Pinto Beans in Tamil
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவை முழுதாக படித்து முடிக்கும் பொழுது ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்ட மனத்திருப்தி உங்களுக்கு கிடைக்கும். அப்படி என்ன பயனுள்ள தகவல் என்று நீங்கள் சிந்தனை செய்வது புரிகின்றது. அது என்ன தகவல் என்றால் பைன் பீன்ஸ் அல்லது பின்டோ பீன்ஸ் பற்றிய தகவல்கள் தான். நம்மில் பலரும் இந்த பைன் பீன்ஸை அல்லது பின்டோ பீன்ஸை சாப்பிட்டிருப்போம். ஆனால் நம்மில் சிலர் இந்த பைன் பீன்ஸை சாப்பிட்டிருக்கவே மாட்டோம். அதனால் இதனை பற்றிய முழு விவரங்களும் நமக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. அதாவது அதன் பிறப்பிடம், அதன் பிறபெயர்கள், பயன்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் போன்ற தகவல்கள் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. அப்படி உங்களுக்கு பைன் பீன்ஸ் அல்லது பின்டோ பீன்ஸ் பற்றி இவை அனைத்தும் தெரிந்திருந்தால் மகிழ்ச்சி, மாறாக தெரியவில்லை என்றால் இன்றைய பதிவை முழுதாக படித்து இவை அனைத்தையும் அறிந்து கொண்டு பயன் பெறுங்கள். சரி நண்பர்களே பதிவினுள் செல்லலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Pinto Beans Information in Tamil:
பைன் பீன்ஸ் அல்லது பின்டோ பீன்ஸ் என்பது பருப்பு வகை அல்லது பீன் வகையை சேர்ந்த ஒரு கொடி தாவரம் ஆகும். இதன் உயரம் தோராயமாக 15-125 செ.மீ வரை இருக்கும். இதில் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம் இணைந்த ஒரு நிறத்தில் காய்கள் காய்க்கும்.
இதனை வர்ணம் பூசப்பட்ட பீன் எனவும் அழைப்பார்கள். மேலும் இது பெரும்பாலும் முழுதாக வே கவைத்து உண்ணப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் இது குழம்புகளாகவும் தயாரித்து உண்ணப்படுகிறது. இதில் அதிக அளவு மாவுச்சத்து நிறைந்துள்ளது.
பாசிப்பயரை சாப்பாட்டில் சேர்த்து கொள்வதற்கு முன்பு அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
பிறப்பிடம்:
பைன் பீன்ஸ் அல்லது பின்டோ பீன்ஸின் பிறப்பிடம் சரியாக தெரியவில்லை. ஆனால் இது கி.மு 3000 முதல் பிரேசிலில் பயிரிடப்படுகிறது என்று சில வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.
ஆனால் இது வடக்கு ஸ்பெயின், வடக்கு மெக்சிகோ மற்றும் தென்மேற்கு அமெரிக்காவில் இது உற்பத்தியில் மிகவும் பிரபலமான பீன் ஆகும். அதாவது இந்த இடங்களில் எல்லாம் இந்த பீன் அதிக அளவு பயிரிடப்படுகிறது.
வேறுபெயர்கள்:
இந்த பின்டோ பீன்ஸை ஸ்பானிஷ் மொழியில் ஃப்ரிஜோல்ஸ் பின்டோஸ் (Frijoles Pintos) என்றும், தென் அமெரிக்காவில் பொரோட்டோ ஃப்ருட்டிலா (Poroto Frutilla) என்றும், போர்த்துகீசிய மொழியில் ஃபீஜாவோ கரியோகா (Feijão Carioca) என்றும் அழைக்கப்படுகிறது.
Broccoli-யை சாப்பிடுவதற்கு முன்னால் இதனை தெரிந்து கொள்ளுங்கள்
வகைகள்:
பின்டோ பீன்களில் பல்வேறு வகைகள் உள்ளன. அதில் முக்கியமான சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
பர்க், ஹிடாட்சா, ஓதெல்லோ மற்றும் அலுபியா பிண்டா அலவேசா அல்லது அலவேஸ் பிண்டோ பீன் ஆகியவை தான் சில பின்டோ பீன் வகைகள் ஆகும். இதில் சில வகை வடக்கு ஸ்பெயினில் இருந்து உருவானவை ஆகும்.
ஊட்டச்சத்துக்கள்:
100 கிராம் பிண்டோ பீன்களில் ஊட்டச்சத்து மதிப்பு:
- ஆற்றல் – 598 kJ (143 kcal)
- கார்போஹைட்ரேட்டுகள் – 26.22
- சர்க்கரைகள்- 0.34
- நார்ச்சத்து உணவு – 9.0
- கொழுப்பு – 0.65
- புரதம் – 9.01
- கால்சியம் – 46 மி.கி
- இரும்பு 2.09 – மி.கி
- வெளிமம் – 50 மி.கி
- மாங்கனீசு – 0.453 மி.கி
- பாஸ்பரஸ் – 147 மி.கி
- பொட்டாசியம் – 436 மி.கி
- துத்தநாகம் – 0.98 மி.கி
டிராகன் பழத்தை சாப்பிடுவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
பயன்கள்:
இது உடலின் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து கொள்ள உதவுகிறது.
இந்த பீன் இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.
உடல் எடை குறைக்க உதவுகிறது.
இதில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் சரியான அளவில் உள்ளதால் இது உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |