பா எத்தனை வகைப்படும்? அவை யாவை?
நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய இலக்கணம் குறிப்பில் பா என்பது என்ன பா எத்தனை வகைப்படும்? அவை யாவை? என்பதை பற்றித்தான் பார்க்க போகிறோம். இது போன்ற இலக்கணம் குறிப்புகளை மாணவர்கள் தெரிந்து வைத்துக்கொள்வது மிகவும் சிறந்த ஒரு செயலாகும். ஏனென்று உங்களுக்கு தெரிந்திருக்கும்.
தெரிவுகளில் இதுபோன்ற இலக்கணம் குறிப்புகளை தினந்தோறும் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றன ஆகவே நீங்கள் தினமும் ஒரு இலக்கணம் குறிப்புகளை பற்றி தெரிந்து கொள்வது நல்லது. அந்த வகையில் இந்த பதிவில் பா எதனை வகைப்படும்? அவை யாவை என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
பா எத்தனை வகைப்படும்? அவை யாவை? – Paa Ethanai Vagai Padum
பா நான்கு வகைப்படும் அவை..
- வெண்பா,
- ஆசிரியப்பா,
- கலிப்பா,
- வஞ்சிப்பா.
வெண்பா என்றால் என்ன?
வெண்பா என்பது மரபுச் செய்யுள் வகைகளுள் ஒன்றாகும். தமிழில் மரபுப் பாக்கள், ஒலிப்பியல் அடிப்படையில் அடி, சீர், அசை முதலியவற்றைக் கொண்டு வகை பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பன பரவலாக ஆளப்பட்டுள்ள பழம் பெரும் பாவினங்கள்.
அவற்றுள் வெண்பா என்னும் வகையில் ஒவ்வொரு பாடலும் இரண்டு முதல் பன்னிரண்டு அடிகள் வரை கொண்டிருக்கும். வெண்பாக்களுக்கான யாப்பிலக்கணம் ஒரு கட்டுக்கோப்பான இடம் சாரா இலக்கணம் என்று நிறுவப்பட்டுள்ளது.
வெண்பா எத்தனை வகைப்படும் ? அவை யாவை ?
வெண்பா ஆறு வகைப்படும். அவை
1. குறள் வெண்பா
2. நேரிசை வெண்பா
3 .இன்னிசை வெண்பா
4. பஃறொடைவெண்பா
5. நேரிசைச் சிந்தியல் வெண்பா
6. இன்னிசைச் சிந்தியல் வெண்பா
ஆசிரியர்ப்பா என்றால் என்ன?
ஆசிரியப்பா என்பது, தமிழின் யாப்பியலில் சொல்லப்படும் பாவகைகளுள் ஒன்று. இது அகவலோசையைக் கொண்டு அமைவது. ஆசிரியத்தளை எனப்படும் தளை வகையே இப் பாவுக்கு உரியது. எனினும் வேறு தளைகளும் இடையிடையே வருவது உண்டு.
இவ்வகைப் பாக்கள் மூன்று அடிகள் தொடக்கம் எத்தனை அடிகள் கொண்டதாகவும் இருக்கலாம். அடிகளின் எண்ணிக்கைக்கு மேல் எல்லை கிடையாது. ஆசிரியப்பாவின் அடிகள் நான்கு சீர்களைக் கொண்ட அளவடியாகவோ, மூன்று சீர்கள் கொண்ட சிந்தடியாகவோ, இரண்டு சீர்களைக் கொண்ட குறளடியாகவோ அமையலாம். ஐந்து சீர்களைக் கொண்ட அடிகளும் இடம்பெறலாம். எனினும் முதல் அடியும் இறுதி அடியும் அளவடிகளாக இருத்தல் வேண்டும்.
ஆசிரியப்பாவின் இறுதி அசை ஏ, ஓ, என், ஈ, ஆ, ஆய், அய் என்னும் அசைகளுள் ஒன்றாக இருத்தல் வேண்டும் என்ற விதியும் உண்டு.
ஆசிரியப்பாவின் வகைகள் யாவை ?
ஆசிரியப்பா நான்கு வகைப்படும். அவை
1. நேரிசை ஆசிரியப்பா
2. இணைக்குறள் ஆசிரியப்பா
3. நிலைமண்டில ஆசிரியப்பா
4. அடிமறி மண்டில ஆசிரியப்பா
தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?
கலிப்பா என்றால் என்ன?
கலிப்பா என்பது தமிழில் உள்ள செய்யுள் வகைகளில் ஒன்று ஆகும். இன்று கிடைக்கும் பழந்தமிழ் நூல்களுள் கலித்தொகை மட்டுமே கலிப்பாவினால் ஆன நூல் ஆகும். இதைவிடக் கலம்பகம் எனப்படும் நூல் வகையில் முதற் செய்யுளாகவும் கலிப்பாக்கள் காணப்படுகின்றன.
கலிப்பா துள்ளலோசையை அடிப்படையாகக் கொண்டது. துள்ளலோசை, சீர்களுக்கு இடையே அமையும் கலித்தளையால் விளைவதால், இத்தளையே கலிப்பாவுக்கு உரியது. எனினும் கலிப்பாவில் கலித்தளை மட்டுமே வரவேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது. இதில் கலித்தளையே அதிகமாக இருப்பினும் பிற வகைத் தளைகளும் வரலாம். கலிப்பா பொதுவாக அளவடி எனப்படும் நான்கு சீர்களைக் கொண்ட அடிகளைக் கொண்டிருக்கும்.
கலிப்பாவில் காய்ச்சீர் மட்டும் வரும், நேர்ஈற்று இயற்சீரும் (தேமா, புளிமா), நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீரும் (கூவிளங்கனி, கருவிளங்கனி) ஆகியன வரா.
கலிப்பா எத்தனை வகைப்படும்? அவை யாவை?
கலிப்பா அடிப்படையாக (1) ஒத்தாழிசைக் கலிப்பா (2) வெண்கலிப்பா (3) கொச்சகக் கலிப்பா எனும் மூன்று வகைப்படும். இவை ஒவ்வொன்றுக்கும் உள்வகைகள் உள்ளன. கீழ்க்காணும் அட்டவணையில் அவற்றைக் காணலாம். கலிப்பா, அதில் உள்ள உறுப்புகளின் அடிப்படையில் வகைப்படுத்தப் படுகிறது.
(1) ஒத்தாழிசைக் கலிப்பா:
- ஒத்தாழிசைக் கலிப்பா
- வெண் கலிப்பா
- கொச்சகக் கலிப்பா
(2) வெண்கலிப்பா:
- வெண் கலிப்பா
- கலி வெண்பா
(3) கொச்சகக் கலிப்பா:
- தரவுக் கொச்சகக் கலிப்பா
- தரவிணைக் கொச்சகக் கலிப்பா
- சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா
- பஃறாளிசைக் கொச்சகக் கலிப்பா
- மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா
வஞ்சிப்பா என்றால் என்ன?
வஞ்சிப்பா என்பது தமிழ் யாப்பிலக்கணம் கூறும் பாவகைகளுள் ஒன்று. பாவகைகளுக்கு அடிப்படையான ஓசை வகைகளுள், தூங்கலோசையே வஞ்சிப்பாவுக்கு அடிப்படையாகும். வஞ்சிப்பாவின் அடிகளில் அமையும் சீர்களின் தன்மை மற்றும் அவற்றின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்து வஞ்சிப்பாக்கள் இரு வகையாக உள்ளன. அவை,
வஞ்சிப்பா எதனை வகைப்படும்? அவை யாவை?
- குறளடி வஞ்சிப்பா
- சிந்தடி வஞ்சிப்பா
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |