Ration Card Apply Documents in Tamil
இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே ரேஷன் கார்டை தவறுதலாக தொலைத்து விட்டீர்களா..? பதற்றம் வேண்டாம். நீங்கள் மறுபடியும் புதிய ரேஷன் அட்டையை பெற்று கொள்ள முடியும். ஆம் நண்பர்களே ஆனால் அதனை பெற வேண்டும் என்றால் சில முக்கியமான ஆவணங்கள் தேவைப்படும்.
அதனை பற்றி தான் இன்றைய பதிவில் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து புதிய ரேஷன் கார்டு வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் என்று அறிந்து கொள்ளுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> புதிதாக திருமணம் ஆனவர்கள் ரேஷன் கார்டு வாங்குவதற்கு முன்பு கவனிக்க வேண்டியது
New Ration Card Apply Required Documents in Tamil:
இன்றைய காலகட்டத்தில் ரேசன் கார்டு என்பது மிக மிக முக்கியமான ஆவணம். அதிலும் தமிழகத்தில் மாநில அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் பெற ரேஷன் கார்டு கட்டாயம் இருக்க வேண்டும்.
இப்போது ஸ்மார்ட் கார்டாக அதன் வடிவம் மாறிவிட்டது. அதை பெறுவதும் எளிமை தான். இப்பொழுது அதனை பெற தேவையான ஆவணங்களை பற்றி பார்க்கலாம்.
- பழைய PDS புத்தகத்தின் நகல், குடும்பத் தலைவரின் புகைப்படம் மற்றும் வசிப்பிடச் சான்று தேவைப்படும்
- வசிப்பிடத்திற்கான ஏற்றுக்கொள்ளப்பட்ட சான்று தேவைப்படும்
- ஆதார் அட்டை
- கடவுச்சீட்டு
- சொந்த வீடு என்றால் சொத்து வரி செலுத்தியதற்கான சான்று
- குத்தகைதாரர்களுக்கான வாடகை ஒப்பந்தம்
- குடிசை அகற்றும் வாரியம் ஒதுக்கீடு உத்தரவு
- தொலைபேசி பில்
- வங்கி பாஸ்புக்கின் முதல் பக்கம் நகல்
- தொலைபேசி கட்டணம் செலுத்திய ரசீது
- எரிவாயு நுகர்வோர் பில்
- மின் ரசீது
- வாக்காளர் அடையாள அட்டை
ஆகியவை புதிய ரேஷன் கார்டு பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் ஆகும்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> தொலைந்து போன ஸ்மார்ட் கார்டு ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information In Tamil |