பீப்பல் மரம்னா என்ன மரமுன்னு தெரியுமா.?

peepal tree in tamil name

பீப்பல் மரம்

செடிகள் வளர்ப்பது பல நபர்களுக்கு பிடித்தமான விஷயம். பூச்செடிகள் இல்லாத வீடுகளே பார்க்க முடியாது. நாம் ஒவ்வொரு பூச்செடிக்கும் உள்ள தமிழ் பெயர் தெரிந்திருக்கும், அதற்கு ஆங்கில பெயர் தெரிந்திருக்காது. சில மரங்களின் பெயர்கள் ஆங்கிலத்திலும் தெரிந்திருக்கும், தமிழும் தெரிந்திருக்கும். இந்த பதிவில் PEPPAL Tree என்பதற்கான தமிழ் பெயரையும்  பற்றியும் தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

Peepal Tree in Tamil Name:

Peepal Tree என்பதற்கான தமிழ் பெயர் அரசமரம். 

அரசமரம் பற்றிய தகவல்:

பீப்பல் மரம்

அரசமரம் இந்தியாவில் ஒரு பெரிய கலாச்சார, வரலாற்று மற்றும் மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த மரமாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதன் ஆன்மீக சக்தி மற்றும் மருத்துவ குணங்களுக்காக இது போற்றப்படுகிறது. பல்வேறு நிலைகளில் வளரும் அதன் திறன் மற்றும் அதன் நீண்ட ஆயுட்காலம் நீண்ட ஆயுளுக்கும் செழுமைக்கும் சின்னமாக அமைகிறது. அரசமரம் இந்திய கலாச்சாரம் மற்றும் புராணங்களின் ஒரு முக்கிய பகுதியாகும், இன்றும் சமூகத்தில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது.

இந்த மரமானது பிரம்மா, விஷ்ணு, சிவன் போன்ற கடவுளின் உருவமாக பார்க்கப்படுகிறது. மரத்தின் வேர்கள் பிரம்மாவையும், தண்டு விஷ்ணுவையும், கிளைகள் சிவனையும் குறிப்பதாக புராணங்கள் கூறுகின்றன.

மாமரம், வாழைமரம் போன்ற மரங்களை அரசு ரோட்டில் நாடாமல் இருக்க காரணம் என்ன தெரியுமா..?

அரசமரம் பிரம்மாவால் உருவாக்கப்பட்டதால் புனிதமான மரமாக கருதப்படுகிறது. இதனை போதி மரம் என்றும், அறிவின் மரம் என்றும் அழைப்பார்கள்.

அரசமரத்தை நீண்ட ஆயுள், செழிப்பு மற்றும் அறிவின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

அரசமரத்தின் சிறப்புகள்:

அரசமரம் பல்வேறு நிலைகளில் வாழ கூடிய மரமாகும். இவை ஈரப்பதமான கால நிலையை விரும்ப கூடியது. பல்வேறு வகையான மண் வகைகளிலும் வளர கூடியது.

இந்த மரமானது 20 மீட்டர் வளர கூடிய மரமாக இருக்கிறது. இதன் இலைகள் இதய வடிவையும் நீண்ட குறுகலான முனையுடன் காணப்படும். மரத்தின் பட்டையானது வெளிர் சாம்பல் நிறத்தில் இருக்கும். இதை மரத்தில் காய்க்க கூடிய பழமானது பச்சை நிறத்தில் காட்சியளிக்கும், பழுத்த பிறகு ஊதா நிறமாக மாறும்.

பூர்வீக சொத்து என்றால் என்ன..? பூர்வீக சொத்தை பிரிப்பது எப்படி..?

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil