Paga Pirivinai Sothu in Tamil
அனைவருக்கும் இன்றைய பதிவு பயனுள்ள விஷயத்தை தெரிந்து கொள்ளும் பதிவாக இருக்கும். அப்படி என்ன தெரிந்து கொள்ள போகிறோம் என்று யோசிப்பீர்கள். யோசித்து கொண்டே இந்த பதிவை படிக்க தொடங்குங்கள். நீங்கள் யோசித்ததற்கான காரணம் தெரிந்து விடும். சரி வாங்க நண்பர்களே பாக பிரிவினை செய்த சொத்தை வாங்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம்.
குடும்ப சொத்தில் பெண்களுக்கு பங்கு உண்டா..? |
பாகப்பிரிவினை செய்யப்பட்ட சொத்தை வாங்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை:
ஒரு குடும்பத்தில் 5 பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றால் அவர்களுடைய தந்தையின் சொத்தை பாக பிரிவினை செய்து அதை சம பாகங்களாக பிரித்து எடுத்து கொள்வார்கள். அதாவது பூர்வீக சொத்தாக இருந்தாலும் சரி தான் சம்பாதித்த சொத்தாக இருந்தாலும் சரி அதை சம பாகங்களாக பிரித்து கொடுக்கும் முறையை தான் பாகப்பிரிவினை என்று கூறுகின்றோம்.
நாம் வாங்கும் நிலம் மற்றும் சொத்துக்களில் பாதி சொத்துக்கள் பாக பிரிவினை செய்யப்பட்ட சொத்துக்களாக தான் இருக்கின்றன. சரி நாம் வாங்கும் சொத்து பாகப்பிரிவினை செய்த சொத்தாக இருந்தால் என்ன செய்வீர்கள்.
அப்படி நீங்கள் வாங்கும் சொத்து பாகப்பிரிவினை செய்யப்பட்ட சொத்தாக இருந்தால் அதை வாங்கும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்..!
பாட்டி சொத்து யாருக்கு சொந்தம் உங்களுக்கு தெரியுமா..? |
♦ ஒரு சொத்தை வாங்கும் முன் அந்த சொத்தை விற்றவர் அந்த சொத்திற்கு எந்த வகையில் உரிமை உள்ளவராக இருக்கிறார் என்பதை விசாரிக்க வேண்டும். அதற்கு நீங்கள் வாங்கும் சொத்துக்கான ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். அந்த சொத்து அவருடைய பெயரில் இருக்கிறதா என்றும் அந்த சொத்து அவருடைய பெயருக்கு எப்படி மாற்றப்பட்ட என்ற முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
♦ ஒருவேளை இது பாகப்பிரிவினை செய்யப்பட்ட சொத்தாக இருந்தால் அதற்கான தாய் பத்திரத்தை வாங்கி சரிபார்க்க வேண்டும்.
♦ பாகப்பிரிவினை செய்த சொத்தை வாங்கும் போது, சொத்தை விற்கும் உரிமையாளருக்கு அந்த சொத்தை அனுபவிக்கும் உரிமை மட்டும் இருக்கிறதா..? அல்லது அதை விற்பனை செய்யும் உரிமையும் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டா பெறுவது எப்படி..? |
♦ அதுமட்டுமில்லாமல் அந்த சொத்தை பாகப்பிரிவிப்பினை செய்து கொடுத்தவர் அந்த சொத்தை ரத்து செய்யும் வாய்ப்பு இருக்கிறதா அல்லது இது குறித்து பத்திரத்தில் ஏதும் குறிப்பிட்டுள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
♦ பாகப்பிரிவினை சொத்தை விற்பவர், அந்த சொத்தை அவர் பெயருக்கு மாற்றிவிட்டாரா அல்லது அவர் பெயரில் பட்டா பெற்றிருக்கிறாரா என்பதை பற்றியும் உறுதி செய்ய வேண்டும்.
♦ சில சொத்துக்கள் பாகப்பிரிவினை செய்யப்பட்ட சொத்துக்களாக இருக்கலாம். சில நேரம் அந்த சொத்துக்களை விற்பவரின் பெயரில் பட்டா இருக்காது. அதுபோல இருக்கும் சொத்துக்களை வாங்கினால் அதனால் பல சிக்கல்கள் ஏற்படும். அதனால் பட்டா விற்பவரின் பெயரில் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு பாகப்பிரிவினை சொத்தை வாங்க வேண்டும்.
பட்டா செல்லுமா பத்திரம் செல்லுமா இரண்டில் எது முக்கியம்..? |
பூர்வீக சொத்து என்றால் என்ன..? பூர்வீக சொத்தை பிரிப்பது எப்படி..? |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |