ஓரெழுத்து ஒரு மொழி எழுத்துக்கள் | Oru Eluthu Oru Mozhi Sorkal
இன்றைய காலத்தில் பலரும் அரசு தேர்வுகளுக்கு தங்களை தயார் படுத்திக்கொள்கிறார்கள். அப்படி அரசு தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் தமிழ் தான் முதன்மையாக இருக்கிறது. தமிழை நன்றாக கற்றாலே தேர்வுகளில் வெற்றியை அடையலாம். அதனால் தான் உங்களுக்கு உதவும் நம்முடைய பதிவில் தினந்தோறும் தேர்வுகளில் வெற்றியை அடைவதற்கு பதிவுகளை பதிவிட்டு வருகிறோம். அதனை படித்து தேர்வுகளில் வெற்றியை அடையுங்கள்.
இன்றைய தமிழ் பகுதியில் ஓரெழுத்து ஒரு மொழி என்றால் என்ன?, ஓரெழுத்து ஒரு மொழிக்கான பல எடுத்துக்காட்டுகளை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.. இந்த ஓரெழுத்து ஒரு மொழி எழுத்துக்கள் பற்றிய கேள்விகள் TNPSC தேர்வுகளில் கேட்கப்படுகிறது. இந்த ஓரெழுத்து ஒரு மொழி எழுத்துக்கள் முக்கியமான பொது தமிழ் குறிப்புகளாகும். வாங்க ஓரெழுத்து ஒரு மொழிகளை படித்து தெரிந்துக்கொள்ளலாம்..
ஒரு சொல் பல பொருள் தரும் சொற்கள் |
ஓரெழுத்து ஒரு மொழி என்றால் என்ன:
ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்து ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஒரெழுத்து ஒரு மொழி ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டும் தனித்து வந்து ஒரு பொருளைக் குறிக்குமானால் அதற்கு ஓரெழுத்து ஒரு மொழிச் சொல் என்று பெயர்.
எடுத்துக்காட்டு: “தை”– தை என்ற எழுத்து தை மாதத்தில் ஒன்றான மாதத்தின் பெயரை குறிக்கிறது. இதே எழுத்து தைத்தல், பொருத்துதல் என்ற பொருளிலும் வரும். இது போன்ற ஒரே ஒரு எழுத்தானது ஒரு பொருளை தரக்கூடியது ஓரெழுத்து ஒரு மொழியாகும்.
ஓரெழுத்து ஒரு மொழிக்கு சில எடுத்துக்காட்டு:
- அ – அந்த, சுக்கு, திப்பிலி, எட்டு
- ஆ – பசு, ஆச்சாமரம், சிவஞானம், இச்சை
- இ – சுட்டு (அங்கே, அவன்), இந்த, அன்பு, ஆச்சரியம்
- ஈ – அம்பு, குகை, இலட்சுமி, கடவுள், தா, ஈ, தேனீ, வண்டு, பாம்பு
- உ – சிவன், பிரமன், சிவசக்தி, இரண்டு
- ஊ – உணவு, இறைச்சி, சிவன், உண்ணல்
- எ – எந்த, ஏழு எண்ணும் எண்ணின் குறி
- ஏ – அம்பு, விளி, இடைச் சொல், எதிர்மறைப்பொருள், சிவன், திருமால்
- ஐ – அழகு, அரசன், தலைவன், கடவுள், குரு, சிவன், தும்பை, பருந்து, வியப்பு
- ஒ – நிகர், பொருந்து
- ஓ – வினா, வியப்பு, ஆபத்து, ஒழிவு
- ஓள – பூமி, ஆனந்தம், கடித்தல்
- க – ஒன்று, அரசன், ஆன்மா, உடல், காற்று, பிரமன்
- கா – சோலை, காவடி, காவல், தொலை
- கீ – கிளிக்குரல்
- கு – குற்றம், சிறுமை
- கூ – கூகை, பூமி, கூவு, அழுக்கு, பிசாசு
- கை – இடம், பகை, கரம், ஒழுக்கம், கரம், துதிக்கை, வரிசை, ஒப்பனை, அளவு, கைமரம்
- கோ – அரசன், அம்பு, சூரியன், சந்திரன், நீர், சொர்க்கம், ஆண்மகன், பூமி, ஆகாயம், பசு, மலை
- கௌ – மனத்தாங்கல், தீங்கு, கொள்ளு, பற்றுதல்
- ச – சக
- சா – மரணம், இறப்பு, போ, பேய், கெடுதல்
- சீ – அலட்சியம், அடக்கம், இகழ்ச்சி, புண்சீழ், பார்வதி, இலட்சுமி, கலைமகள், சிதல்
- சு – சுய, சுகம்
- சே – எருது, மரம், தூரம், உயர்வு, சிவப்பு
- சை – இகழ்ச்சி, செல்வம்
- சோ – அரண், நகரம், ஒலி, உமை
- சௌ – சௌபாக்கியவதி (சுமங்கலி) என்பதன் சுருக்கம்
- ஞா – சுட்டு, பொருந்து
- ஞை – இகழ்ச்சி
- த – பிரம்மா, குபேரன்
- தா – வருத்தம், பகை, வலிமை, கெடுதி, கொடு, குற்றம், தாண்டுதல்
- தீ – நெருப்பு, அறிவு, நரகம், கொடுமை, கோபம், இனிமை
- து – கெடு, வருத்து, பிரிவு
- தூ – தூய்மை, பகை, தடை, வலிமை, சிறகு, வெண்மை
- தே – தெய்வம், நாயகன், கருணை, அருள்
- தை – தைத்திங்கள், அலங்கரி, தையல், மகரராசி, தாளம்
- நா – நாக்கு, திறப்பு, அயலார்
- நி – உறுதி, அருகில், விருப்பம், நிச்சயம், இன்மை
- நீ – முன்னிலைப்பெயர், தீங்கு, விடு
- நு – தோணி, தியானம், ஆயுதம்
நூ – எள், யானை, ஆபரணம் - நே – அன்பு, நேயம், ஈரம்
- நை – வாடு, இரங்கு, தளர்தல், வருந்து
- நொ – துக்கம், இல்லை, நோய், வலி, பலமின்மை
- நௌ – மரக்கலம்
- ப – காற்று, இருபதில் ஒன்று, பின்னம், காற்று, சாபம், குடித்தல்
- பா – பாட்டு, நிழல், அழகு, பாடல், நூல், பரப்பு
- பி – அழகு
- பீ – அச்சம், மலம், தொண்டி
- பூ – மலர், இடம், அழகு, பொலிவு, கூர்மை, பூமி, இலை
- பே – நுரை, மேகம், இல்லை
- பை – பசுமை, பாம்பின் படம், சாக்கு, அழகு, குடற்பை, நிறம்
- போ – போதல், செல்
- ம – காலம், சந்திரன், எமன், பிரமன், விஷ்ணு, சிவன், அசோக மரம்
- மா – மாமரம், வலி, விண்டு, வயல், பெரிய, அழகு, அன்னை, கருமை, அழைப்பு, இலட்சுமி, குதிரை, விலங்கு
- மீ – பெருமை, மேல்புறம், உயர்வு, மேலே, வானம்
- மூ – மூன்று, மூப்பு
- மே – அன்பு, மேம்பாடு, மேன்மை
- மை – குற்றம், மலடி, மேகம், நீர், கருமை, அஞ்சனம், ஆடு
- யா – ஐயம், இல்லை, யாவை, ஒரு மரம், வினா
- வா – வருக
- வி – உறுதி, அறிவு, பிரிவு
- வீ – பூ, பறவை, நீக்கம், சாவு
- வே – வேவு, உளவு, ஒற்று
- வை – கீழே வைத்தல், வைக்கோல், கூர்மை
- வெள – திருடுதல், கொள்ளையிடல், பிடித்தல்
தமிழ் கலைச்சொற்கள் |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |