தபால் அலுவலக மாத வருமான திட்டம் | post office monthly income scheme
அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டம் (Post office monthly income scheme in tamil) :-
அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டம்: நாடு முழுவதும் 1.5 லட்சத்துக்கு மேற்பட்ட தபால் நிலையங்களை இந்தியா போஸ்ட் கொண்டுள்ளது. பல்வேறு வகையான நிதி சேவைகளை வழங்கி வருகிறது. அஞ்சல் துறை பல்வேறு வட்டி விகிதங்களுடன் பல சேமிப்பு திட்டங்களை வழங்குகிறது. இந்திய தபால் துறை வழங்கும் மாத வருமான திட்டக் கணக்குகள் குறித்த தகவல்களை அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான indiapost.gov.in-யில் தெரிவித்துள்ளது. தபால் அலுவலக மாத வருமான திட்டக் கணக்கை தனி நபர்களால் காசோலை அல்லது குறிப்பிடப்பட்ட பணத்தை செலுத்தி கணக்கை திறக்க முடியும்.
தபால் அலுவலகம் MIS-யில் ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்கிறார் மற்றும் உறுதி செய்யப்பட்ட மாத வருமானத்தை வட்டி வடிவத்தில் பெறுகிறார். இந்தத் திட்டத்தின் கீழ், மாதாந்திர அடிப்படையில் செலுத்த வேண்டிய வட்டி (வைப்புத் தேதியிலிருந்து தொடங்கி) உங்கள் தபால் அலுவலக சேமிப்புக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. தபால் அலுவலகம் MIS கணக்கில் தற்போதைய வட்டி விகிதம் 6.6% p.a. செலுத்த வேண்டிய மாதாந்திரம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கு வருமான வரி சலுகைகள் எதுவும் இல்லை. தபால் அலுவலக மாத வருமான திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். இருப்பினும், கணக்கு 1 வருடம் முதல் 3 ஆண்டுகள் வரை மூடப்பட்டால் 2% கழித்தல் தொகை வசூலிக்கப்படும். மேலும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 1 சதவீதம் கழிக்கப்படும்.
பொன் மகன் சேமிப்பு திட்டம் |
அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டம் கணக்கு:
இந்த அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டம் படி (Post office monthly income scheme) Account open செய்ய விரும்பும் பெற்றோர்கள் அருகில் இருக்கும் தபால் நிலையங்களில் Account open செய்யலாம்.
குறிப்பாக இந்த அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டம் (Post office monthly income scheme ) படி Account open செய்த பிறகு, தமிழ்நாடு அல்லது இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் Account-ஐ Transfer செய்து கொள்ளலாம்.
அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டம் – வட்டி விகிதங்கள்:
Post office monthly income scheme – தபால் அலுவலகம் மாத வருமானத் திட்டத்திற்கு 7.6% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இருப்பினும் ஆண்டிற்கு ஆண்டு வட்டி விகிதம் என்பது மாறுபடும். எனவே தபால் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும்.
அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டம் – தொகை:
post office monthly income scheme in tamil – மாத வருமானக் கணக்கை அமைக்கத் தேவையான குறைந்த பட்ச தொகை 1,500. அதிகபட்ச முதலீட்டு வரம்பு 4.5 லட்சம். கூட்டு கணக்கு (joint account) என்றால் 9 லட்சம் என்று இந்தியா தபால் துறை அறிவித்துள்ளது.
அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டம் முன்கூட்டியே திரும்ப பெறுதல்:
Post office monthly income scheme – கணக்கு திறந்து ஒரு வருடம் கழித்து பணத்தை காசோலையாக மாற்ற முடியும். மூன்று வருடத்திற்கு முன்பு கணக்கை முடித்து முதலீடு செய்த பணத்தை எடுக்க வேண்டினால் 2% வட்டி பிடித்து வைத்துக் கொடுக்கப்படும்.
செல்வமகள் சேமிப்பு திட்டம் விதிமுறை..! |
அஞ்சலக மாதாந்திர வருமானத் திட்டம் – கணக்குகளின் எண்ணிக்கை:
Post office monthly income scheme – மாத வருமானத் திட்டக் கணக்கை ஒரு தபால் நிலையத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றலாம். முதலீட்டாளர்கள் எந்தவொரு தபால் நிலையத்திலும் அதிகபட்ச முதலீட்டு வரம்புக்கு உட்பட்டு கணக்குகளை திறக்க முடியும் என்று இந்திய போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.
அஞ்சலக மாதாந்திர வருமானத் திட்டம் – பிற வசதிகள்:
Post office monthly income scheme – மாத வருமானத் திட்டக் கணக்கை திறக்கும் நேரத்தில் நாமினி யார் என்பதை குறிப்பிடலாம். அதை முறையாக மாற்றவும் செய்யலாம்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |