ஓண‌ம் பண்டிகை எப்போது தெரியுமா? | Onam Date 2024 in Tamil

Advertisement

ஓணம் பண்டிகை 2024 | Onam Date 2024 in Tamil Nadu

பண்டிகை என்றாலே மக்கள் மனதில் இருக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது, ஏனெனில் பண்டிகை நாட்களில் தான் உற்றார் உறவினர் என அனைவரின் வருகையும் இருக்கும், வீடே திருவிழாக்கோலமாக காணப்படும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு சிறப்பான பண்டிகை இருக்கும், அது போல கேரளா மாநிலத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகை தான் ஓணம். கேரளாவில் மிக சிறப்பாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை இந்த வருடம் எப்போது வருகிறது என்பதையும், ஓணம் எதற்காக கொண்டாடப்படுகிறது என்பதையும் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

ஓணம் விழா 2022

ஓணம் தேதி 2024 | Onam Festival Date 2024 in Tamil:

  • கேரளாவில் இந்த ஆண்டிற்கான ஓணம் பண்டிகை செப்டம்பர் 6-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 15 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
  • செப்டம்பர் 6-ம் தேதி வெள்ளிக்ககிழமை வெகு விமர்சையாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படும்.

ஓணம் பண்டிகை வரலாறு:

  • Onam Date in Tamil: மகாபலி சக்கரவர்த்தியின் ஆனவத்தினை அடக்குவதற்காக, திருமால் வாமனராக அவதாரம் எடுத்து, மகாபலி சக்ரவர்த்தியிடம் மூன்று அடி மண் தானமாக கேட்டார், முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, அவரை அழிக்க முற்படும் சமயம், மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு அருள் செய்ய வேண்டும் என்று கூறியதை ஏற்று வாமனர் அருள் புரிந்தார் என்றும், அந்த நம்பிக்கையின் அடிப்படையில் மக்களை காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளை ஓணம் எனும் திருவோணத் திருநாளாகவும், கொண்டாடுகின்றனர்.
  • ஓணம் பண்டிகை ஒரு அறுவடையின் திருவிழா ஆகும். இது உயிரோட்டத்தையும், அழகையும் குறிக்கிறது.

ஓணம் பண்டிகை எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது?

  • கேரளா மாநிலத்தில் மலையாள மக்களால் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ஓணம் பெஸ்டிவல்:

  • இந்த பண்டிகை ஆவணி மாதத்தில், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் போன்ற நட்சத்திர தினங்களில் கொண்டாடப்படுகின்றது.
  • ஓணம் பண்டிகை 10 நாட்கள் கொண்டாடப்படுகின்றது. முதல் நாளான அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கும் ஓணம் பண்டிகை அத்தப் பூக்களால் கோலம் போட்டு ஆரம்பமாகும்.
  • முதல் நாளில் மக்கள் பரிசுகளை பறிமாறி கொள்கின்றனர். நான்காவது நாளில் 64 வகையான உணவு வகைகள் தயார் செய்யப்பட்டு அதை ஒருவொருக்கொருவர் பறிமாறி கொள்கின்றனர்.
  • ஐந்தாம் நாள் படகுபோட்டி நடைபெறுகிறது அதில் வஞ்சிப்பாட்டு பாடலை பாடி படகில் மகிழ்ச்சியாக செல்கின்றனர்.
  • 10 ஆம் நாளான திருவோணத்தன்று, யானைகளுக்கு விலையுயர்ந்த பொன் மற்றும் மணிகளால் ஆன தங்க கவசங்களாலும் பூத்தோரணங்களாலும் அலங்கரித்து அணிவித்து வீதிகளில் ஊர்வலம் நடத்துவர்.
  • யானைகளுக்குச் சிறப்பு உணவுகளும் படைக்கப்படும். 10-வது  நாளில் அனைவரும் குளித்து, கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை அணிந்து, இறுதியில் ஆலயங்களுக்குச் சென்று சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement