Personality Development Tips in Tamil
வணக்கம் நண்பர்களே..🙏நாம் மற்றவர்களுடன் பொதுவாக பேசும் போது நமது பேச்சுக்களில் உள்ள வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் மற்றும் தெளிவு சேர்க்க நமது உடல் ஒரு கருவியாக. அந்த வகையில் நமது ஆளுமை தன்மையை அறிய பலவகையான பல வழிகள் உள்ளது. அந்த வகையில் இத்தகைய சைகைகளை வெளிப்படுத்தினால் அது உங்கள் ஆளுமையை பாதிக்கலாம். ஆகவே அத்தகைய உடல் சைகைகளை எப்பொழுதும் வெளிப்படுத்தாதீர்கள். அது என்ன சைகை என்று யோசிக்கிறீங்களா.. அதை தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
முதுகுக்குப் பின்னால் கைகளைக் கட்டுவது:
Personality Development Tips in Tamil – நீங்கள் மற்றவர்களுடன் பேசும்போது உங்கள் கைகளை மேல் படத்தில் காட்டியுள்ளது போல் முதுகுக்கு பின்னால் கைகளை கட்டிக்கொண்டீர்கள் என்றால், அவர்களிடம் மிகவும் துணிச்சலாக பேசுவீர்கள் என்று அர்த்தம். குறிப்பாக அவர்கள் சொல்லவருவதை நீங்கள் முழுமையாக கேட்கவில்லை என்று அர்த்தமாகும். பேசும் போது உங்கள் முதுகுக்குப் பின்னால் கைகளை கட்டிக்கொண்டீர்கள் என்றால் அவர்கள் பற்றி உங்களுக்கு உறுதியாக தெரியவில்லை என்றும், குறிப்பாக அவர்களிடம் ஏதோ ஓரு விஷயத்தை மறைக்கிறீகள் என்று அர்த்தமாகும். அதேபோல் உங்களுக்கு ஏதோ ஒருவகையான பதட்டம் உள்ளது என்பதையும் இந்த சைகை உணர்த்துகிறது. ஆகவே இனிமேல் முதுக்கு பின்னல் கைகளை கட்டுவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
உங்கள் முகத்தைத் தொடுவது:
மேல் படத்தில் உள்ளது போல் உள்ள சைகை நீங்கள் நினைக்கும் விஷயங்களையோ அல்லது பேசுபவர்கள் மீது ஒரு வித கெட்ட அபிப்பிராயத்தை ஏற்படுத்தலாம். ஆகவே மற்றவர்களிடம பேசும்போது இந்த உடல் சைகையை முற்றிலும் தவிர்க்கவும். மேலும் இந்த உடல் சைகை பதட்டம், கட்டுப்பாடு இல்லாமை மற்றும் நம்பிக்கையின்மை போன்ற அறிகுறிகளுக்கு சமமாகும். ஒருவருடன் பேசும் போது முகத்தில் கைகளை வைத்தீர்கள் என்றால் நீங்கள் வேறு ஏதோ ஒரு விஷயத்தை பற்றி யோசித்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தமாகும். ஆகவே இந்த உடல் சைகையையும் மற்றவர்களிடம் பேசும்போது முற்றிலும் தவிர்ப்பது மிகவும் நல்லது.
கைப்பிடித்தல் அல்லது பின்னிப் பிணைந்த விரல்கள்:
Personality Development Tips in Tamil – பலர் தங்கள் கைகளை அல்லது பின்னிப் பிணைந்த விரல்களைப் பற்றிக்கொள்வது ஒரு சக்தி வாய்ந்த மற்றும் அதிகாரப்பூர்வ தோற்றத்தை அளிக்கிறது என்று நினைக்கலாம், அது அதற்கு முற்றிலும் தவறு. இத்தகைய உடல் சைகை நீங்கள் மிகவும் பதற்றம் அல்லது பயம் அல்லது தயக்கம் அல்லது நம்பிக்கை இன்மை அல்லது மன அழுத்தம் போன்ற செயல்களை குறிப்பதற்கான செயலாகும். ஆகவே இத்தகைய உடல் சைகையை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
இதையும் படியுங்கள்⇒ உங்கள் Blood Group-ஐ வைத்து உங்கள் குணத்தை அறியலாம்..!
யாரோ/ எதையோ நோக்கி விரல் காட்டுதல்:
நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது நோக்கி விரலைக் காட்டிக் கொண்டிருந்தால், அவர்கள் மீது மோசமான அபிப்பிராயத்தை நீங்கள் வெளிப்படுத்துவது உணர்த்துகிறது. ஆனால் இந்த செயலை பலர் சுட்டி விரலை பலர் தங்கள் கூற்றை வலியுறுத்த அல்லது எதையாவது சுட்டிக்காட்ட பயன்படுத்தலாம். இருப்பினும், இது ஒரு நல்ல சைகை அல்ல, ஏனெனில் இது முரட்டுத்தனமாகவும் ஆக்ரோஷமாகவும் இருக்கிறது. இருப்பினும் இந்த சைகையை தேவையில்லாத விஷத்திற்கு பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பது உங்கள் ஆளுமையை நல்லபடியாக பேணிக்காப்பதற்கு உதவும்.
இவற்றையும் கிளிக் செய்து படிக்கவும் 👉 மூக்கின் வடிவத்தை வைத்து நாம் எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்ளலாம்..!
நிற்கும் போது கால்களைக் கட்டுவது:
Personality Development Tips in Tamil – நீங்கள் யாரிடமாவது பேசும்போது உங்கள் கால்களைக் மேல் படத்தில் உள்ளது போல் காட்டுகிறீர்கள் என்றால் அது மற்றவர்களுக்கு மரியாதையை அளிக்காத ஒரு உணர்வை ஏற்படுத்திவிடும். நீங்கள் மற்றவர்கள் கூறும் செயல்களுக்கு பின் வாங்குவதற்கான அர்த்தமாகும். ஆகவே இந்த உடல் சைகையும் முற்றிலும் தவிர்ப்பது மிகவும் நல்லதாகும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |