புதிய கல்வி கொள்கை திட்டம் 2020..! New Education Policy 2020..!

Advertisement

புதிய கல்வி கொள்கை திட்டம் 2020 கூறும் உண்மையான தகவல்..! New Education Method 2020..!

New Education System 2020: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் புதிய தேசிய கல்வி கொள்கையின் மாற்றத்தை  பற்றித்தான் பார்க்கப்போகிறோம். புதிதாக உருவாக்கம் செய்யப்பட்ட இந்த தேசிய கல்வி கொள்கை 34 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட தேசிய கல்வி கொள்கை 1986-க்கு மாற்றாக அமையும் என்று குறிப்பிட்டுள்ள இந்திய அரசின் பத்திரிகை தகவல் நிறுவனமான PIB முக்கிய கல்வி கொள்கையின் அம்சங்களை வெளியிட்டுள்ளது. சரி வாங்க இதனை விரிவாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!

newஇந்திய இந்து திருமணங்கள் சட்டம்..! Hindu Marriage Act in Tamil..!

புதிய கல்வி கொள்கை திட்டம் 2020..! New Education System..!

பள்ளிக்கல்வியின் உலகளாவிய அணுகுமுறைகள்:

இந்த புதிய கல்வி கொள்கை 2020 திட்டத்தில் மழலையர் கல்வி முதல் இடைநிலை கல்வி வரை பள்ளி கல்விக்கு உலகளாவிய அணுகுமுறையை உறுதி செய்வதை, தேசிய கல்விக் கொள்கை திட்டமானது உறுதி செய்கிறது.

வகுப்பு முறையில் அறிவித்த திட்டம்:

பள்ளி கல்வி துறையில் 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு தேசிய திறந்தவெளி/ மாநில திறந்தவெளிப் பள்ளிகள் மூலமாக மாணவர்களுக்கு கல்வி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இடைநிலைக் கல்வி பாடத் திட்டங்கள், தொழிற்கல்விப் பாடங்கள், முதியோர் கல்வி மற்றும் வாழ்க்கை மேம்பாட்டிற்கான திட்டங்கள் இலக்கினை அடைவதற்காக யோசனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளி படிப்பை தொடர முடியாமல் நிறுத்திய  2 கோடி குழந்தைகளுக்கு மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கு இந்த ஆண்டில் புதிய திட்டமான தேசிய கல்வி கொள்கை திட்டம் (new education system) வழி வகுத்துள்ளது.

புதிய பாடத்திட்டக் கல்வி – New education system:

தற்போது உள்ள 10+2 கல்வி முறை பாடத்திட்டம் மாற்றப்பட்டு முறையான கல்வி முறை 3-8, 8-11, 11-14 மற்றும் 14-18 வயதுக்கு ஏற்ற 5 + 3 + 3 + 4 ஆண்டு பாடத்திட்ட முறை அமல்படுத்தப்படும்.

இதுவரை பள்ளி செல்லாத 3 வயது முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு பள்ளி படிப்பை படிப்பதற்கு இந்த புதிய கல்வி கொள்கை திட்டம் மிகவும் உதவும்.

இக்கல்வி திட்டமானது 3 ஆண்டு மழலையர் கல்வியுடன், 12 ஆண்டு பள்ளிக்கூடப் படிப்பை சேர்ந்ததாக இருக்கும். 8 வயது வரையிலான குழந்தைகளுக்கு முன் குழந்தைப்பருவ கவனிப்பு மற்றும் கல்விக்கான தேசியப் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் கட்டமைப்பை என்சிஇஆர்டி நிறுவனம் உருவாக்கம் செய்யும்.

நிர்வாக துறைகள்:

இந்த புதிய திட்டமான தேசிய கல்வி கொள்கை முறையை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, சுகாதார துறை, குடும்ப நலத்துறை, மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலமாக செயல்படுத்தப்படும்.

கல்விக்கான தேசியப் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் கட்டமைப்பை (National Curricular and Pedagogical Framework for Early Childhood Care and Education – NCPFECCE) மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) உருவாக்கம் செய்யும்.

பன்மொழி மற்றும் மொழியின் ஆற்றல்:

மாணவர்கள் குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு வரையிலும், ஆனால் 8-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேலும் முன்னுரிமை அடிப்படையிலும், தாய்மொழி/ உள்ளூர் மொழி/ பிராந்திய மொழி, பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என இந்த புதிய கல்வி கொள்கை திட்டம் வலியுறுத்தம் செய்கிறது.

இந்தியாவில் இருக்கும் இதர செம்மொழிகள் மற்றும் இலக்கியங்கள் மாணவர்களுக்கு விருப்ப பாடமாக அமையும். 6 முதல் 8 வரை உள்ள வகுப்புகளில் ‘இந்திய மொழிகள்’ குறித்து மாணவர்கள் வேடிக்கை செயல் திட்டம் நடவடிக்கைகளில் கலந்துகொள்ளலாம்.

செவித்திறன் குறைபாடு உள்ள மாணவர்களின் பயன்பாட்டிற்காக தேசிய மற்றும் மாநில பாடத்திட்ட பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மதிப்பீட்டு சீர்த்திருத்தம்:

3, 5, 8 ஆம் வகுப்பு சேர்ந்த அனைத்து மாணவர்களும் அந்தந்த ஆணையம் நடத்தி வரும் தேர்வினை எழுதுவார்கள். 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் அரசு நடத்தி வரும் பொது தேர்வை மேற்கொள்வார்கள். அதேசமயம் , முழுமையான மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு திருத்தம் செய்யப்படும்.

புதிய தேசிய மதிப்பீட்டு மையமான பராக் (PARAKH – Performance Assessment, Review, and Analysis of Knowledge for Holistic Development)- திறன் மதிப்பீடு, மறுஆய்வு மற்றும் முழுமையான மேம்பாட்டுக்கான அறிவுப் பகுப்பாய்வு நிலையான அமைப்பு ஒன்றால், உருவாக்கப்படும்.

சமமான மற்றும் உள்ளடக்கிய கல்வி:

எந்த ஒரு குழந்தையும் பிறந்த சூழ்நிலை காரணமாகவோ அல்லது பின்புலம் காரணமாகவோ கற்கும் கல்வியை நிறுத்திவிட கூடாது என்பதன் நோக்கத்தினை கொண்டதாக அமைந்துள்ளது இந்த கல்வி கொள்கை திட்டம் 2020. பாலினம், சமூக-கலாச்சாரம், புவியியல் அடையாளங்கள், உடல் குறைபாடுகள் உள்பட சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கிய குழுக்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

உடல் குறைபாட்டுடன் இருக்கும் குழந்தைகள் தனது உயர் கல்வி படிப்பை முழுமையாக பெற இந்த திட்டம் வழிவகுக்கிறது.

கலை தொடர்பான, தொழில் தொடர்பான, விளையாட்டு தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்கும் வகையில் இந்த திட்டம் செயல்படும்.

பள்ளி நிர்வாகம்:

பள்ளிகள் வளாகங்களாகவோ, தொகுப்புகளாகவோ அமைக்கப்படும். பள்ளியின் உள் கட்டமைப்பு, கல்வி நூலகம், வலுவான தொழில்முறை ஆசிரியர் சமூகம் போன்ற அனைத்து வளமும் கிடைக்கும் விதத்தில் நிர்வாகமானது இந்த திட்டம் (new education system) மூலம் அழகாக இருக்கும்.

ஆசிரியர் சேர்க்கை மற்றும் தொழில் பாதை:

பள்ளியில் ஆசிரியர்கள் வலுவான, வெளிப்படையான நடைமுறையில் பணியில் அமர்த்தப்படுவார்கள். ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படை, செயல்திறன் மதிப்பீடு, முன்னேற்ற வழிமுறை படி பதவி உயர்வு இருக்கும்.

பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான தேசிய தொழில்முறைத் தரம் என்ற தனி அமைப்பு உருவாக்கப்படும்.

பள்ளி கல்வியின் நிலையான அங்கீகாரம் மற்றும் அமைப்பு:

கல்வி சம்மந்தமான விஷயம், கொள்கை வகுத்தல், முறைப்படுத்துதல், இயக்குதல் போன்றவற்றிற்கு தெளிவான விளக்கங்களும், தனி நடைமுறைகளும் கொண்டுள்ளன.

மாநிலம், யூனியன் பிரதேசங்கள்,சுதந்திரமான மாநில கல்வியை தர ஆணையத்தை (SSSA) அமைத்துக் கொள்ளும்.

புதிய திட்டத்தின் உயர் கல்வி:

2035 வாக்கில் மொத்த பதிவு விகிதம் 50 சதவீதமாக கல்வி தகுதி உயர்த்தப்படும்.

தொழில் கல்வி விகிதத்தை 26.3 சதவீதத்திலிருந்து (2018) , 2035-ஆம் ஆண்டு வாக்கில் 50 சதவீதமாக உயர்த்துவதே இந்த புதிய கல்வி கொள்கையின் நோக்கமாக விளங்குகிறது. உயர் கல்வி நிறுவனங்களில் 3.5 கோடி புதிய இடங்கள் சேர்க்கப்படும்.

ஆசிரியர் கல்வி:

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவுடன் ஆலோசித்த பிறகு  புதிய மற்றும் விரிவான தேசிய ஆசிரியர் கல்வித் திட்டக் கட்டமைப்பு வடிவமைக்கப்படும். 2030 ஆம் ஆண்டுக்குள் ஆசிரியர் கற்பித்தலுக்கான குறைந்தபட்ச ஆசிரியர் கல்வி தகுதி நான்கு வருட பி.எட் பட்டம் இருத்தல் வேண்டும்.

தரம் குறைவாக உள்ள ஆசிரியர்களை வைத்து நடத்தி வரும் கல்வி நிறுவனம் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.

கற்பித்தல் இயக்கம்:

இந்திய மொழிகளில் கற்பிக்கும் திறன் வாய்ந்த மற்றும் பல்கலைக்கழக/ கல்லூரி ஆசிரியர்களுக்குக் குறுகிய கால மற்றும் நீண்ட கால கற்றல்/ தொழில்முறை ஆதரவை அளிக்க விரும்பும் திறன்வாய்ந்த மூத்த/ஓய்வு பெற்ற ஆசிரியர்களைக் கொண்ட தேசிய கற்பித்தல் இயக்கம் அமைக்கப்படும்.

மாணவர்களுக்கு நிதி உதவி:

எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் இதர மாணவ தொழில்முனைவோர் வளர்ச்சிப் பிரிவுகளை சார்ந்த நன்கு படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

கல்வி உதவித்தொகையைப் பெறும் மாணவர்களின் முன்னேற்றத்தை ஆதரித்து, மேம்படுத்தி மற்றும் கண்காணிக்க தேசிய கல்வி உதவித்தொகை தளம் விரிவுபடுத்தப்படும்.

தங்களது மாணவர்களுக்கு அதிக அளவில் இலவச கல்வி மற்றும் கல்வி உதவித்தொகையை அளிக்கத் தனியார் உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கப்படும்.

திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி:

இணைய வழி படிப்புகள், டிஜிட்டல் சேமிப்புத் தளங்கள், ஆராய்ச்சிக்கு நிதியுதவி, மேம்படுத்தப்பட்ட மாணவர் சேவைகள், திறந்தவெளி இணைய வழிப் படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குதல் ஆகியவற்றுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இணையவழிக் கல்வி மற்றும் டிஜிட்டல் கல்வி:

தொற்று நோய்கள் மற்றும் பெருந்தொற்று சமயங்களில், சமீபத்திய நிலைமையைக் கருத்தில் கொண்டு, பாரம்பரியமான மற்றும் நேரடிக் கல்வி எங்கெல்லாம் சாத்தியமில்லையோ அங்கெல்லாம் இணைய வழிக் கற்றலை ஊக்குவிக்க, தரமான மாற்றுக் கல்வியை வழங்குவதற்கான தயார் நிலையை உறுதி செய்ய விரிவான பரிந்துரைகள் வகுக்கப்பட்டுள்ளன.

டிஜிட்டல் உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பாடங்கள் மற்றும் திறன் வளர்த்தல் ஆகியவற்றைக் கட்டமைக்க மனித வள மேம்பாடு அமைச்சகத்தில் ஒரு பிரத்யேகப் பிரிவு உருவாக்கப்பட்டு, கல்வி மற்றும் உயர்கல்வியின் மின்-கற்றல் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.

கல்வியில் தொழில்நுட்பம்:

கல்வி, மதிப்பிடுதல், திட்டமிடுதல் மற்றும் நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் யோசனைகளைத் தடையின்றிப் பகிர்ந்து கொள்ள தேசிய கல்வி தொழில்நுட்பப் பேரவை என்னும் தன்னாட்சி பெற்ற அமைப்பு உருவாக்கப்படும்.

இந்திய மொழிகளை ஊக்கப்படுத்துதல்:

அனைத்து இந்திய மொழிகளின் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் துடிப்புடன் இயங்கும் தன்மையை உறுதி செய்ய, இந்திய மொழிபெயர்ப்பு மற்றும் விளக்க நிறுவனம், பாலி, பெர்சிய மற்றும் பிராகிருதத்துக்கான தேசிய நிறுவனம் (அல்லது நிறுவனங்கள்), உயர்கல்வி நிறுவனங்களில் சமஸ்கிருதம் மற்றும் இதர மொழித் துறைகள் மற்றும் அதிக உயர்கல்வி நிறுவனங்களில் தாய்மொழி/உள்ளூர் மொழியில் கற்பித்தலை உறுதி செய்தல் ஆகியவற்றை தேசியக் கல்விக் கொள்கை பரிந்துரைக்கிறது.

வயது வந்தோருக்கான கல்வி

இளைஞர் மற்றும் வயது வந்தோருக்கான கல்வியை 100 சதவீதம் உறுதி செய்யவேண்டும்.

கல்விக்கு நிதியுதவி:

கல்வித் துறையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், பொதுமுதலீடு 6 சதவீதம் விரைவில் எட்டப்படும்.

தொழில்முறைக் கல்வி:

அனைத்துத் தொழில்முறைப் படிப்புகளும் உயர் கல்வி அமைப்பின் இன்றியமையாத அங்கமாக இருக்கும்.

தனிப்பட்ட தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள், சுகாதார அறிவியல் பல்கலைக்கழகங்கள் மற்றும் வேளாண் பல்கலைக்கழகங்கள் ஆகியவை பல்நோக்கு நிறுவனங்களாக ஆவதற்கு முயற்சி செய்யும்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement