மியூச்சுவல் ஃபண்டில் செய்ய கூடாத தவறுகள் என்ன..?
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் நாம் நம்மை அறியாமல் செய்யும் தவறுகள் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். அனைவருமே நாம் கஷ்டப்பட்டு சேமித்த பணத்தை பாதுகாப்பதற்கும், அந்த பணத்தை பலமடங்கு பெருக்குவதற்கும் நாம் சரியான வழியில் முதலீடு செய்ய வேண்டும். எப்படி முதலீடு செய்வது… எங்கு முதலீடு செய்வது..? என்று பல கேள்விகள் இருக்கும்.
நாம் முதலீடு செய்யும் போது சரியான ஃபண்ட்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும். மற்ற நிதி முறைகளில் முதலீடு செய்தால் வருமானம் குறைவாக கிடைக்கும் என்பதால் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும் என்று நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர். நீங்கள் மியூச்சுவல் ஃபண்டில் செய்யக்கூடாத தவறுகள் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க…
இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ மியூச்சுவல் ஃபண்ட் கணக்கு எங்கு தொடங்குவது..?
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் செய்ய கூடாத தவறுகள்..?
நாம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் நம்மை அறியாமல் சில தவறுகள் செய்வதால் அதிக வருமானம் வருவது தடுக்கப்படுகிறது.
- மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டாளர்கள் ஒழுங்கற்ற முதலீட்டை பின்பற்றுவதன் மூலம் அதிக பணம் வரும் வாய்ப்புகள் தடுக்கப்படுகின்றன.
- முதலீட்டாளர்கள் சந்தையின் போக்கில் செல்வது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் செய்யக்கூடிய முதல் தவறு ஆகும்.
- மியூச்சுவல் ஃபண்டில் நீண்ட கால SIP -களை நிறுத்த கூடாது. முதலீட்டாளர்கள் SPI-யை குறுகிய காலத்தில் நிறுத்துவதன் மூலம் வருமானம் குறைய தொடங்கும்.
- மியூச்சுவல் பண்டில் SPI முறையில் முதலீடு செய்திருந்தால் அதில் இருந்து பாதியிலேயே வெளியேறக் கூடாது. மேலும், இதுபோன்று செய்வதால் முதலீட்டாளர்களுக்கு குறைந்த வருமானமே கிடைக்கும்.
- முதலீட்டாளர்கள் இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு மியூச்சுவல் ஃபண்டில் இலக்கை அடையும் வரை முதலீடு செய்ய வேண்டும்.
- மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் குறுகிய கால வருமானத்தை நினைவில் கொண்டு அதில் அதிக கவனம் செலுத்துவதே ஆகும். இதனால் நீண்ட கால ஆதாயங்களை இழக்க நேரிடும்.
- அதுபோல நல்ல ஃபண்டுகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும். நாம் எதில் முதலீடு செய்கிறோம் என்பதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- மியூச்சுவல் ஃபண்ட்ஸில் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு அதிக அளவு வருமானம் கிடைக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இருந்தாலும் அதை சரியான முறையில் முதலீடு செய்ய வேண்டும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |