பாஸ்போர்ட் அப்ளை செய்வதற்கு முன் இதை தெரிந்துகொள்ளுங்கள்

Advertisement

Documents Required For Passport Application in Tamil

வணக்கம் நண்பர்களே..! இன்றைய நவீன காலத்தில் நம்முடைய நாட்டை விட்டு வெளி நாட்டில் தங்கி வேலை செய்பவர்கள் அதிகமாக உள்ளனர். அதில் சிலர் இப்போது தான் முதல் முதலாக வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பார்கள். அப்படி நீங்கள் வெளிநாடு செல்வதற்கு முக்கியமான ஒன்று பாஸ்போர்ட். இந்த பாஸ்போர்டை நீங்கள் Online மூலம் அப்ளை செய்யலாம். அத்தகைய பாஸ்ப்போர்ட்டை நீங்கள் Online-ல் அப்ளை செய்வதற்கு என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்பதை இன்றைய பதிவின் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்⇒ Passport online-யில் அப்ளை செய்வது எப்படி? | How to apply passport online in tamil..!

பாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள்:

நீங்கள் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போகும் போது சரியான ஆவணங்களை எடுத்து செல்லவில்லை என்றால் உங்களை அலைய விடுவார்கள். அதனால் சரியான ஆவணங்கள் என்னென்ன என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இருப்பிட சான்றிதழ்:

  • குடும்ப அட்டை
  • பான் கார்டு
  • ஓட்டு உரிமை அட்டை
  • உங்களுடைய தற்போதைய Bank Passbook
  • உங்களின் Phone Receipt
  • உங்கள் பெயரில் உள்ள Gas Connection Receipt 

மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்களில் ஏதேனும் இரண்டு இருந்தால் போதும் பாஸ்போர்ட் அப்ளை செய்வதற்கு.

பிறப்பு சான்றிதழ்:

  • பள்ளியில் படித்த Transfer Certificate
  • 26.01.89 என்ற தேதிலையோ அல்லது இந்த தேதிக்கு பிறகோ நீங்கள் பிறந்து இருந்தால் நகராட்சியில் வழங்கப்ட்ட பிறப்பு சான்றிதழ் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
  • உங்களின் பிறப்பு சான்றிதழை அரசாங்கத்தில் உள்ள நோட்டரி பப்ளிக் அதிகாரியிடம் கையெழுத்து வாங்கினால் அந்த சான்றிதழ் ஒப்புக்கொள்ளப்படும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒன்று கட்டாயமாக பாஸ்போர்ட் அப்ளை செய்வதற்கு இருக்க வேண்டும்.

பாஸ்ப்போர்ட்டில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை:

உங்களுடைய பாஸ்ப்போர்ட்டிற்கு குறிப்பிட்ட தொகை செலுத்தி அதனை Renew செய்து கொள்ளலாம்.

உங்களுக்கு அவசரமாக பாஸ்போர்ட் வேண்டும் என்றால் தக்கல் முறையில் கட்டணத்தை செலுத்தி பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ளும் சிறப்பு அம்சம் இருக்கிறது.

உங்களின் பாஸ்போர்ட் Expired தேதி முடிந்த பிறகு காணாமல் போனாலோ அல்லது சேதம் அடைந்தாலோ அதற்கான கட்டணத்தை செலுத்தி நீங்கள் மீண்டும்  பெற்றுக்கொள்ளலாம்.

அதேபோல் உங்களின் பாஸ்போர்ட் Expired தேதி முடிவடைதற்குள் காணாமல் போனாலோ அல்லது சேதம் அடைந்தாலோ அதற்கான கட்டணத்தை செலுத்தி புதிய பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

நீங்கள் முதல் முதலில் வாங்கிய பாஸ்ப்போர்ட்டை 9 வருடம் வரை பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement