PDF Meaning in Tamil..!
ஹாய் பிரண்ட்ஸ் இந்த பதிவில் PDF என்றால் என்ன? PDF என்பதன் தமிழ் அர்த்தம் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். இது போன்ற விஷயங்களை தெரிந்து வைத்துக்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏதாவது பொது அறிவு சார்ந்த தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
PDF Meaning in Tamil – PDF என்பதன் தமிழ் பொருள்..!
- ஆங்கில விரிவாக்கம்: Portable Document Format
- தமிழ் விரிவாக்கம்: கையடக்க ஆவண வடிவமைப்பு
PDF என்றால் என்ன? – Portable document format meaning in tamil
கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) என்பது ஆவண பரிமாற்றத்துக்காக 1993-யில் அடோப் சிஸ்டம்ஸ் உருவாக்கிய ஒரு கோப்பு வடிவமைப்பு ஆகும். PDF ஆனது பயன்பாட்டு மென்பொருள், வன்பொருள் மற்றும் இயக்க முறைமை ஆகியவற்றைச் சார்ந்திராத விதத்தில் இரு-பரிமாண ஆவணங்களைக் குறிப்பிட பயன்படுத்தப்படும். ஆவணங்களை உருவாக்கும் உரை, எழுத்துருக்கள், படங்கள், மற்றும் 2D வெக்டர் கிராஃபிக்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கும் நிலையான-தளவமைப்பு 2D ஆவணத்தின் முழுமையான விளக்கம் ஒவ்வொரு PDF கோப்பிலும் இருக்கிறது. சமீபத்தில், U3D அல்லது PRC மற்றும் பல்வேறு பிற தரவு வடிவமைப்புகளைப் பயன்படுத்தி அக்ரோபேட் 3D உடனான PDF ஆவணங்களில் 3D வரைபொருள்களை உட்பொதிக்கலாம்.
அடோப் சிஸ்டம்ஸ் துணை நிறுவநரான ஜான் வார்னாக் “கேம்லாட்” எனப்படும் ஒரு முறையை திட்டவரைவிட்டார், அதுவே கையடக்க ஆவண வடிவமைப்பு (PDF) கோப்பு வடிவமைப்பாக பின்னர் வெளிப்பட்டது.
PDF என்பதற்கு மேலும் சில விரிவாக்கங்கள் (pdf full form in computer):
- PDF – Powder Diffraction File
- PDF – Pair Distribution Function
- PDF – Planar Deformation Feature
- PDF – Probability Density Function
- PDF – Probability-distribution Function
- PDF – Portable Document Format
- PDF – Portable Document Format
- PDF – Pocket Dosimeter FEMA
- PDF – Probability Density Functions
24/7 Meaning in Tamil |
Vlog Meaning in Tamil |
Vocabulary Meaning in Tamil |
Till Meaning in Tamil |
To Meaning in Tamil |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |