள் வளத்தையும், செல்வத்தையும், செல்வாக்கையும் வழங்குவது ஆகும்.

திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்க உதவுவது இந்த ஸ்திரீ தீர்க்க பொருத்தம் ஆகும். திருமணத்திற்குப் பின்பு பெண்ணின் ஆயுட்காலம் கணவனின் நட்சத்திரத்தால் எவ்வாறு மாறுபடுகிறது என்பதைத் தீர்மானிக்கும் பொருத்தம் ஆகும்.

ஸ்திரீ தீர்க்கம் என்பது பெண்ணின் தீர்க்கம் அல்லது ஆயுள் மற்றும் ஆரோக்கியத்தை ஆணின் நட்சத்திர தொடர்பை வைத்து எவ்விதம் மாறுபாடு அடைகிறது என்பதை வைத்து பொருத்தம் பார்க்கவேண்டும்.

யோனிப் பொருத்தம்:-

யோனிப் பொருத்தம் என்பது கணவன் மனைவி தாம்பத்திய வாழ்க்கையில் எவ்வளவு திருப்தியாக இருப்பார்கள் என்பதை கூறும் பொருத்தமாகும்.

ராசி பொருத்தம்:-

ராசி பொருத்தம் என்பது இரு இராசிகளுக்கு இடையே ஆண் குழந்தை பெற்று கொள்ளும் பொருத்தம் உள்ளதா என்பதனை குறிக்கும் பொருத்தம் ஆகும்.

திருமண வாழ்க்கையில் ஆண் குழந்தை பெற்று கொள்வது வம்ச விருத்தி எனும் காரணத்தால் ராசி பொருத்தம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்த ராசி பொருத்தமானது ஆண், பெண் இருவருக்கு ஒரே ராசியாகவும், நட்சத்திரங்கள் மாறுபட்டும் இருக்க வேண்டும்.

இந்த  பொருத்தத்தில் அப்படி இருந்தால் தான் அவர்களது வம்சம் விருத்தியகுமாம்.

mukkiya thirumana porutham

ராசி அதிபதிப் பொருத்தம்:-

இந்த ராசி அதிபதிப் பொருத்தம் பொறுத்தவரை குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதற்காக பார்க்கப்படும் பொருத்தமாகும். பொதுவாக 12 ராசிகளுக்கு அதிபதி உண்டு.

அந்த அதிபதி கிரகத்திற்கு நட்பு, சமம், பகை என மூன்று வகையால் மற்ற கிரகங்களுடன் உறவு உண்டு. பெண்ணின் ராசி அதிபதி, ஆணின் ராசி அதிபதிக்கு பகை எனில் மட்டுமே பொருத்தமில்லை. நட்பு, சமம் எனில் பொருத்தம் உண்டு.

வசிய பொருத்தம்:-

கணவன் மனைவி இருவருக்கும் அன்யோன்யம் இருக்குமா..? இல்லையா..? என்பதை பார்ப்பதற்கு இந்த பொருத்தம் உதவுகிறது. இந்த வசிய பொருத்தம் கணவன் மனைவிக்கு இருவருக்கும் இடையே உள்ள ஈர்ப்பைக் குறிக்கும்.

ரஜ்ஜு பொருத்தம்:-

ரஜ்ஜு பொருத்தம் என்பது திருமண பொருத்தங்களில் மிகவும் முக்கியமான பொருத்தமாகும். திருமண பொருத்தங்களில் ஒன்பது பொருத்தங்கள் இருந்தாலும் ரஜ்ஜு பொருத்தம் மட்டும் இல்லையென்றால் திருமணம் செய்து வைக்கமாட்டார்கள். அந்த அளவிற்கு ரஜ்ஜு பொருத்தம் மிகவும் முக்கியமான பொருத்தமாகும்.

அதாவது கணவனின் ஆயுள் பலன் எப்படி இருக்கும் என்பதை பார்க்கும் பொருத்தமாகும். எனவே இந்த பொருத்தம் பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை குறிக்கிறது. திருமண பந்தத்திற்கு இந்த பொருத்தம் மிகவும் அவசியமான பொருத்தமாகும்.

newரஜ்ஜு பொருத்தம் விளக்கம்

வேதைப் பொருத்தம்:-

திருமணம் செய்யப் போகும் தம்பதியர்களின் வாழ்க்கையில் இன்பம் மற்றும் துன்பம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை கணிக்க இந்த வேதைப் பொருத்தம் பார்க்கப்படுகிறது.

அதாவது கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் இருக்க இந்த வேதைப் பொருத்தம் பார்க்கப்படுகிறது.

மேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருத்தங்களும் திருமணம் செய்பவர்களுக்கு பார்க்கப்படும் மிக முக்கிய திருமண பொருத்தம் (Mukkiya Thirumana Porutham) ஆகும்.

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்