“புலி பசித்தாலும் புல்லை தின்னாது” என்று சொல்ல காரணம் என்ன உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Puli Pasithalum Pullai Thinnathu Vilakkam Tamil | புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது விளக்கம்

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான தகவலை பற்றி தான் கூறப் போகிறோம். அதனால் இந்த பதிவு படிப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நம் தமிழ் மொழியில் எத்தனையோ அருமையான பழமொழிகள் இருக்கின்றன. ஆனால் அந்த பழமொழிகளுக்கெல்லாம் பின்னால் ஒளிந்திருக்கும் அர்த்தம் இன்றும் பல பேருக்கு தெரிவதில்லை. அந்த வகையில் இன்று நாம் புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்று சொல்வதற்கு பின்னால் இருக்கும் அர்த்தம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்ற பழமொழியை நாம் அனைவருமே பல இடங்களில் அறிந்து இருப்போம். ஆனால், அதற்கான உண்மையான அர்த்தம் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துக்கொள்ளும் வகையில் இப்பதிவு அமையும்.

‘கன்னத்தில் கை வைக்காதே’ என்று சொல்வதற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா..?

‘புலி பசித்தாலும் புல்லை தின்னாது’ விளக்கம் | Puli Pasithalum Pullai Thinnadhu Meaning in Tamil

Puli Pasithalum Pullai Thinnathu

நம் தமிழ் மொழியில் இருக்கும் பழமொழிகளில் இந்த பழமொழியும் ஓன்று. பெரும்பாலும், கிராம பகுதியில் வசிக்கும் மக்கள் பழமொழிகளை இன்றளவிலும் கூறி வருகிறார்கள்.

அதுபோல புலி பசித்தாலும் புல்லை தின்னாது” என்ற பழமொழியை நாம் சிறு வயதிலிருந்தே கேட்டு வருகிறோம். ஆனால் இந்த பழமொழிக்கு பின் இருக்கும் அர்த்தம் இன்றும் சிலருக்கு தெரியவில்லை. அவ்வாறு அதற்கான அர்த்தத்தை பற்றி இங்கு பார்ப்போம்.

 பொதுவாக சிங்கம், நரி, நாய், பூனை, பன்றி போன்ற ஒரு சில விலங்குகள் குட்டி போடும் போது, குட்டி ஈன்ற வலி மற்றும் அதிக பசியின் காரணமாக தான் ஈன்ற சில குட்டிகளை தானே சாப்பிடும். இந்த விஷயம் நம்மில் சிலருக்கு தெரியும். 

இதுபோன்ற செயல்களை நாம் வளர்க்கும் நாய் மற்றும் பூனை போன்ற விலங்குகள் இன்றளவிலும் செய்து வருகின்றன.

ஆனால் புலி இந்த விலங்குகளுடன் ஒப்பிடும் போது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கின்றது.  அதாவது, புலியானது குட்டி போடும் போது எவ்வளவு கடுமையான பசி இருந்தாலும் புலி தான் ஈன்ற குட்டிகளை உண்பதில்லை.  

இதை தான் அந்த காலத்தில் புலிக்கு எவ்வளவு தான் பசி எடுத்தாலும் அது பிள்ளையை தின்னாது என்று கூறினார்கள். அதாவது, “புலி பசித்தாலும் பிள்ளையை தின்னாது” என்று கூறினர்.

Puli Pasithalum Pullai Thinnadhu Meaning

இந்த சொல்லானது காலபோக்கில் “புலி பசித்தாலும் புல்லை தின்னாது”  என்று மாறிவிட்டது. இந்த பழமொழியை தான் நாம் இன்று கூறிக் கொண்டிருக்கிறோம்.

 எவ்வளவு பசி இருந்தாலும், புலி புல்லை தின்னாது. அதுபோல, ஒருவன் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், தன் தகுதியிலிருந்து இறங்க மாட்டான்.  

இதுவே, இந்த பழமொழிக்கு பின் இருக்கும் அர்த்தம் என்று சொல்லலாம்.

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று சொல்ல காரணம் என்ன..?

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement