நெறி பொருள் | Neri Meaning in Tamil
நம்முடைய தமிழில் உள்ள வார்த்தைகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அர்த்தம் உடையதாக இருக்கும். அதற்கு ஒரு அர்த்தம் மட்டுமே இருக்காது. பல அர்த்தங்கள் உடையதாக இருக்கும். அது போல பொருள்களும் மாறுபடும். தமிழ் வழி கல்வி பயில்கின்றவர்களுக்கு தமிழ் ஈசியாக இருக்கும். அதுவே ஆங்கில வழியில் கல்வி பயில்கிறவர்களுக்கு தமிழ் கஷ்டமாக இருக்கும். அவர்கள் வலைத்தளத்தில் தான் தங்களின் சந்தேகங்களை தீர்த்து கொள்வார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் நம்முடைய பதிவில் நிறைய பதிவுகள் பதவிடப்படுகிறது. அந்த வகையில் இன்றைய பதிவில் நெறி என்பதன் பொருள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
நெறி என்னும் சொல்லின் பொருள்:
விடை: வழி.
விளக்கம்:
- ஒன்றை பின் பற்றி அதன் கோட்பாடுகளின் படி அறத்துடன் வாழ்வதை நெறிப்படி வாழ்தல் என்று குறிப்பிடுவர்.
- நெறி என்பதை சமயக் கொள்கைகளுக்காகவோ அல்லது தனி மனித ஒழுக்கத்துக்காகவோ ஏற்படுத்தப்பட்ட விதி அல்லது நடைமுறை என்றும் கூறலாம்.
- ஒப்புரவு நெறி என்றால் அறநெறியில் பொருள் ஈட்டித் தாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்பதே ஆகும்.
- தமிழில் தமிழ்நெறி விளக்கம் என்ற ஒரு இலக்கண நூலும் உள்ளது.
- நெறி என்பது ஆங்கிலத்தில் Norms என்று கூறலாம்.
எடுத்துக்காட்டு:
- சைவ நெறி
- ஜனநாயக நெறி
- நெறிமுறை
- நெறியாளர்
- நெறிநூல்
- நெறிப்படு
- நெறிப்படுத்து
- நன்னெறி
- உடை நெறி
நெறி என்பதன் தமிழ் அகராதி:
வழி, சமயம், வளைவு, சுருள், விதி, ஒழுக்கம், செய்யுள்நடை, குலம், வழிவகை, ஆளுகை, குதிரை முதலியவற்றின் நடை, வீடுபேறு, கோயில், தாழ்ப்பாள், கண் மண்டைக்குழி, புறவிதழ் ஒடிக்கை, காண்க, நெறிக்கட்டி, மனநிலை.
ரௌத்திரம் பழகு என்பதன் பொருள் |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |