Property Rights Of Women in Tamil
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவாக இன்றைய பதிவு இருக்கும். அப்படி என்ன பதிவு என்று யோசிப்பீர்கள். யோசித்து கொண்டே இந்த பதிவை படிக்கலாம் வாங்க. குடும்ப சொத்தில் பெண்களுக்கு உரிமை உண்டா..? இது உங்களுக்கு தெரியுமா..? அந்த வகையில் இன்று குடும்ப சொத்தில் பெண்களுக்கு பங்கு உண்டா என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம். வாங்க நண்பர்களே பதிவினுள் செல்வோம்.
பாட்டி சொத்து யாருக்கு சொந்தம் உங்களுக்கு தெரியுமா..? |
குடும்ப சொத்தில் பெண்களுக்கு பங்கு உண்டா..?
ஆண்களைப் போல பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால் பெண்களுக்கு எப்போதெல்லாம் சொத்து கிடைக்கும் என்று தெரியவில்லை. அதுபோல பெண்களுக்கு என்னென்ன உரிமை இருக்கிறது என்றும் தெரியவில்லை.
பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என்று இந்து வாரிசுச் சட்டம் சொல்கிறது. இந்த சட்டம் கொண்டு வருவதற்கு முன் ‘இந்து பெண்கள் சொத்து சட்டம்’ என்று ஒரு சட்டம் இருந்தது.
இந்து பெண்கள் சொத்து சட்டத்தின் மூலம் பெண்களுக்கு பிறந்த வீட்டு சொத்தில் எவ்வித உரிமையும் கிடையாது. பிறந்த வீட்டிலிருந்து கொடுக்கப்பட்ட சீதனம் மட்டுமே பெண்களுக்கான சொத்தாக கருதப்பட்டு வந்தது.
கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டா பெறுவது எப்படி..? |
அதன் பிறகு அரசு 1956 ஆம் ஆண்டு ஜூலை 4 -ம் தேதி நிறைவேற்றப்பட்ட “இந்து வாரிசுச் சட்டம்” கொண்டுவந்தது. இந்த சட்டம் குடும்ப சொத்தில் பெண்களுக்கு பங்கு உண்டு என்று கூறியது .
உதாரணத்திற்கு ஒரு குடும்பத்தில் கணவர் மனைவி, 2 மகன்கள், மற்றும் 3 மகள்கள் இருக்கிறார்கள். அந்த நிலையில் கணவர் இறக்கும் பட்சத்தில் அவரது சொத்துக்கள் மனைவி, மகன்கள் மற்றும் மகள்களுக்கு சம பங்குகளாக கிடைக்க வேண்டும். இதில் அனைவருக்கும் சமஉரிமை உண்டு என்று இந்து வாரிசுச் சட்டம் சொல்கிறது.
முந்தைய நேரத்தில் பெண்கள் தனது தந்தை வசித்து வந்த சொந்த வீட்டில் பங்கு கேட்கும் உரிமை இல்லாமல் இருந்தது. ஆனால், 2005 -ல் வந்த சட்டத் திருத்தத்தின்படி பெண்களுக்கு தனது தந்தையின் வீட்டில் அவர் காலத்திற்குப் பிறகு பங்கு கேட்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 1956, 1989, 2005 மற்றும் 2020 ஆம் ஆண்டு வந்த சட்டத்தின் அடிப்படையில் மகன்கள் போலவே பெண்களுக்கு சொத்து கேட்கும் உரிமையும் சொத்தில் பங்கும் உண்டு என்று சொல்லப்படுகிறது.
பட்டா செல்லுமா பத்திரம் செல்லுமா இரண்டில் எது முக்கியம்..? |
பூர்வீக சொத்து என்றால் என்ன..? பூர்வீக சொத்தை பிரிப்பது எப்படி..? |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |